Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ராகு-கேது தோஷம் நீக்கும் ராமானுஜர் : இன்று ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி

Go down

ராகு-கேது தோஷம் நீக்கும் ராமானுஜர் : இன்று ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி Empty ராகு-கேது தோஷம் நீக்கும் ராமானுஜர் : இன்று ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி

Post by oviya Tue Dec 09, 2014 1:41 pm

ஒவ்வொரு காலகட்டத்திலும், பல அவதார புருஷர்கள் தோன்றுகிறார்கள். அந்த வகையில் பகவான் விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுபவர் ஸ்ரீராமானுஜர். புராண கதைகளின் படியும், வைணவ சம்பிரதாய முறைப்படியும் ராமானுஜர் கி.பி. 1017-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். தன் அவதார மகிமையை வெளிப்படுத்தாமல் சாதாரண மானிடராக இருந்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திருக்கச்சி நம்பியை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். மேலும் சாஸ்திரங்கள், வேதங்கள், உபநிஷத்துகளை கற்றுத் தேர்ந்தார். ஆணவம், அகந்தை அகங்காரம் அழிந்து, சாதி, மத பித்து நீங்கி எல்லோரும் சமம் என்ற உயர்ந்த தத்துவத்தை போதிக்கும் நோக்கிலேயே இந்த அவதாரம் எடுக்கப்பட்டது. ‘மக்களை உய்ய வந்த மாமுனி’ என்று இவரை வைணவ சம்பிரதாயம் சிறப்பிக்கிறது. ராமானுஜரின் பெற்றோரது தவத்தையும், வேண்டுதல்களையும் ஏற்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளே, ‘ராமானுஜனாக அவதரிப்பேன்’ என்று உரைத்ததாக கூறப்படுகிறது. ராமானுஜரின் எளிய தத்துவங்கள், அவரின் அன்பு எல்லோரையும் கவர்ந்தது.

சாதி, மத, பேதம் கடவுளுக்கு இல்லை என்பதை எல்லோருக்கும் உணர்த்தினார். பெண்களுக்கு உயர்ந்த மரியாதை, அந்தஸ்து கிடைத்து சமூகத்தில் அவர்கள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக பாடுபட்டார். இதற்காக பல நீதி போதனைகளை அளித்து அற்புதங்களையும் நிகழ்த்தி காட்டினார். ஜீவாத்மாவின் நோக்கமே பரமாத்மாவுடன் ஐக்கியமாவதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தினார். ‘கடவுள் இருக்கிறார். அவரை அணுகி வணங்க எல்லோருக்கும் உரிமை உண்டு. கடவுள் ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தமானவர் அல்ல’ என்றார். மதத்தின் பெயரிலான ஆணவ கருத்துகளையும் பத்தாம் பசலித்தன மான கொள்கைகளையும், வழிமுறைகளையும் கடுமையாக எதிர்த்தார். அவருக்கு உபதேசித்த ரகசிய மந்திர திருநாமத்தை திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் ஏறி நின்று மக்கள் பயனுற அந்த மந்திரத்தை உரக்க அறிவித்தார். ராமானுஜர் சில நேரங்களில் அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

அவையெல்லாம் மக்களை நல்வழிப்படுத்தும் போதனைகளாகவே இருந்தன. ஒரு சமயம் திருப்பதியில் தன் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது மோர் விற்றபடி வந்த பெண்ணிடம் அவரது சீடர்கள் தாகத்துக்கு மோர் வாங்கி குடித்தனர். எவ்வளவு தரவேண்டும் என்றார் ராமானுஜர். அவரை பார்த்ததில் இருந்து பக்தியில் லயித்து, முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டிருந்தது அந்த பெண்ணுக்கு. ‘எனக்கு காசு வேண்டாம். பரம பதத்தில் மோட்சத்துக்கு வழிகாட்டுங்கள்’ என்றாள். ‘உனக்கு மோட்சம் கிடைக்கும், ஆனால் என்னால் வழங்க முடியாது. ஏழுமலை மேல் அமர்ந்து இருக்கும் வேங்கடவன்தான் தரமுடியும். அவரிடம் போய் கேள்’ என்றார் ராமானுஜர். அவளும் விடவில்லை. ‘மலை மேல் இருப்பவர் வாய் திறந்து பேச மாட்டார். நீங்கள் சிபாரிசு ஓலை எழுதி தந்தால் எடுத்து சென்று காட்டுகிறேன்’ என்றாள். ராமானுஜரும் அவளது நம்பிக்கையை மதித்து ஒரு சிபாரிசு ஓலை எழுதிக்கொடுத்தார். நேராக திருமலைக்கு சென்ற பெண், அந்த ஓலையை அர்ச்சகர்களிடம் கொடுத்தாள்.

அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. ‘ராமானுஜர் கொடுத்தது’ என்று அவள் சொன்னதும் மறுப்பு சொல்லாமல் பெருமாள் திருமுன்பு சமர்ப்பித்தனர். பெருமாள் கை நீட்டி ஓலையை எடுத்துக்கொண்டு ‘உனக்கு மோட்சம் அளித்தேன்’ என்று சொல்ல, வானில் இருந்து பிரகாசமான விமானம் வந்து, மோர் விற்கும் பெண்ணை ஏற்றிச்சென்றது என்கிறது புராணக் கதை. ஆணவம், அகங்காரம் இல்லாமல். உண்மையான அன்பும், தூய்மையான பக்தியும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இல்லாதோர், இயலாதோருக்கு உதவும் பரந்த குணமும் இருந்தால் இறைவனை அடைவது எல்லோருக்கும் எளிது என்பதை இதன்மூலம் உணர முடிகிறது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் உருவம் விக்கிரகமோ, வேறு உலோகப் பொருளோ அல்ல. ராமானுஜர் பத்மாசன திருக்கோலத்தில் இருக்கும் இந்த வடிவம் அவர் காலத்தில் உருவாக்கப்பட்டு அவரே அதை தழுவி தன் சக்தி யை பரிபூரணமாக இந்த உருவத்தில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. பல மூலிகைகள், பச்சை கற்பூரம், அஷ்ட பரிமளங்கள் போன்றவற்றால் இன்றளவும் இந்த சிலையை பாதுகாத்து வருகின்றனர். இதை ‘தான் உகந்த திருமேனி’ என்கிறார்கள்.-

ஆதிசேஷன் அம்சம்

ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சம் என கருதப்படுகிறது. இவர் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரையில் அவதரித்தார். இவரை வழிபடுவதன் மூலம் ராகு - கேது தோஷங்கள் நீங்கும். இவரின் அவதார ஜாதகத்தை பூஜையில் வைத்து பூஜித்தால் எல்லா விதமான தடைகளும் நீங்கி சகல சவுபாக்யங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum