Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மழலை வரம் தந்து மகிழ்விக்கும் மன்னார் சுவாமி

Go down

மழலை வரம் தந்து மகிழ்விக்கும் மன்னார் சுவாமி Empty மழலை வரம் தந்து மகிழ்விக்கும் மன்னார் சுவாமி

Post by oviya Tue Dec 09, 2014 1:50 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - திருநெல்வேலி-சிக்க நரசய்யன் கிராமம்

தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட அழகு மிகுந்த விக்கிரகம் இந்த ராஜகோபால சுவாமி பெருமான். தேவலோகத்தில் இருந்து நேரடியாக திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிக்க நரசய்யன் கிராமத்திற்கு வந்த பெருமாள் இவர் என்கிறது நாடி. கோரக்கர் என்ற சித்தர், பின்வரும் பாடல்களில்
‘‘திருமன்னருக்கு கொண்டையுறை மங்கை யீந்த கோபாலனிவனுக்கு தேவர்கோன் பூஜை புரிந்தனனே’’ என்றும்

‘‘காண்டிபங் கொண்டான்
தமை குறைநீக்கி யருள தேவர்க்கரசிறைஞ்ச
கேலிசெய்தசுரரை யவித்ததமைக்கு கைம்மாறாய்
யீந்த வழகிய மன்னாரை பிரவாகத்திட
பெற்று மன்னனும் அம்பலத்தே யமைத்தனனே’’

என்றும் பேசுகிறார். தேவர்க்கு தலைவனான இந்திரனுக்கு அசுரர்கள் பற்பல துயரங்களை தந்து இம்சித்து வந்தனர். பதினான்கு உலகங்களிலும் வாழும் தரும நெறி நிற்ப வர்களையும் பக்தி மார்க்கத்தில் ஒழுகுபவர்களையும் கொலை செய்து கொடுமைகள் புரிந்தனர். எனவே இந்திரன் அர்ஜுனனிடம், அவர்களைக் கொன்று தருமத்தைக் காப்பாற்றுமாறு இறைஞ்ச அர்ஜுனனும் தன் பாசுபத அஸ்திரத்தைப் பிரயோகித்து மூன்று கோடி அசுரர்களை வதம் செய்தார். இதனால் பெரிதும் மகிழ்ந்த இந்திரன் தான் அனுதினமும் போற்றி வணங்கி வந்த ராஜகோபாலசுவாமி சிலையை அன்பளிப்பாக தந்து, தன் நன்றி யைத் தெரிவித்துக்கொண்டான்.

‘‘கொண்டு நின்ற கோலப் பதுமையை
கங்கையில் விட்டு நில் என்ற
சக்கரக்கையன் மொழி கேட்டு
உறக்கத்திலே - அவ்வண்ணமே
ஆக்கினான் அமரர் கோன் வாரிசான்’’

-என்ற கோரக்கர் பாடலிலிருந்து சக்கரக் கையனான கண்ணபிரான், அர்ஜுனனது கனவில் தோன்றி, தேவேந்திரன் தந்த விக்ரகத்தை கங்கை பிரவாகத் தில் விட்டு விடு என்று சொல்ல, அவ்வண்ணமே, அர்ஜுனனும் கங்கையில் அந்த சிலையை விட்டான் என்பது தெளிவாகிறது.

‘‘திருபதிக் கோன் புனித நீராடி
பெற்ற புண்ணியத்தால் கண்டுற்ற
பதுமை தன்னை தேவரும் மூவருங்
கொண்டாடு தேவ நாரணதலத்தே
தாபிக்க வடிவழகிய மன்னார்
புவியிலுரைவார் தம்குறை கரைத்து காத்தனரானரே’’

-என்ற குதம்பை வாக்கு பெரிதும் போற்றுதற்குரியது. ஸ்ரீபதி என்ற மன்னர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டு அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி கங்கையில் நீராடியபோது அர்ஜுனன் விட்ட விக்கிரகம் கையில் சிக்கியது. உடனே அதற்கு ஒரு கோயில் எழுப்ப எண்ணம் கொண்டார் மன்னர். அகஸ்திய முனிவரின் ஆலோசனையின் பேரில், கிடைத்த அந்த தேவலோக மூர்த்தியை தேவநாராயணப் பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்த திவ்ய மூர்த்தியே இன்று அழகிய மன்னார் ராஜ கோபால சுவாமியாக, ஸ்ரீதேவி, பூமி தேவியருடன் காட்சி தருகின்றார். கொங்கணர், தனது பாடலில்,

‘‘பட்டன் விஷ்ணு பெற்ற பெண்டிரடுத்து
வாரிசு வேண்ட வந்ததும் முன்ஒப்ப
வெகுளி தன்னால் தூபத்தையெரிய
துண்டான காயத்தை துடைக்க பெண் இனமாறி கண்ட திசயத்தானே’’

-என்றார். வேத நாராயணப் பெருமாளை ஆராதனை செய்து வந்தவர் விஷ்ணுபிரியன் என்ற பட்டர். அடுத்தடுத்து, தனக்கு பெண் குழந்தைகள் பிறந்த மையால் மனச்சோர்வுற்றவன், அழகிய மன்னாரிடம் மனமுருகி தனக்கு அடுத்து ஆண்வாரிசு வேணும் என வேண்டி நின்றார். ஆனால், அடுத்தும் பெண்ணே பிறக்க ஆத்திரம் மேலோங்கி தூபகோலை தூக்கி எறிய அது அழகிய மன்னார் முகத்தில் பட, மூக்கில் காயம் உண்டானது. வருந்திய அர்ச்சகர், வீடு திரும்பி வந்த பிறந்த குழந்தையை பார்க்கையில் குழந்தை ஆணாக மாறி நின்று ஆச்சரியமூட்டியது. இந்த அதிசயத்தை கண்ணுற்ற அனைவரும் அழகிய மன்னார் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வீற்றிருக்கும் ராஜகோபால சுவாமியை போற்றி பரவசம் அடைந்தனர்.

‘‘வம்சம் தழைக்க கருவாவான்
பிணி போக்கி நிற்குஞ்
சுந்தர தேவனிவன் பொன்
னொடு பெரும் பொருளு
மீவான் - கல்வி தழைக்க
கருவாவான் - கருட
வாகனனிவனை சரணஞ் செய்வார்
தமக்கேது அல்லலே’’

-என்று பாடி பரவசமடைகிறார் அகத்திய மாமுனி. கோபால சுவாமி, சத்தியபாமா ருக்மிணி சமேதராய் பற்பல சித்தர்களுக்கு காட்சி தந்தவன். நிறைய பொன்னையும் பொருளையும் வாரி பக்தர்களுக்குத் தருபவன். கல்வி விருத்திக்கு அச்சாரம் இவனே. கருட வாகனத்தை உடைய இந்த மகாவிஷ் ணுவை சரணடைய எல்லா தொல்லைகளும் நீங்கும் என்கின்றார் சித்தர்.

‘‘மணமது அகமொப்ப அமைக்குந்
தன்மையனல்லாலவன் நற்புத்தி
தனையுமீவான் - ஈண்டுறை
பரமபதத்தான் நீத்தாருக்குந் நற்கதி
நல்குனிலேது மய்யமில்லையே’’

இறந்தபின் முக்தியை தரத் தகுந்த பரமபத நாதன் இக்கோயிலில் குடி கொண்டிருப்பதனால், கண்டிப்பாக இவரை தொழுது நிற்பது நன்மை பயக் கும். மனத்துக்கேற்ற மணவாட்டியும் இனிமையான மணமகனையும் தேடித் தருவார் இந்த மூர்த்தி. ஆண் வாரிசை தந்து சகல மேன்மைகளுடனும் வாழ்விப்பான் என்பது சித்தர்தம் வாக்கு.

‘‘செண்பக நாயகனை தொழுவார்
தம் தோஷம் கருகும் மெய்யே’’

-என்ற அழுகணிச் சித்தர் வாக்கு போற்றி கவனிக்கத்தக்கது. இங்குள்ள விநாயகருக்கு செண்பக விநாயகர் என்று பெயர். இவர் தம்மை தொழுபவருக்கு தோஷங்கள் நூற்றியெட்டும் கண்டிப்பாக விலகும்.

‘‘கன்னிச் சனியதனிலே
சித்தரெலாங் கூடி களிக்க
யந்நாள் விரதங் கண்டாராதனை
செய்வார் தம் வாழ்நாளும்
இன்பமென்றூதுவம் குழலே’’

-என்கிறார், குழகனி சித்தர். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கருட சேவை உண்டு. இதில் அனைத்து சித்தர் பெருமக்களும் கலந்து இறைவனை வழிபடுவர். விரதம் அனுஷ் டித்து இறைவனை வழிபடுபவருக்கு வாழும் காலம் முழுவதற்கும் ஆனந்தம் ஆனந்தமே! திருநெல்வேலி டவுனில் இருந்து குறுக்குத்துறை வழியாக, ரயில் நிலையம் செல்லும் பாதையில் 10 கி.மீ. தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. நெல் லை பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்து, ஆட்டோ வசதிகள் உண்டு.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum