Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்

Go down

கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம் Empty கொடுவினைகள் நீக்கும் கொடியலூர் தரிசனம்

Post by oviya Tue Dec 09, 2014 1:28 pm

இப்பூவுலகில் எத்தனையோ புண்ணியத் தலங்கள், பரிகாரத் தலங்கள், புண்ணிய நதிகள் இருக்கின்றன. ஆனால், திடீரென்று ஒரு திருத்தலம் சென்று வந்த பின்பு வாழ்வில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெறுகிறோம். அத்தலத்து இறைவனை மனப்பூர்வமாக நேசிப்பதாலும் இறைவனை நெக்குருகி அழைப்பதாலும் கஷ்டத்தை நீக்கி பேரருள் புரிகிறார் என்பதில் ஐயமில்லை. தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்களில் மிகவும் பெருமையும் புகழும் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர். உலகின் ஆதிசக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்துவரும் தலமே திருமீயச்சூர். இத்தலத்தின் இறைவன் மேகநாதசுவாமியானவர் வருணனும் சூரியனும் பூஜை செய்து, தங்கள் சாப நிவர்த்தி பெற்ற இடமாகும்.

சூரியனுடைய பத்தினிகளான உஷாதேவியும் அவளுடைய நிழலான சாயாதேவியும் மேகநாதரிடம், ‘‘எங்களுக்கு புத்திர சந்தானம் வேண்டும்’’ என்று வழிபட்டனர். அதற்கு இறைவன், ‘‘நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி அம்பாள் லலிதாவையும் என்னையும் பூஜை செய்தால் அந்த பலன் கிடைக்கும்’’ என வரமளித்தார். அதன் படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் பூஜை செய்தனர். பகவான் சூரியனுக்கும் உஷாதேவிக்கும் எமதர்மனை ஜனிக்கும்படி செய்தார். பின்னர் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் சனீஸ்வர பகவானை ஜனிக்கும் படி அருள் செய்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம் திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே உள்ள கூடியலூர். அதுவே காலப் போக்கில் கொடியலூர் ஆயிற்று.

அகத்தியர், ஹயக்ரீவர் கூறியபடி லலிதாம்பிகையை தரிசித்து லலிதா நவரத்தின மாலையை பாடி அம்பாளின் பேரருளைப் பெற்ற பின் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். கூடியலூர் என்ற இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து லலிதாம்பிகையை ஆனந்தவல்லியாக நினைத்து ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் சுவாமியை பூஜை செய்து பெரும் பேறு பெற்றார். அச்சமயத்தில் அசரீரியாக அகத்தீஸ்வரரே எமதர்மராஜனிட மும் சனீஸ்வரனிடமும், ‘‘இத்தலத்தில் வீற்றிருந்து எங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எம வதையையும் சனி உபாதையையும் நீங்கச் செய்து அருள்புரிய வேண்டும்’’ எனக் கட்டளையிட்டார். அதிலிருந்து கூடியலூரான கொடியலூரின் தென்பால் எமதர்மனும் வடபால் சனீஸ்வர பகவானும் இ ருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்கள்.

திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதாபரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக பரிபூரணமாக காட்சி தந்து அருளாசி வழங்குகிறாள். ஒரே எல் லையில் அமர்ந்த கோலமாகவும் நின்ற கோலமாகவும் இருந்து அருள் செய்வது மேலும் சிறப்பு. தென்புறத்தில் எமதர்மராஜனும் வடபுறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்தத் தலம் என்பதனால் இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் மரண பயத்தையும் நீக்கி அருளுகிறார்கள்.

அகத்தீஸ்வரர் சிவபூஜை செய்த தலமாக இருப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் ஞானத்தினை அள்ளி வழங்குகிறார். சனீஸ் வர பகவானின் கடுமையான பார்வையிலிருந்து நீங்க அகஸ்தீஸ்வரரே பைரவர் கோலத்தில் எதிரே நின்று தோஷத்தை நீக்கி தரிசனம் தருவதால் கெடு பலன்கள் நீங்கி நற்பலன்களை பெருகச் செய்யும் தலமும் இதுவேயாகும். சனீஸ்வர பகவானால் ஏற்படும் ஏழரைச் சனியின் பாதிப்பு முதல் வாழ்வில் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், (மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையே) பேரளத்திற்கு மேற்கே, இரண்டாவது கிலோ மீட்டரில் திருமீயச்சூர் அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum