Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சபரிமலையில் இன்று நடை திறப்பு

Go down

சபரிமலையில் இன்று நடை திறப்பு Empty சபரிமலையில் இன்று நடை திறப்பு

Post by oviya Thu Dec 11, 2014 1:40 pm

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் மகேஸ்வரர் முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் போற்றி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துகிறார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை (17ம் தேதி) அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து உஷபூஜைக்கு பின்னர் காலை 7.45 மணியளவில் அடுத்த ஆண்டுக்கான புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.

ஐப்பசி மாத பூஜைகள் வரும் 21ம் தேதி வரை நடைபெறும். 17 முதல் 21ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த 5 நாட்களி லும் நெய் அபிஷேகமும் நடைபெறும். 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஐப்பசி மாத பூஜைகள் நிறைவடையும். மீண்டும் சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு நவ.1ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலையில் இன்று மண்டல பூஜை : பக்தர்கள் குவிகின்றனர்
» இன்று மண்டல பூஜை லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர்
» ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
» ஓணம் பண்டிகை சிறப்பு பூஜை : சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum