Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சிறப்பான வாழ்வளிக்கும் சிவகண பூஜை

Go down

சிறப்பான வாழ்வளிக்கும் சிவகண பூஜை Empty சிறப்பான வாழ்வளிக்கும் சிவகண பூஜை

Post by oviya Fri Dec 12, 2014 1:15 pm

திருநிலை

செங்கல்பட்டு - மாமல்லபுரம் சாலையில் செங்கல்பட்டில் இருந்து 15 கி.மீ. தொலை விலுள்ள திருக்கழுக்குன்றம் தலம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இங்கு வேதமே மலை உருவாக இருப்பதால் இங்குள்ள இறைவன் வேதகிரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். திருக்கழுக்குன்ற த்திலிருந்து ஓரகடம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் திருநிலை என்கிற சிறிய கிராமம் உள்ளது. இங்கு சிவபெருமான், சுயம்பு லிங்கமாக, பெரியாண்டவர் என்ற பெயரோடு எழுந்தருளியிருக்கிறார். இந்த ஆலயத் தின் பின்னணியில் பல கதைகள் கூறப்படுகின்றன.

பார்வதியும், சிவபெருமானும் விளையாடிக் கொண்டிருந்தபோது தேவி இறைவனின் கண்களை விளையாட்டாக தன் கரங்களால் மூட உலகத்தை இருள் கவ்வியது. இறைவன் கோபமுற்று தேவியை பூலோகத்தில் சென்று பெண்ணாகப் பிறக்குமாறு சபித்தார். தேவி மகத நாட்டு மன்னன் விளாசநாதனுக்கும் அரசி தேவகிக்கும் மகளாகப் பிறந்து, எப்போதும் சிவத் தியானத்தில் ஈடுபட்டாள். இதற்கிடையில் ஒரு முனிவர் சாபத்தால் வேதாளமாகத் திரிந்த இந்திரனை சிவபெருமான் வேடுவனாக வந்து சாபவிமோசனம் அளித்து, பூங்குழலி என்ற பெயரில் வளர்ந்த பார்வதி தேவியை மணந்தார்.

பூலோகத்தில் மக்களைத் துன்புறுத்திய அசுர சக்திகளை அடக்க சிவபெருமானின் வியர்வை யிலிருந்து 21 பூதகணங்கள் தோன்றின. ஆனால், அவை அடங்காமல் போகவே அவற்றை மண்ணாகப் போகுமாறு இறைவன் சபித்தார். அவையே திருநிலை எனும் இத்தலத்தில் இன்றும் பூதகணங்களாக அமைந்துள்ளன. சிவபெருமானும் பார்வதி தேவியும் மக்களின் துன்பங்களைக் களையும் பொருட்டு பூமிக்கு வந்து பெரியாண்டவர்-அங்காளபரமேஸ்வரியாக திருநிலைக்கு வந்து தங்கி அருள்பாலிக்கின்றனர்.

திருக்கழுக் குன்றத்திற்கு பிழைப்பிற்காக வந்த ஒருவரின் கனவில் இறைவன் தோன்றி தான் திருநிலையில் ஜோதி வடிவாக எழுந்தருளியிருப்பதாகத் தெரிவிக்கவே அவர் அங்கு சென்று இறைவனை வணங்கினாராம். இன்றும் இத்தலத்தில் மக்கள் 21 பூதகணங்களை மண் உருண்டைகளாகப் பிடித்து சிவ பெருமானைச் சுற்றிலும் வைத்து வணங்கு கிறார்கள். 300 ஆண்டுகள் பழமையான திருநிலை பெரியாண்டவர் ஆலயம் காலவெள்ளத்தில் போதிய பக்தர்கள் வருகையின்றி பழுதுபட்டு பொலிவிழந்து இருந்தது.

ஊர் மக்கள் இக்கோயிலின் பெருமையும் நிலைகுலைந்து விடாமல் இருக்க, இதனை நல்ல முறையில் புனரமைத்து 2003ம் ஆண்டு குடமுழுக்குச் செய்துள்ளனர். தற்போது ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். பெரியாண்டவர் சந்நதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வடபுறம் சித்தாமிர்தக் குளக்கரையும் தென்புறம் ஏரிக்கரையும் உள்ளன. ஐந்து கலசங்களுடன் கூடிய மூன்று நிலை கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. இடப்புறம் செல்வ விநாயகர் சந்நதியும் வலப்புறம் ஆறுமுகர் சந்நதியும் உள்ளன.

அடுத்து 16 கால மண்டபம். கருவறை நுழைவாயிலின் இருபுறங்களிலும் விநாயகர், முருகன் சந்நதிகள் உள்ளன. நுழைவாயிலின் மேலே சிவ பெருமான் பார்வதி தேவி சகிதம் ரிஷபாரூடராகக் காட்சி தருகிறார். சுயம்புலிங்கத்திற்கு மேற்புறம் சிவபெருமான் நான்கு கரங்களோடும், பின்னிரு கரங்களில் மான் மழு ஏந்தி, முன் கரங்களில் அபய வரத முத்திரைகளோடு அருட்காட்சி அளிக்கிறார். அவருக்கு அருகில் பார்வதி தேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். சுதையினாலான இந்த இரு சிலைகளும் சிவசக்தி ஐக்கியத்தை பறை சாற்றுகின்றன.

அடுத்து பெரியாண்டவர் இரு கரங்களோடு வலக் காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மடக்கி சுதை உருவில் அமர்ந்திருக்கிறார். வலக்கையில் திரிசூலமும், இடக்கையில் கபால பாத்திரமும் உள்ளன. பெரியாண்டவரின் வலப்புறம் அங்காள பரமேஸ்வரி நான்கு கரங்களோடு அமர்ந்து காட்சி தருகிறாள். பின்னிரு கரங்களில் டமருகம், பாசம் ஆகியவற்றோடு முன் வலக்கரத்தில் அபய முத்திரை காட்டி, இடக்கரத்தில் குங்கும பாத்திரத்தை ஏந்தியிருக்கிறாள்.
கருவறையில் சுயம்பு லிங்கமாக பெரியாண்டவர் மேற்கூரையின்றி வெட்ட வெளியில் எழுந்தருளியிருக்கிறார்.

மேற்கூரையில்லாத தால் அன்றாடம் சூரியனின் கதிர்கள் இந்த லிங்கத்தை முழுக்காட்டுவது இத்தலத்தின் சிறப்பாகும். கருவறையின் இருபுறங்களில் சிவன் மற்றும் சக்தி பாதங்கள் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பிராகார மதில் சுவரில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கும் காட்சியைக் காணலாம். தட்சிணாமூர்த்தி, பைரவர், அதிகார நந்தி, அர்த்தநாரீஸ்வரர் சந்நதிகளும் உள்ளன. சிவபிரான் பெரியாண்டவராக பூமிக்கு வந்தபோது நந்தியம் பெருமான் அதிகார நந்தியாக அவரோடு வந்ததாக ஐதீகம்.

ஆலயத்தின் வடபுறம் சித்தாமிர்தக் குளம் உள்ளது. இதில் பக்தர்கள் புனித நீராடி பெரியாண்டவரைத் தரிசிக்கின்றனர். இனிமையான இந்த சித் தாமிர்த தீர்த்தத்தின் நீர் அருமருந்தாகக் கருதப்படுகிறது. சித்தாமிர்தக் குளத்தில் நீராடி பெரியாண்டவரை ஆறு வாரங்கள் வழிபட, வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மகப்பேறு வேண்டும் தம்பதிகள் மற்றும் வாழ்க்கையில் மங்கலங்களும் மகிழ்ச்சியும் நிலவவேண்டும் என்று கோரிக்கையோடு வருகின்ற பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து இங்கு நடக்கும் சிவகண பூஜையை தரிசிக்க வேண்டும்.

இத்தலத்தின் சிறப்பே இதுதான். இந்த பூஜையை பற்றிய விரிவான வழிமுறைகள் பெரியாண்டவர் புராண வரலாறு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. சுயம்புலிங்கமான பெரியாண்ட வரைச் சுற்றி 21 சிவகணங்களை 21 மண் உருண்டைகளில் ஆவாகனம் செய்து, பூஜைகளை பக்தர்களே செய்கின்றனர்.
சிவபெருமான் பூமியில் தோன்றி ஒரு நிலையாய், திரு நிலையாய் நின்ற இடமான திருநிலைத் திருத்தலம் பல சிறப்புகளைக் கொண்டது. ஈசன் வந்து தங்கிய இடம். அவர் பாதம் பதித்த இடம், பூதகணங்கள் மண் உருண்டைகளாகக் காட்சி தரும் தலம். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு சாலையில் திருக்கழுக் குன்றத்திலிருந்து ஓரகடம் செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் திருநிலை பெரியாண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum