Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பெரும் பதவி, புகழ், கீர்த்தி, செல்வம் அருளும் பரமேஸ்வரன்!

Go down

பெரும் பதவி, புகழ், கீர்த்தி, செல்வம் அருளும் பரமேஸ்வரன்! Empty பெரும் பதவி, புகழ், கீர்த்தி, செல்வம் அருளும் பரமேஸ்வரன்!

Post by oviya Wed Dec 10, 2014 1:32 pm

இப்பிறவியில் நாம் செய்யும் பாவங்களை முழுமையாக மன்னித்து நன்மையைத் தரும் சிவபெருமானை ‘இம்மையிலும் நன்மைத் தருவார்’ என்றே போற்றி சித்தர்கள் தொழுத சிவன் வீற்றிருக்கும் மதுரையம்பதி புண்ணிய பூமி ஆகும். பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வமரமே இந்தக் கோயிலின் தலவிருட்சம். இன்றும் குபேரன் அரூபமாக வந்து தொழும் கோயிலிது. உற்சவர் சோமாஸ்கந்தர் பெருமான் ஆவார். மதுரையம்பதியின் மத்தியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அன்னை பார்வதி தேவி, மத்யபுரி நாயகி எனப் பெயர் கொண்டிருக்கிறாள். காரணாகம விதி வழியான அம்பலமிது. பாம்பாட்டி சித்தர், இக்கோயிலின் பெருமையை,

‘‘ஸ்ரீபுட்கரிணி தசதள வில்வத்
துடனே
பாறைச் சக்கரமே திருவாகி
மத்யநாயகி
யருள காரணாகமே கருவாய்
பஸ்சிம திக்கமை சிவனே சிவனை
யாராதிக்க யிம்மைக்கே பெருநன்
மை யாவான்’’

என்றார். லிங்கப் பெருமான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். இங்குள்ள தீர்த்தம் ஸ்ரீபுஷ்கரிணி எனப்படும். தாமரை பீடத்தில் அன்னை மத்யபுரி நாயகி நி ன்ற கோலத்தில் அருள்பாலிக்க, கல்லினால் செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் அம்பாளின் திருப்பாதத்தடியில் இருப்பது சிறப்புடையதாகும். இந்தக் கோயிலில் சிவபெருமானே லிங்க பூஜை செய்து நிற்கின்றார். மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. சிவபெருமான் பார்வதி தேவியுடன் மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்வது இங்கு சிறப்பு. லிங்கத்திற்கு பின்புறம் சிவனும் பார்வதி தேவியும் காணப்படும் அமர்ந்த கோலத்தை ‘பூலோக கயிலாயம்’ என்று வர்ணிக்கின்றார் கபில முனி என்னுஞ் சித்தர்.

‘‘இம்மையிலுந் நன்மை தருமிவன்
பெரும் பதவி போகந் தருவோனே
அங்கயற் கண்ணியோடு அப்பன்
முடிசூட்ட யெழுங் காலத்து தேவருங்
கூடி யாராதிக்க கண்டோமே-
விளாவாராதனை அட்ட பண்டமது
பெரும் பொக்கிசமன்றோ யதனை
யுண்பாருக்கு இடறேது யியம்பு.’’

விளாபூஜை என்பது காலை சிவபெருமானுக்கு நடக்கும் நைவேதன பூஜை. இதில் தோசையை நைவேதனமாக சிவபெருமானுக்கு படைப்பர். இதனை விரதத்துடன் புசிப்பவர்கள் பெரும் பதவி, புகழ், கீர்த்தி, செல்வம் அடைவர் என்கின்றார், சித்தர்.

‘‘கற்களிறு கரும்புண்ண கண்
டோம் சத்தியமே - வல்லபனாய்
நின்றதுஞ் சொக்கனெனவறிந்து
சொன்னோம் - சுர சக்தியுடன்
அமர் சுரதேவருங் கொண்டாடு
மின்மையிலுந் நன்மை பயக்குஞ்
சிவனார் கோயிலை வலம்
வந்தாருக்கு
கூடாததேது செப்புமினே.’’

என்ற மூலர் வாக்கு போற்றுதற்குரியதன்றோ! மதுரையம்பதியில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவபெருமான், வல்லப சித்தனாக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்ததை கண்டேன் என்று பேசுகின்றார் சித்தர். சுர சக்தியுடன் சுரதேவர் வணங்கும் சிவபெருமானைத் தொழுத பேருக்கு பெரும்பிணி, பீடை வாராது, சுரதேவர் தம்மை சரணம டைய, வாதசுரம், பித்த சுரம் என எக்கொடிய காய்ச்சல் வகையும் அண்டாது என்பது சித்தர் தம் வாதம். அன்னை மத்தியபுரி நாயகிக்கு, மதுரபுரி நாயகி எனவும், சிவபெருமானுக்கு மதுரநாயகர் என்றும் பெயர் உண்டு. இதனை ஆதாரமாக கொண்டே மதுரை என்ற பெயர் பிற்காலத்தில்
வழங்கலாயிற்று:

சிவபெருமானுக்கு கணக்கராக இருந்து வழிபாடு செய்து நிற்கும் மூர்த்தியே சண்டிகேஸ்வரர். சிவபெருமானுக்கு சூட்டிய மாலையை எடுத்து சண்டி கேஸ்வரருக்கு சூட்டி வழிபாடு செய்தால், நமது பிரச்னைகளை இம்மையிலும் நன்மைத் தரும் தயாள மூர்த்தியிடம் தக்க தருணத்தில் எடுத்துக் கூறி எப்படிப்பட்ட தீராத பிரச்னைகளையும் இந்த சண்டிகேஸ்வரர் தீர்த்து வைப்பார் என்கிறார் இடைக்காடர்.

‘‘கணக்கின் நாயகன் தமக்கு
சிவனார் சூடிய மாலை
சூட்டியே தம் துயரை விவரிப்பார்
தமக்கு யீராறு திங்களுள் விடிவை
தேடித் தருவான் ஒன்றும் பொய்யில்லையே’’

என்ற அவரது பாடலால் தெளிவாகலாம். அம்பிகைக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களை கண்டு நாம் மெய் சிலிர்த்ததுண்டு. ஆனால், முருகப் பெருமானுக்கு, பக்தர்கள் இக்கோயிலில் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகப் பின்நாள் இந்த வைபவம் நடைபெறும். இதனை ‘இடும்பன்’ என்ற தெய்வம் இருந்து வழிநடத்தி அருளும் என்று கோரக்கர் பேசுகின்றார்.

‘‘பொல்லாங்கு போக்குவிப்பான்
போகாத் துயரை துடைத்து வழித்
துணையுந் தானாவான் - பொன்
னொடு பொருளுந் தந்து மேலான
செல்வங் கொணர்ந்தி டுஞ் செல்வ
னை- அழகனை- அப்பனை-
அறுமுகனை பூக் குழி யிறங்கி
நேர்ந்து நிற்பாருக்கு
யென்றுங் காவலாவானிடும்பனே
யிடர் களைவானே.’’

எப்படிப்பட்ட அவமானத்தையும் அகற்று வான். நிறைய பணம் தருவான். வாழ்வில் பற்பல சுகபோகங்களை கொண்டு வந்து சேர்க்கும் முருகப்பிரா னுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செய்பவருக்கு இடும்பன் துணையாய் இருந்து துயரைத் துடைப்பான் என்று பேசுகின்றார் சித்தர்.

‘‘சிவனார்க் கேத்த நாளதனிலே
சங்காபிடேகம் கண்டுய்ய
ரிசியருடனே சனகனு மிதிலை
யாண்டானு மரூபியென நிற்ப
கண்டு புளங் காகித மெய்தினமே.’’

என்கின்றார் புலிப்பாணியார். சிவராத்திரி காலத்தில், இம்மையிலும் நன்மை பயக்கும் சிவனாருக்கு பலவித ஹோமங்களும் சங்காபிஷேகமும் நடப்பதை பற்பல ரிஷிகளுடன் தச ரத மகாராஜனும் ஜனக மகாராஜனும் அரூபமாக இருந்து தொழுவதை நேரில் பார்த்து இன்புற்றோம் என்று பேசி மகிழ்கிறார் புலிப்பாணி சித்தர். மேலும்,

‘‘ஈண்டு காலமிதனிலே
கலந்து தொழுவார் தம் வினை
யகலுவதல்லால் பிறவியெனுஞ்
சிறையும் விலகுமே’’

என்றார். பிறவி என்பது இந்த பூஜையில் பக்தியுடனும் சிரத்தையுடனும் கலந்து கொள்வாருக்கு இல்லை என்று பிரமாணம் செய்கின்றார் சித்தர்.

‘‘ஆறேழுடனே யீராறு சேருந்
தைலாபி டேகங் கண்டராதிப்பார்
தம் குலத்து மந்த பாக்யமோடும்
மகிமையுக்கு றையில்லை
மத்தியபுரி யன்னை கடாட்சந்
தன்னால் வியாட்சியமும்
வெல்லலாமே.’’

-பலகாலம் கோர்ட் விஷயமாக அலைந்து திரிவோர் சிவபெருமானுக்கு நடைபெறும் ஐம்பத்து நான்கு தைல அபிஷேகம் கண்டு தொழுதால் வெற்றி பெறுதலோடு, மத்திய புரி அம்பிகை கருணையால் வியாஜ்ஜிய விவகாரமே இல்லாத மகிழ்வான வாழ்வை அடையலாம் என்கிறார் பாம்பாட்டி என்னும் சித்தர்.

‘‘குரு தோசமறுப்பான் குணாளன்
தென் திசை யுறைவோன்’’

என்றார் கோரக்கர். குரு தோஷத்தை முழுமையாக கலைபவனே இங்கு குடிகொண்டுள்ள தட்சிணாமூர்த்தி,

‘‘சம்பக சட்டி, மதி தேயவருமட்
டமி தனிலே வயிரவ பூசை
புரிந்தே கார புளியன்னம் படைத்
தீய கனவு வாராது - துர் மரண
மகலும் - நன்மையெலா மண்டும்
தீர வாராய்ந்து சொன்னோமிதே’’

என்றார், அகத்தியர். கார்த்திகை மாத சஷ்டி திதி, தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு காரமான புளியோதரை படைத்து, தொழுது விநியோகிக்க, கள்வர் பயம் விலகும். துர் மரணம் நேராது. எல்லா நன்மைகளும் விளையும் என்பதாம். இம்மையில் நன்மைத் தருவார் கோயில் மதுரை நகரில் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum