Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சந்திர பகவான் அருள் கிடைக்கும் தலங்கள்

Go down

சந்திர பகவான் அருள் கிடைக்கும் தலங்கள் Empty சந்திர பகவான் அருள் கிடைக்கும் தலங்கள்

Post by oviya Sun Nov 30, 2014 2:14 pm

சந்திரன் திருப்பாற்கடலில் அமுதம் கடைகையில் உதித்தவர் என்றும், அத்திரிக்கும் அனுசூயைக்கும் பிறந்தவர் என்றும் கூறுவர். நமது மூளையின் செயல்பாடுகள் நவக்கிரகங்களில் ஒன்றான சந்திரனுடன் நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் பலம் அதிகரிக்க, அதிகரிக்க மனித மூளையின் செயல்பாட்டுத்திறனும் உயர்கிறது. ஆதலால் தான் வளர்பிறை நாட்களில் மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கிறது. இதே போன்று தேய்பிறை நாட்களில் சந்திரன் பலவீனம் அடையும் போது மனிதனின் அறிவுத்திறனும் அதற்கு ஏற்ப குறைகிறது.

இப்படி அறிவுத்திறன் மட்டுமின்றி, சந்திரன் ஜாதத்தில் மாத்ருகாரகரும் ஆவார். தாய்க்கும், மகனுக்கும் உள்ள உறவு எப்படியிருக்கும் என்பதை ஜாதகத்தில் சந்திரனின் நிலையைக் கொண்டு அறியலாம். ஜாதகத்தில் சந்திரன் அடியோடு கெட்டிருந்தால் அவர்களுக்குத் தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைப்பது கடினமாகும்.

சந்திரன் பலவீனமாக இருந்தாலும், பாபக்கிரகச் சேர்க்ககைக்கு ஆட்பட்டிருந்தாலும், பாதக நிலையில் அமர்ந்திருந்தாலும் தோஷமே. இத்தகைய தோஷத்தின் அளவிற்குத் தக்கபடி பல பரிகாரங்கள் உள்ளன. மிகக் கடுமையான தோஷத்திற்கு இந்ததிருத்தலங்கள் அதிக சக்தி வாய்ந்தவை ஆகும்.

1. திங்களூர்:

தமிழ் நாட்டில் உள்ள சக்தி வாய்ந்த சந்திரனுக்குரிய தலம் இது. இங்குள்ள கர்ப் பக்கிரகப் பீடத்தின் அடியில் மந்திர சக்தி வாய்ந்த யந்திரங்களும், விலையுயர்ந்த முத்துக்களும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை தவிர சந்திரகாந்தக்கல் உள்ளே வைத்து இந்தப் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பீடம் சந்திர கிரணங்களின் சக்தியை கிரகித்து கொள்ளும் சக்தி பெற்றவை.

2.சோம நாதபுரம்:

இத்திருத் தலம் குஜராத்தில் உள்ளது. இது ஒரு சுயம்பு லிங்கம் தானாகவே தோன்றியது. இங்குள்ள சோம தீர்த்தத்தில் நீராடி இறைவனைப் பூஜித்தால் சந்திர தோஷம் அடியோடு நீங்கும். சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக இத்திருத்தலத்தில் இறைவனைப் பூஜித்து மீண்டும் சந்திரன் தன் குளிர்ந்த ஒளியை திரும்பப் பெற்ற திவ்ய திருத்தலம் இது.

3. மந்தராலயம்:

தெய்வீகப் புகழ்பெற்ற ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவனத்திற்கும், அதற்கு முன்பு உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திலிருந்து ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தைத் தரிசித்தால் சந்திரதோஷம் நீங்கும். இதனை சிலர் அனுபவத்தினாலேயே உணர்ந்துள்ளனர்.

4. சந்திர பகவான் வழிபட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலம் திருப்பதி. சந்திர தோஷம் உடையவர்கள் அவசியம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். இத்திருத்தலம் கீழ்திருப்பதி, மேல் திருப்பதி என இரட்டை நகரமாக அமைந்துள்ளது. கீழ்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும், கபிலேச்சுவரர், சிவன் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் குகை ஒன்று உள்ளது.

திருச்சானூரில் அலமேலு மங்கை ஆலயம் உள்ளது. மேல் திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் கோவிலும், புஷ்கரணி திருக்குளமும், குளக்கரையில் ஆதிவராகர் ஆலயமும் உள்ளன. ராமானுஜர் சந்நிதியும் உள்ளது. சற்று மேலே ஆகாச கங்கைத் தீர்த்தமும், பாபவிநாசம் தீர்த்தமும் உள்ளன.

இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் மார்பில் இருதேவியர்களும் இடம் பெற்றுள்ளனர். ஏழுமலையாடினத் தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழுமலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும் கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவெங்கடேசாய நமஹ என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள்.

கோவிலுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யாதீர்கள். திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூடாதீர்கள். திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum