Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பூச்சொரிதல் விழா

Go down

மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பூச்சொரிதல் விழா Empty மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக பூச்சொரிதல் விழா

Post by oviya Wed Dec 10, 2014 1:37 pm

சென்னை, : மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக 1008 மகளிர் பங்கேற்ற பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பகல் 1 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, நல்ல மழை பெய்து மக்கள் வளமுடன் இருக்கவும், நோய் இன்றியும், நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டியும் பல வாசனை புஷ்பங்களை 1008 கூடையில் எடுத்துக்கொண்டு 1008 மகளிர் வீதி வலம் வந்து மூலவர் அம்பாளுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். ரூ.300 கட்டணம் செலுத்தியவர்களுக்கு அம்பாளுக்கு சாற்றிய புடவை ஒன்றும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு மஞ்சள், வளையல் மற்றும் நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா பாரம்பரிய வாத்தியங்களுடன் நடைபெற்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum