Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஆடிப்பூரம் : திருமண யோகம் தரும் ஆண்டாள் பாசுரம்

Go down

ஆடிப்பூரம் : திருமண யோகம் தரும் ஆண்டாள் பாசுரம் Empty ஆடிப்பூரம் : திருமண யோகம் தரும் ஆண்டாள் பாசுரம்

Post by oviya Wed Dec 10, 2014 1:26 pm

ஆடி மாதம் கடக ராசியான சந்திரன் வீட்டில் சூரியனும் சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும், பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கும், நள வருடம், சனிக்கிழமை பூரம் நட்சத்திரம், சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி கூடிய நன்னாள் ஆண்டாள் அவதரித்த நாள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்று பார்த்த போது, துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை கிடப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்த கூத்தாடினார். ‘கோதை‘ என்று பெயர் சூட்டி அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கோதைக்கு பரந்தாமன் மீது பக்தி அதிகரித்தது. சகல சாஸ்திர ஞானங்கள் இயற்கையாகவே வர ஆரம்பித்தது. பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பாற்கடல் வாசன் மீது பாடினார். பரந்தாமன் மீது கொண்ட தீவிர பக்தி, காதலாக மலர்ந்தது. கனவில் மட்டுமின்றி நிஜத்திலும் கண்ணனை மணாளனாக நினைக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் திருவரங்கனையே மணப்பது என்ற உறுதியும் பூண்டாள்.

தினமும் பூ பறித்து அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு சாற்றுவது பெரியாழ்வாரின் வழக்கம். அந்த திருப்பணியை அவர் செவ்வனே செய்து வந்தார். ஒருநாள் அங்கு வந்த கோதை ‘நம் மனதுக்கு பிடித்தவன் அணியப் போகும் மாலைதானே, நாமே அணிந்து விட்டு கொடுத்தால் என்ன?‘ என நினைத்து மாலையை அணிந்து அழகு பார்த்துவிட்டு மீண்டும் அதை பழைய படியே வைத்து விடுவதை வழக்கமாக கொண்டாள். இது பல நாட்களாக தொடர்ந்தது. ஒருநாள் வெளியே சென்றுவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்த பெரியாழ்வார், பெருமாளுக்கான மாலையை கோதை சூடி அழகு பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பதறினார். ‘அபசாரம், அபசாரம்.

ஆண்டவனுக்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடலாமா‘ என்று ஆண்டாளை கடிந்து கொண்டார். பின்பு அவசர, அவசரமாக பூக்களை தொடுத்து புது மாலை தயாரித்து பெருமாளுக்கு சாற்றினார். அன்று இரவு பெரியாழ்வார் அசந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது கனவில் அரங்கன் தோன்றி கோதை என்மீது மிகுந்த பிரியமும், பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக்கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன். இன்று என்னவாயிற்று என்று கேட்டார். பரந்தாமனே இப்படிக் கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

கோதையின் பக்தியை உணர்ந்து மெய்சிலிர்த்தார். பக்தியாலும், அன்பாலும் பரமனையே அவள் வசப்படுத்தியிருப்பதை அறிந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். பகவானின் உள்ளத்தை ஆண்ட கோதையை அன்று முதல் ‘ஆண்டாள்‘ என்ற திருநாமம் சூட்டி அழைத்தார். பெருமாளின் விருப்பப்படி ஆண்டாள் சூடிக் கொடுக்கும் மாலையையே சாற்றி வந்தார். ஆண்டாளுக்கு உரிய வயது வந்தவுடன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாளோ ‘ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவரன்றி வேறொருவரை மனதால்கூட நினைக்க முடியாது‘ என தீர்க்கமாக சொல்லி விட்டாள்.

குழப்பத்தில் இருந்த பெரியாழ்வாரின் கனவில் மீண்டும் தோன்றிய அரங்கன். “ஆண்டாள் விருப்பப்படியே அவளை திருவரங்கத்துக்கு அழைத்து வாÕÕ என்று சொல்லி மறைந்தார். கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது என்ற ஆயிரமாயிரம் சந்தேகங்களுடனும் தயக்கத்துடனும் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் பெரியாழ்வார். ஊர் எல்லையில் ஏராளமான வேத விற்பன்னர்கள், பொது மக்கள் திரளாக கூடியிருந்ததைப் பார்த்ததும், ஏதோ திருவிழா என்று நினைத்தார்.

வந்திருப்பது பெரியாழ்வாரும், ஆண்டாளும் என்று தெரிந்து கொண்டதும் வேத விற்பன்னர்களும், ஆலய முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்கினர். தன்னை மணந்து கொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமாள் சொன்னார். மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டு இருக்கிறோம். சூடிக் கொடுத்த சுடர் கொடியை பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம் என்றனர். அரங்கனின் திருவுள்ளத்தை எண்ணி மெய்சிலிர்த்தார் பெரியாழ்வார்.

சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. ‘ஸ்ரீரங்கா‘ என்று உரக்க கூறியபடியே கோயில் கருவறைக்குள் ஓடுகிறாள். அக்கணமே ஆண்டவனுடன் ஐக்கியமாகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலித்தாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரம். ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் இறைவனுடன் இரண்டற கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை நமக்கு அருளித்தந்துள்ளார்.

எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தி இருக்கிறார். இதில் திருப்பாவை என்னும் சங்கத் தமிழ் மாலை முப்பது பாசுரங்களை கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம் மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்க அருள்புரிந்துள்ளார். நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்ட தொகுப்பாகும். இதில் ‘வாரணமாயிரம்‘ என தொடங்கும் பத்து பாடல்கள் திருமண பாடல்களாகும். இவை இரண்டையும் பக்தி சிரத்தையுடன் படிக்க தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும். கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமணப் பிராப்தம் கூடிவரும் என்பது ஐதீகமாகும்.

வளையல் வழிபாடு

ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு உற்சவங்கள், வழிபாடுகள் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் தேரோட்ட உற்சவம் நடக்கும். அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும், ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. அன்றைய தினம் எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாள், தாயாருக்கு வளையல் சாற்றுவார்கள். பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றி விட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்து கொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும் நீங்காத செல்வத்தையும் பெற அம்மன் பாதம் பணிவோமாக.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum