Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

Go down

ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் Empty ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா : ராமேஸ்வரம் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

Post by oviya Tue Dec 09, 2014 1:42 pm

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று விபீஷணர் பட்டாபிஷேக வைபவம் நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின்னர், கால பூஜையை தொடர்ந்து வீதி உலா வந்து கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினார்.

அங்கு நடந்த சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சேதுபந்தச் சேதம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு ஸ்ரீராமர், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்விக்கும் வைபவம் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு கோதண்டராமர் கோயிலில் இருந்து விபீஷணருடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி, நான்குரத வீதியில் உலா வந்து கோயிலை வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து, கோயில் நடை திறக்கப்பட்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படவில்லை. மாலை 4 மணிக்கு மேல் கோயில் திறக்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் புனித நீராடுதலும் நடந்தது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum