Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ராவய பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

Go down

ராவய பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்  Empty ராவய பத்திரிகை ஆசிரியர் விசாரணை: ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்

Post by oviya Fri Dec 12, 2014 12:51 pm

ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தியமையைக் கண்டித்து ஊடக அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் ஊடக அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொழும்பு - கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்களும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு செயலாளர், ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றார் என்று கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காவற்துறையினர் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராக எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு கோசம் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நிறுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.

சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உட்பட ஐந்து ஊடக அமைப்புகளும் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்ரர் ஐவன் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum