Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்

Go down

சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர் Empty சனி தோஷம் போக்கும் கருப்பனீஸ்வரர்

Post by oviya Sun Dec 07, 2014 10:35 am

கயிலையில் ஒரு சமயம் ஈசனின் தாண்டவத்தை தரிசித்த பார்வதி, ‘‘உமது படைப்புகளிலே மேலான இடம் எது? மேலான உயிரினம் எது?’’ என்று ஈசனிடம் கேட்டாள். அனைத்தும் அறிந்தவளாக இருந்தும் தேவி இக் கேள்வியை ஏதோ உள்நோக்குடன்தான் கேட்கிறாள் என்பதை அறிந்தார் ஈசன். உடனே அங்கிருந்த அனைவருக்கும் விளங்கும்படி, ‘‘நான் படைத்த பலகோடி அண்டங்களில் பூலோகமே சிறந்தது. அதிலும் பாரதமும் சைவம் தழைத்திருக்கும் தென்னாடுமே சிறந்தவை. ஏனெனில் யாம் அப்பகுதியில்தான் அர்ச்சாவதாரமாக பல்வேறு தலங்களில் அருளாட்சி புரிகிறோம். உயிரி னங்களில் மனிதகுலமே பெரும் பாக்கியம் பெற்றது. என்னை நினைக்க நெஞ்சமும் வாழ்த்த வாயும் தாழ்த்தி வணங்க சிரத்தையும் தந்துள்ளேன்.

தங்களது கண்களால் என்னை தரிசிக்கவும் கரங்களால் ஆலய உழவாரப்பணி செய்யவும் நாவினால் நமசிவாய எனும் ஐந்தெழுத்தையும் ஓதி என்னை வணங்கும் அடியார்க்கு பிறவித் தளையை விடுவிப்பேன்’’ என திருவாய் மலர்ந்தருளினார். அப்போது அங்கிருந்த நந்தியம்பெருமான் அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். பின்னொரு சமயம் அவரே மாணிக்கவாசகராக பூமியில் அவதாரம் செய்தார். அப்போது ஈசன் அருளிய உபதேசங்களை தன் திருவாசகத் தேனில் எடுத்துரைத்தார். மீண்டும் பார்வதிதேவி ஈசனிடம், ‘‘எவ்வ ளவோ மலர்கள் பூமியில் இருக்க, தாங்கள் ஏன் வில்வத்தில் பிரியம் கொண்டுள்ளீர்கள்?’’ எனக் கேட்டாள்.

‘‘தேவி, என் பக்தர்கள் விலையுயர்ந்த மலர்களைத் தேடி அலையக்கூடாது என்பதால்தான் நான் வில்வத்தோடு, எளிதில் கிடைக்கும் எருக்கு, கொன் றையைக் கூட விரும்பி ஏற்கிறேன்’’ என்றார். ஈசனின் திருநடனத்தை மலர்கள் சூழ்ந்த வனத்தில் மீண்டும் தரிசனம் செய்யும் வரத்தைக் கேட்டாள் பார்வதி.
தேவியின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் ஈசன். தென்னாட்டில் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் கதம்ப வனமும் கொன்றை மரங்களும் நிறைந்த இடத்தில் கதம்பவனேஸ்வரர், கொன்றைவனநாதர் எனும் திருப்பெயர்களில் கோயில் கொண்டு தன் திருநடனத்தை பார்வதிதே விக்கு ஆடிக்காட்டினார் ஈசன். ஈசனின் நடனத்தை தன் கண்களால் தரிசித்து மகிழ்ந்த தேவி, காமாட்சி எனும் பெயரோடு அங்கு நிலைகொண்டாள்.

அவ்வாறு ஈசனும் தேவியும் நிலை கொண்ட இடம் திருநல்லூர். தற்போது அந்த ஈசன் கருப்பனீஸ்வரர் என வணங்கப்படுகிறார். கதம்பவனேஸ்வரரே மருவி கருப்பனீஸ்வரர் ஆனார். இங்கு சனி பகவான் ஈசனை வழிபட்டதால் கருப்பனான சனி வழிபட்டவர் என பொருள்படும்படி கருப்பனீஸ்வரர் என்ற ழைக்கப்படுகிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது. ஆயுட்காரகனான சனிபகவான் வழிபட்ட தலமாதலால் இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது. இத்தல பிரதோஷ வழிபாட்டின்போது எட்டு திக்குகளிலும் ஈசன் எழுந்தருளி விசேஷ வழிபாடு நடக்கிறது.

2008ல் நடந்த ஆலய கும்பாபிஷேகத்தின் போது ஐந்து கோடி நமசிவாய மந்திரம் எழுதப்பட்டு மூலவரின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வரும் பங்குனி உத்திர தினத்தன்று(26.3.2013) மாலை 7 மணிக்கு சர்வமங்கள காமாட்சி தேவிக்கும் கருப்பனீஸ்வரருக்கும் திருக்கல்யாண மகோற்சவம் விமரிசையாக நடக்கவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூருக்கு கிழக்கில் 12 கி.மீ தொலைவிலும் குன்றத்தூருக்கு தென்மேற்கில் 10 கி.மீ தொலைவிலும், இத்தலம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum