Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்

Go down

தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய் Empty தீயசக்திகள் தீண்டாது காக்கும் தாய்

Post by oviya Wed Dec 10, 2014 1:23 pm

அந்த சிற்றரசனுக்கு பிறவியிலேயே மூக்கு வளைந்து இருந்தது. அவனை ‘கிளிமூக்கு மன்னன்’ என்று கேலியாக அழைத்தார்கள். இதனால் மன்ன னுக்கு மூக்குக்குமேல் கோபம் பொங்கியது. இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று விரும்பினான். தம் நாட்டு மருத்துவர்களை எல்லாம் அழைத்து, ‘‘இந்தக் மூக்கை சரி செய்யமுடியுமா?’’ என்று கேட்டான். அறுவை சிகிச்சையில் சற்று பிசகினாலும் மன்னனின் கோவத்திற்கு ஆளாக வேண்டி இருக்குமே என்று அஞ்சிய மருத்துவ குழுவினர், ‘‘பிறவியிலேயே அமைந்த இந்த குறைபாட்டை கடவுளால் மட்டுமே நீக்க முடியும்’’ என்று சொல்லி நழுவிக் கொண்டார்கள்.

‘‘அப்படியானால் நான் இப்போதே காசிக்குச் செல்கிறேன். அங்கு ஈசனை வேண்டி கடுந்தவம் செய்து, என் குறையை நீக்கிக் கொண்டே நாடு திரும்பு வேன்’’ என்று சொல்லி காசிக்கு சென்று தவத்தைத் தொடங்கினான், மன்னன். மன்னனின் தவம் மகேசனை அசைத்தது. உடனே அரன் தோன்றி, ‘‘மகனே, உன் நாட்டிற்கு நீ திரும்ப செல். உன் தேசத்திற்கு செல்லும் வழியில் தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் நதியொன்றைக் காண்பாய். அந்த நதிக் கரையில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, தொடர்ந்து 48 நாட்கள் நதியில் நீராடி, எம்மை வணங்கி வர உன் குறை நீங்கும்’’ என்று அருளினார்.

அதன்படி தன் நாடு நோக்கி நகர்ந்தான், மன்னன் சிவன் குறிப்பிட்டபடி ஒரு ஆறு ஓடுவதைக் கண்டான். அதன் பெயர் நீவா நதி எனத் தெரிந்து கொண்டான். அதன் கரையில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினான். 48வது நாள். அந்த அதிகாலையில் ஆற்றில் மூழ்கி எழுந்த மன்னன், அரனை தியானித்து முகத்தைத் தடவிப் பார்த்தான். வளைந்த மூக்கு நேராகி அழகாய் மாறியிருந்தது. தனது நீண்ட நாள் மனக்குறையை நீக்கிய இந்த மண்ணை மேம்படுத்த வேண்டும் என்கிற ஆவல் அவன் மனதில் அழகாய் பூத்தது.

தற்போது தொளார் என்கிற பகுதியை தலைநகரமாக்கி வடக்கே சிறுமங்கலம், தெற்கே சேந்தமங்கலம், மேற்கே போத்திரமங்கலம், கிழக்கே நந்திமங் கலம் ஆகிய நான்கு ஊரையும் எல்லைகளாக்கி புதிய அரசமைத்தான். அந்த நான்கு எல்லைகளுக்கும் காவல் தெய்வங்களாக செல்லியம்மன்களை அமரச் செய்தான். செல்லியம்மன்களின் ஆலயங்களைப் பராமரிக்கும் பணியை தொளாரில் வாழ்ந்த 99 அந்தணக் குடும்பங்களுக்குக் கொடுத்தான். நிர்வாகமும் வழிபாடும் சிறப்பாக நடப்பது கண்டு மகிழ்ந்த மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஊர்கள் மற்றும் ஆலயங்கள் பற்றிய விவரங் களை பட்டயமாக எழுதி, அவற்றை அந்தக் குடும்பத்தினருக்கே உரிமையாக்கி தன் சொந்த தேசம் புறப்பட்டான்.

கால ஓட்டத்தில் ஆலயப் பணியை சிறப்பாக செய்து வந்த அந்தக் குடும்பத்தாரில் ஒருவன் மாந்தரீகத்தில் நாட்டம் கொண்டு தர்மம் தவறி நடக்கத் தொடங்கினான். தொளார் எல்லை தெய்வமான செல்லியம்மனை மாந்தரீகத்தால் அடிமைபடுத்தி வேலைக்காரி போன்று நடத்தத் தொடங்கினான். வீட்டில் பாத்திரம் தேய்க்கச் சொல்வது முதல் வயலில் நாத்து நடுவதுவரை அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்லி செல்லியம்மனை வதைத்தான். தொளார் செல்லியம்மனுக்கு பெருமத்தூர், கீழ்மத்தூர், வேள்விமங்கலம், கொடிக்களம், கோவிலூர் சிறுமங்கலம் ஆகிய ஆறு ஊர் செல்லியம்மன்களும் சகோதரிகள். இந்த ஏழு சகோதரிகளும் எந்த ஒரு விசேஷம் என்றாலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது வாடிக்கை.

இந்நிலையில் கொடிக்களம் செல்லியம்மனுக்கு விழா நடத்த காப்பு கட்டினார்கள். விழாவுக்கு அனைத்து சகோதரிகளையும் அழைத்த கொடிக்களம் செல்லியம்மன், தொளார் செல்லியம்மனையும் அழைத்தாள். மாந்தரீகத்தால் தான் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதைச் சொல்லி அழுத தொளார் செல்லி யம்மன், ‘தம்மால் விழாவுக்கு வரமுடியாது’ என்றாள். உடனே கொடிக்களம் செல்லியம்மன், ‘‘பயப்படாதே தங்கச்சி. நீ இங்கிருந்து புறப்பட்டு கொடிக்களம் போ. இங்கு உனக்கு பதிலாக நான் இருந்து அந்த கொடியவனுக்கு முடிவு கட்டுகிறேன்’’ என்று கூறி, தங்கையை கொடிக்களம் அனுப்பி வைத்துவிட்டு, தொளார் ஆலயத்தில் அமர்ந்தாள்.

அந்தி சாய்ந்தது. அந்த மாந்தரீகன் வந்தான். ‘‘அடியே செல்லி... வெளிய வா. வீட்டுல பத்துப் பாத்திரம் தேய்க்கப் போ...’’எனக் கத்தினான். பதிலி ல்லை. ‘‘அடியே, நான் கூப்பிடறது கேட்கல’’ என்றபடி கதவை எட்டி உதைத்தான். அங்கே உக்கிரமாய் செந்தழலாய் எழுந்து நின்ற செல்லி, அந்த கொடியவனின் சிரம் கொய்தாள். கொடூரனைக் கொன்ற கொடிக்களம் செல்லியம்மன், தன் தங்கையிடம் நடந்ததைக் கூறி, ‘‘நீ இனி தொளார் போய் நிம்மதியாக வாழலாம்’’ என்று சொன்னாள். தொளார் செல்லியோ, ‘‘எனக்கு இந்த ஊரும் மக்களும் மிகவும் பிடித்து விட்டன. நான் இங்கேயே இருக்கிறேன் அக்கா. நீ தொளாரில் இருந்து கொள்’’ என்று சொல்ல அப்படியே இருவரும் இடம் மாறி அமர்ந்து இன்றளவும் அருள்கிறார்கள்.

தொளாரிலிருந்து கொடிக்களம் வந்தமர்ந்த செல்லியம்மன் ஊரையும் ஊர் மக்களையும் பேய், பிசாசு போன்ற தீய சக்திகளிடமிருந்தும் அக்கி, அம்மை உஷ்ண நோய்களிடமிருந்தும் கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறாள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில், விருத்தாசலத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் சாலை ஓரத்திலேயே இருக்கிறது, கொடிக்களம் செல்லியம்மன் திருக்கோயில். இலுப்பை மரங்கள் சூழ்ந்து பசுமை பரப்பும் இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள குளம் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. சிறிய கோயில்தான் என்றாலும் ராய முனியப்பர், நொண்டிக் கருப்பு, குள்ளக் கருப்பு, சப்த கன்னியர், காவல் தெய்வப் பரிவாரங்கள் சூழ அருளாட்சி செய்கிறாள், செல்லியம்மன்.

முன் மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால், இருபுறங்களிலும் விநாயகரும் முருகனும் அழகாய் அமர்ந்திருப்பதைக் காணலாம். உள்ளே கருவ றையில் தீஞ்சுடராய் ஒளிர்கிறாள், செல்லியம்மன். கருணை பொங்கும் கண்களோடு விளங்கும் அன்னையை பார்த்த மாத்திரத்திலேயே உள்ளம் நிறைகிறது. ஆடிமாதம் முழுக்க இந்த செல்லியம்மனுக்கு கொண்டாட்டம்தான். சுற்று வட்டார பெண்கள் எல்லாம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் இத்த லம் வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து அன்னையின் அரவணைப்புக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். அன்னையும் தம் மக்களின் மனத்துக்கு நெ ருக்கமாய் அமர்ந்து, ‘இவள் நம்ம வீட்டு செல்லியம்மன்’ என்று சொல்லும் விதமாய் குடும்பத்தில் ஒருத்தியாய் அருள்கிறாள். ஆலயத் தொடர்புக்கு 9442478268.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum