Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கொடிய தோஷம் எல்லாம் விலக்கும் திருக்கண்ணார்!

Go down

கொடிய தோஷம் எல்லாம் விலக்கும் திருக்கண்ணார்! Empty கொடிய தோஷம் எல்லாம் விலக்கும் திருக்கண்ணார்!

Post by oviya Thu Dec 11, 2014 2:07 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் குறுமாணக்குடி

சிவநேசச் செம்மல்களான சேக்கிழார் பெருமானும் மாணிக்கவாசகரும் அருட்பெரும் வள்ளலார் ராமலிங்க அடிகளாரும் தொழுது போற்றி நின்ற கண் ஆயிரமுடையார் திருக்கோயிலைப் பற்றி அகத்தியர் பெருமான்,

‘‘திங்களே பொங்கரவம் தாழ்ப்புனற்சூடி
பெண், ஆண் ஆய பேரருளாளன்
யொருகாலும் பிரியாத கண்ணார்
கோயில் தொழுவார் தமக்கே இடரொடு
பாவமும் நண்ணா’’

-என்றார். இங்கே சுயம்பு மூர்த்தியான சிவபெருமான், முருகுவளர்க்கோதை நாயகி சமேதராக அருள்பாலிக்கின்றார். கார்த்திகை சோமவாரத்தில் பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அரூபமாய் தொழுதேத்தும் பூவுலக கயிலாயமிது என்கின்றார் சிவவாக்யர்.

‘’தேளாந் திங்கள் நாளதனிலே நான்முகனோடு
யிந்திரனுமே கண்ணிலிருந்து மறைந்து
தொழுதேத்த வல்லானை வள்ளலைத்
தொழுதே பிறவித் துயரறுப்பீரே’’

-என்றார். தேளாம் என்றால் கார்த்திகை மாதத்தையும் திங்கள் என்பதனை சோமவாரம் எனவும் கொள்க. திருமூலர், இத்தலத்துறை ஈசனை நேரில் கண்டவர். இவர் ஒருமுறை இத்தலம் வந்து தங்கி இறைவனை வழிபாடு செய்தார். அப்போது மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டுப் பெற்று, விண்ணு லகையும், இம்மண்ணுலகையும் தன் திருவடியால் ஓங்கி நின்றளந்த வாமனமூர்த்தி, இச்சிவபெருமானை பூஜித்து நிற்க கண்டு, கண்ணீர் ஆனந்தமாக வடிய நின்றார். தமது பாடலில்,

‘’திரிவிக்கிரமனே குறுமாணியாய்
மாபலியிடமிருந்து அடிமூன்று மண்
வேண்டி விண்ணொடு மண்ணுமளந்து
ஆக்கமாய் நின்றே சிவபூஜை புரியயிஃது
குறுமாணக்குடி யாகுமே’’

-என பேசுகின்றார். வாமனமூர்த்தியாம் குறுமாணி பூஜித்த சிவன் இவர். இதையே ஆதாரமாகக் கொண்டு இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற பெயரும் வழங்கலாயிற்று.

‘’அகலிகை தனையடைய தேவர்கோண்
வடிவுமாறி நிற்பக் கண்ட முனிபுங்கனின்
சாபந்தன்னாலேந்திய பில்லிமேனி கண்ணா
யிரமாகவே கண்ணார்கோயிலமர் ஈசனை
முக்கண்ணனை யேத்தியே சாபதாபங்கெட...’’

-என்ற சிவவாக்கியர் பாடல், நமக்கு ஒரு உண்மைச் சம்பவத்தை உணர்த்துகிறது. தேவர்களின் தலைவனான இந்திரன் கவுதம முனிவரின் பத்தினியான அகல்யா மீது மோகம் கொண்டு, முனிவரைப் போன்றே வடிவு தாங்கி அக ல்யா மாதாவை நெருங்குகையில், கவுதமமுனி வெகுண்டு இந்திரனைப் பார்த்தார். இந்திரன் பயந்து பூனை வடிவு ஏந்தி, பதுங்கி ஓடினார். பூனையின் வடிவில் இருக்கும் இந்திரன் உடல் எங்கும் ஆயிரம் கண்கள் தோன்ற சபித்தார் முனிவர். அகல்யா மாதாவை கல்லாகுமாறும் கொடும் சாபம் தர, பின் சாந்தமுற்று, ராமபிரான் பாதத் துகள்பட கல் உரு மாறி முன்போல் பெண் ஆவாய் என்றார். பூனை வடிவோடு சாபம் பெற்ற தேவர்கள் தலைவன் பிரம்ம தேவனை அடைந்து தன் தவறை ஒப்புக்கொண்டு சாபவிமோசனம் வேண்ட,

‘’அயனும் அகமிகவிறங்கி குறுமாணி
கொண்டாடிய குறுமாணகுடி புகுந்தே
தீர்த்தமாடி தாந்தோன்றி நிற்குமப்
புவியுறை கயிலாயநாதனை தொழுது
முன்போல் பெறுஉரு’’

-என்கின்றார் கொங்கணர். இங்கு குறுமாணி என்பது, மகாவிஷ்ணு வாமன ரூபராய் தோன்றி சிவனை வழிபட்ட தலம் என்றே கொள்க. அன்று தொட்டே பெருமாளின் பெயருடன் சிவபெருமான் பெயரும் சேர்ந்து மக்கள் கொண்டாடி வழங்கலாயினர். சிவராமகிருஷ்ணன், வெங்கடசுப்பராமன் என்பன இரு உதாரணங்கள். தேவேந்திரன் உண்டாக்கி, நீராடிய பொய்கையே இத்திருக்கோயிலின் புண்ணியத் தீர்த்தமான இந்திர தீர்த்தம். இத்தீர்த்தத்தின் பெருமையை பாம்பாட்டிச் சித்தர் பின்வருமாறு போற்றுகின்றார்:

‘’சாபத்தின் தன்மையே தாயினுமாகுக
சாபமது காலந்தொட்டு வரினு விடுக
சாபமே வாழ்கை சனியாகி தீய்க்கினு
மல்லலது பலவழி மேலோர் சாபத்
தாலாயினுங் கருக்குமிவ் விந்திர தீர்த்தமே’’

-என்கிறார். எப்படிப்பட்ட சாபம் யாரால் வந்தபோதும் கவலை வேண்டாம். மூதாதையர் சாபம், முனி சாபம், பெண் சாபம், ஆச்சாரியன் சாபம், புத்திர சாபம் என அறுபத்து நான்காயிரம் சாபமும் தீர ஒரே வழி இந்த முருகுவளர்க்கோதை அன்னை குடி கொண்டிருக்கும் இந்திர தீர்த்தத்தில் நீராடி, கண்ணாயிரமுடையச் சிவனை சரணமடைவதே என்ற பொருள் நம்மை வியக்க வைக்கிறதன்றோ! இங்கு தலவிருட்சம், கொன்றை மரம். இந்த மரத்தைப் பூஜித்து நின்றே அன்னை முருகுவளர்க்கோதையார், கண்ணாயிரமுடைய சிவபெருமானை கைப்பற்றினார். எண்ணிய மணவாளனை அடைய, காதல் கணவன் கரம் பற்ற, பெண்கள் தொழவேண்டிய கற்பக விருட்சமே இந்த கொன்றை மரம். இதனை
அகத்தியர் தமது ஜீவநாடியில்,
‘’புவியிலொரு கற்பகத்தரு கண்டோமே
முருகுக்கோதை குடி கொளுங்குறு
மாணக்குடியுறை கொன்றை தமைத்
தொழுதெழுவார் தம்முள்ளக் கிடக்கை
யீடேற யெண்ணிய மணாளனை யெய்துவர்
திண்ணஞ் சொன்னோம்‘’

-என்றார். சிவாகம விதி வழி செய்யப்படும் பூசைகள் இறைவனை ஆனந்தத் தாண்டவமாட வைக்கிறது என்றறிக.

‘’வம்ச விருத்தியோடு கல்விகேள்வி
தழைக்க நிற்போர் ராப்பூசை தனிலமுது
கனியோடு கற்கண்டுமிறைவருக்கே
படைத்தன்னமிட சித்தியாமே
நேத்திராடன பீடையகல சோதி
கொண்டு சோதியிலாராதிக்க பீடைபோமே’’

-என்ற சிவ வாக்கியர் பாடல் மிகவும் போற்றத் தக்கது. குழந்தை வரம் வேண்டுவோர், தாம் பெறும் குழந்தைகள் அழகுடனும், அறிவுடனும், நிறைந்த கல்வி, செல்வம், மேன்மை பெற்று வாழவேண்டும் என்று எண்ணுவராயின், கண்ணாயிரமுடைய சிவபெருமானுக்கு அர்த்த சாம பூசையின் போது பால், பலவகையான பழம், கற்கண்டு போன்றன படைத்து நிவேதனம் செய்து, உண்ண வேண்டும். பிறகு ஒரு நல்ல நாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய, நல்ல சம்பத்துடைய குழந்தைகள் பிறக்கும். கண்ணில் தோன்றும் கோளாறுகள் பற்பல தோஷங் களினாலேயே ஏற்படுகிறது. இத்தோஷங்கள் நீக்கப்பட்டால், கண் கோளாறுகளும் நீங்கிவிடும் என்பது சித்தர்கள் வாக்கு. எப்படிப்பட்ட கொடிய தோஷமாயினும், கண்பாதிப்பு ஏற்படாது காக்க, இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சாலச்சிறந்தது என்பதாம்.

அம்பாள் முருகுவளர்க்கோதை நாயகி சந்நதிக்கு மேல் பன்னிரு ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேஷம் முதல் மீனம் வரையிலான இக்கட்டங்களுக்கு சித்தர் பெருமக்கள் பற்பல யாகங்களைச் செய்தும், ஜப, தபசுகளைச் செய்தும் சக்தியை ஊட்டி உள்ளனர். குங்குமத்தால் அன் னை முருகுவளர்க்கோதை நாயகியை ஸஹஸ்ரநாம ஆராதனையால் அர்ச்சித்து, பால் பாயசம் நிவேதனம் செய்ய, ஜாதகத்தில் எப்படிப்பட்ட கொடிய தோஷங்களும் நிவர்த்தியாகும் என்கின்றார் கொங்கணர்:

‘’கோளால் கோளாறு கொண்டு
தடுமாறி யல்லலாயிரங் காணும் மாந்தர்க்
கோதுதும் முருகுக் கோதை தன்னை
மதியிலா நாளும் முழுமதி ராவுங்
குங்குமாராதனையாற்றி செம்மலர் சாத்தி
ஆவமுது பானகமோடமுதும் படைத்தே
தண்டஞ் சமைக்க கொடுங்கோளுங்
குளிர்ந்தின்பமீயுமே’’

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum