Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்

Go down

தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம் Empty தமிழ் மாத பிறப்பையொட்டி சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம், அபிஷேகம்

Post by oviya Thu Dec 11, 2014 2:50 pm

திருவிடைமருதூர் : தமிழ் மாத பிறப்பையொட்டி, திருப்பனந்தாள் அருகே உள்ள சிவசூரியபெருமான் கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோயில் என்ற இடத்தில் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான உஷாதேவி, பிரத்யுஷாதேவி உடனாகிய சிவசூரியப் பெருமான் கோயில் உள்ளது. இங்கு நவக்கிரக மூர்த்திகள் தங்களுக்குரிய வாகனம், ஆயுதங்கள் இல்லாமல் காட்சி அளிக்கின்றன.

இக்கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாதமான முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு ஹோமம் நடை பெறும். கடந்த 16ம் தேதி மாசி மாதமான முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோயிலின் வாயில் முன்பு சிறப்புகுண்டம் அமைக்கப் பட்டு ஹோமம் மற்றும் தீபாதரணை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்து கோயிலின் நடைமண்டபத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷகம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் முடிந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதே நேரத் தில் நவக்கிரக நாயகர்களுக்கும் இதே போல் நடந்தது. திருவாவடுதுறை ஆதினம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதின பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, பணியாளர்கள் செய்திருந்தனர்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பிள்ளையார்பாளையம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம்
» ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு மூலிகை பொருளால் சிறப்பு அபிஷேகம்
» கைலாசபுரம் செல்வவிநாயகர் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
» கபாலீஸ்வரர் சிறப்பு அபிஷேகம்
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum