Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்! ஏ.ரி.மாசிலாமணி

Go down

சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்! ஏ.ரி.மாசிலாமணி Empty சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம்! ஏ.ரி.மாசிலாமணி

Post by oviya Fri Dec 12, 2014 12:42 pm

சிறுபான்மை மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு கிடைத்துள்ள கடைசி சந்தர்ப்பம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஆகும். தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் தேர்தலாக இதை மாற்றியமைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.....

'மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பட்டிருப்பு தேர்தல் தொகுதியானது இலங்கையிலேயே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு தேர்தல் தொகுதியாகும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இத்தொகுதியில் 87.5 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டன. அதுபோல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் 90 வீதமான வாக்குகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகளவு கல்வி மான்களையும், அதிகாரிகளையும் கொண்டது பட்டிருப்புத் தொகுதிதான். ஆனால் இதுவரையில் இத் தொகுதியின் கீழுள்ள படுவான்கரையில் ஒரு தேசிய பாடசாலையும் அமையப் பெறவில்லை.

பேதங்களை மறப்போம் ஒன்றுபடுவோம் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற எமது மகுட வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள இருக்கின்றோம்.

எம்மவர்கள் மத்தியில் எந்த விதமான பேதங்கள் காணப்படினும் அவைகள் அனைத்தினையும் களைந்து விட்டு ஒற்றுமையுடன் மாற்றத்தினைக் கொண்டு வரவுள்ளோம்.

30 வருடங்களுக்குப் பின்னர் தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிக்கின்ற சந்தர்ப்பமாகவே நாம் வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலைப் பார்க்கின்றோம். எனவே எமது மக்கள் இச்சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் இதுபோலொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமோ என தெரியாது. அதிலும் பட்டிருப்புத் தொகுதி மக்கள் இவற்றுக்காக அதி கூடிய ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என எதிர் பார்க்கின்றோம்.

இது இவ்வாறு இருக்க எம்மை இனந்தெரியாத நபர்களும் பின்தொடர்ந்து கொண்டும் நோட்டம் இட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். எதற்காக எம்மைக் கண்காணிக்கின்றார்கள் எனத் தெரியாதுள்ளது. இந்த விதத்தில் எமது மக்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.

என்னையும் எனது செயற்பாடுகளையும் தினமும் இனந் தெரியாத நபர்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள். இது எமக்கு விடும் ஒரு அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். இருப்பினும் எம்மை யாராலும் அடக்க முடியாது.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எவரும் வேண்டுமென்றே போய் சேரவில்லை. பலாத்காரமாகத்தான் அனைத்து தமிழ், இளையுர், யுவரதிகளும், இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் கை, கால், இல்லாமல் அங்கவீனமாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் தற்போது உள்ளார்கள், இவ்வாறான அங்கவீனர்களைக்கூட இந்த அரசாங்கம் இதுவரையில் கவனிக்கவில்லை.

எதிர் காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழத்தில் பொறியியல் பீடம் அமைத்தல், பாரிய தொழில் பேட்டைகள் அமைத்தல், மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியை மேம்படுத்தல், தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், போன்ற பல செயற்றிட்டங்களை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.

எமது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற வாழைச்சேனை காகித ஆலை, கிழக்குப் பல்கலைககழகம், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, இந்துக் கல்லூரி போன்றன உருவாக்கப்பட்டதாகும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எமது தமிழ் மக்கள் வர இருக்கின்ற தேர்தலில் உணர்வுபூர்வமக வாக்களிக்க வேண்டும். இது இந்த உலகிற்குத் தெரிய வேண்டும் இதற்கு பட்டிருப்புத் தொகுதி மக்கள் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்' என்றார்.



வன்முறையாளர்களுக்கு பதிலடி கொடுப்போம்! அரசரெட்ணம் சசிதரன்

மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களே மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர். இம்முறை பொது அணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்து மட்டக்களப்பு மக்கள் மஹிந்தவின் பக்கம் இல்லையென மீண்டுமொருமுறை நிரூபிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அரசரெட்ணம் சசிதரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிகையில்.....

'ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அடிமட்ட மக்கள் முதல் மாவட்டம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடங்களில் நடைபெற்ற பல தேர்தல்களின் அடிப்படையில் பல வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளன. அதுபோல் இம்முறையும் எமது பிரச்சாரத்தைப் பொறுக்காத சிலர் எம்மீது வன்முறைகளைப் பிரயோகிக்கலாம் எனவும், நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இருந்தாலும் எம்மை யாராவது வேண்டுமென்றே வன்முறைகளுக்கு இழுப்பார்களேயானால் நாங்களும் பதிலடிகொடுப்போம், ஆனால் என்னைப் பொறுத்த வரையில் எமது கட்சி சார்பாக எவரும் வன்முறைகளில் ஈடுபடாமல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்குத் திடமிட்டுள்ளோம்.

பொலிசாரும், தேர்த்தல் ஆணையாரும் சரியான முறையில் செயற்பட்டால் தேர்தல் வன்முறைகள் என்ற பதத்திற்கே இடம் இல்லாமல் போய்விடும். ஆனால் பொலிசாரும், தேர்த்தல் ஆணையாரும் அவர்களது கடமைகளில் சரியான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இவற்றினையும் மீறி அவர்கள் பிழையான வழியில் நடந்தால் நாங்களும் பிழையான வழியில் செயற்பட வேண்டிவரும். இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில் அனைத்திற்கும் துணிந்து செயற்படுவதற்குத் தயாராகவுள்ளோம்.

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று உத்தரவிட்ட போதும் அப்போது 122000 இற்கு மேற்பட்ட வாக்குகளை இந்த மாவட்ட மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அளித்திருந்தனர். அந்த வகையில் இம்முறை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்திலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எமது பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களே மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்

எமது கட்சி சார்ந்த தலைவர்கள் மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, உள்ளிட்ட குழுவினர் இந்த மாத இறுதியில் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளனர். அதற்குரிய திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை மட்டக்களப்பிலே மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்றையும் நடாத்த தீர்மானித்துள்ளோம்.

மட்டக்களப்பு மக்கள் இலங்கையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தற்போது காலம் கனிந்துள்ளது. கடந்த தேர்தலிகளில் வாக்களித்த வீதத்தினைவிட இம்முனை மட்டக்களப்பு மக்கள் அதிகூடிய அளவு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம், என்றென்றும் மட்டக்களப்பு மக்கள் எங்கள் பக்கம்தான் உள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 1978 ஆம் ஆண்டிலிருந்து எமது பக்கமே உள்ளார்கள் பின்னர் 1984 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் காரணமாக சற்று தளம்பல் ஏற்பட்டது தற்போது மீண்டும் இம்மாவட்ட மக்கள் எமது பக்கம் வந்துள்ளார்கள்.

இலங்கையிலே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கொடூர ஆட்சிக்கு வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் மூலம் மட்டக்களப்பு மாவட்டம் வாழ் தமிழ் பேசும் மக்கள் நல்ல பாடம் புகட்டவுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும். இது ஒரு எழுச்சிமிக்கதாகவும், புரட்சி மிக்கதாகவும், காணப்படும் என்பதில் எமக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது' என்றார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுபான்மை மக்கள் ஒருபோதும் அரச எதிர் நிலைப்பாட்டினை எடுக்கக்கூடாது: அருண் தம்பிமுத்து
» தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
» இலங்கை வரும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை!
» மகிந்தருக்கு அடுத்த இடியா? முஸ்லிம் காங்கிரஸின் கடைசி நிமிடங்கள்! மனம் திறந்தார் ஹசன் அலி பா.உ.
» அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum