Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து

Go down

மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து Empty மார்கழி மாத சிறப்பு பூஜை : ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை ரத்து

Post by oviya Thu Dec 11, 2014 2:02 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 16ம் தேதி காலை 10.31 மணிக்கு தனுர் (மார்கழி) தொடங்கி ஜனவரி 14ம் தேதி மாலை 6.20 மணிக்கு முடிகிறது. எனவே 17ம் தேதி முதல் ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்று முதல் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரம் ஜனவரி 14ம் தேதி வரை படிக்கப்படவுள்ளது. இதையொட்டி மார்கழி மாதம் முழுவதும் தினமும் 1 பாசுரம் என 30 நாட்களுக்கு 30 பாசுரத்தை அர்ச்சகர்கள் படிக்கவுள்ளனர். மேலும் ஏழுமலையான் கோயில் தவிர சீனிவாசமூர்த்திக்கு பதில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஏகாந்த சேவை செய்யப்படவுள்ளது.

வைகுண்ட ஏகாதசி:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர் சன்னதியொட்டி வைகுண்ட வாயில் உள்ளது. இதில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 தினங்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் இந்த வைகுண்ட வாயில் வழியாக அனுப்பப்படுகின்றனர். இந்த வாயில் வழியாக சென்று வந்தால் வைகுண்டத்துக்கு சென்ற பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே இந்த 2 நாட்களில் வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருவார்கள். அன்று வி.ஐ.பி.களுக்கு பாஸ் வழங்கப்பட்டு லகு தரிசனம் எனப்படும் குலசேகரப்படி வரை மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum