Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஆங்கிலேயருக்கு அருள்புரிந்த அனுமன்!

Go down

ஆங்கிலேயருக்கு அருள்புரிந்த அனுமன்! Empty ஆங்கிலேயருக்கு அருள்புரிந்த அனுமன்!

Post by oviya Fri Dec 12, 2014 1:32 pm

திருத்தெளிச்சேரி

புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு வடக்கே புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கில் உள்ளது திருத்தெளிச்சேரி ஆலயம். காரைக்காலில் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்று கொண்டிருந்த காலம். இந்த ஆலயத்தை தேவ கோட்டை நகரத்தார் கருங்கல்லாலான ஆலயமாக எழுப்பினர். இந்த ஆலயத்திற்கு தீப எண்ணெய் கிடைத்திட அருகிலுள்ள தோப்பில் இலுப்பை மரங்களை வளர்ப்பதற்காக பூமியைத் தோண்டி சீர்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ‘டங்’ என ஒரு ஒலி கேட்ட வேலையாட்கள் பதறிச் சென்று ஆலய நிர்வாகத்தினரிடம் விவரம் கூறினர்.

ஆலய நிர்வாகம் அதை பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த சமயத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்தவர்ழாந்தார்பருக்கே. அவர் மற்றும் உயர் நீதிபதி, முக்கிய அதிகாரிகள், பிரமுகர்கள் முன்னிலையில் வேலையாட்கள் பூமியை ஆழமாகத் தோண்டினர். ஒரு பெரிய தாம்பாளத் தட்டு ஒரு குழியை மூடியிருந்தது. தட்டை அகற்றிப் பார்த்தபோது, குழியில் ராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமன் ஆகியோரின் பஞ்சலோகச் சிலைகள் காணப்பட்டன. அனைவரும் வியந்து மகிழ்ந்தனர்.

பொதுமக்கள் அந்த பிரெஞ்சு அதிகாரிகளிடம், ‘இந்த விக்ரகங்கள் நாங்கள் வணங்கும் தெய்வங்கள். ஆகையால் இந்த விக்ரகங்களை எங்களிடம் ஒப்படையுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். இந்து சமய வழிபாடுகளையும், அவர்களின் மத நம்பிக்கைகளையும் மதித்த அதிகாரியும் அதற்குச் சம்மதித்தார். ஊர் மக்கள் மகிழ்ந்து எடுத்துச்செல்ல முயன்றபோது பொதுப்பணித்துறை அதிகாரியான ஒரு பிரெஞ்சுக் காரர், அனுமன் சிலையைக் காட்டி, ‘இந்தக் குரங்கு பொம்மையை என் மகளுக்கு விளையாட்டுப் பொருளாக எடுத்துச் செல்கிறேன்’ எனக் கூறி எடுத்துக்கொண்டார்.

உயரதிகாரியும் அவர் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் பொது மக்களைப் பார்த்து மற்ற சிலைகளையும் எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார். அதன்படி மற்ற சிலைகளைக் கொண்டு போய் பார்வதீஸ்வரர் ஆலய திருவாபரண அறையில் பத்திரப்படுத்தினர். அனுமனின் விக்ரகத்தை எடுத்துச் சென்ற அதிகாரி அதனைத் தனது மகளின் தொட்டிலுக்கு மேலே விளையாட்டு பொம்மையாகக் கட்டித் தொங்கவிட்டார். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் குழந்தை அழுது, உணவு உட்கொள்ள மறுத்தது. வலுக்கட்டாயமாக உணவை ஊட்டினாலும் அதை உட்கொள்ள முடியாமல் தவித்தது.

அதன் உயிருக்கே ஆபத்து வரும் கட்டம் நெருங்கியது. மிகச் சிறந்த மருத்துவர்கள் மருத்துவம் பார்த்தும் குணப்படுத்த முடியாமல் மருத்துவத் துறைக்கே சவாலாக விளங்கியது அந்தக் குழந்தை. அப்போது அந்த பிரெஞ்சு அதிகாரியின் வீட்டில் பணிபுரிந்த தமிழர்கள் அனுமனை இப்படி விளையாட்டு பொம்மையாகக் கட்டிப்போடக்கூடாது எனக் கூறி, ராமாயணத்தில் அனுமனின் பராக்ரமங்களை அவரிடம் விவரித்துச் சொன்னனர். உடனே பதறிப்போன அவர், ராமர், சீதை, லக்ஷ்மண விக்ரகங்களோடு, அனுமன் விக்ரகத்தையும் சேர்த்து வைக்குமாறும், ஐந்து வெள்ளி நாணயங்களை ஆலய பூஜை செலவிற்குக் கொடுக்குமாறும் அறிவுரை கூறினார்.

அதற்குப் பிறகு அதிசயத்தக்க முறையில் குழந்தையின் உடல் நலம் முன்னேறி உற்சாகமாக உணவுண்டு ஆரோக்யமாகத் திகழ்ந்தது. அதன்பின் ஊர்ப் பிரமுகர்கள் முயற்சி செய்து கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை உருவாக்கினர். ஆலயத்தில் ராமர், அன்னை சீதையோடும், இளவல் லக்ஷ்மணனோடும், அனுமனோடும் உற்சவத் திருமேனியாய் தரிசனமளிக்கிறார். மூலக்கரு வறையில் அபீஷ்டவரதர் எனும் திருநாமத்தோடு வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருட்காட்சியளிக்கிறார்.

மற்றொரு கருவறையில் அனுமன் கருங்கல் திருமேனியராய் முக்கண்கள், பத்துக் கரங்கள், ஐந்து முகங்களோடு காட்சி தருகிறார். உற்சவ அனுமன், பஞ்சலோக உருவினராய் முக்கண்கள், பத்துக்கரங்களுடன் வீர ஆஞ்சநேயராகக் காட்சி தருகிறார். இந்தத் தலம் திருத்தெளிச்சேரி என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான சம்பவம் கூறப்படுகிறது. இந்த ஊரில் பார்வதீஸ்வரர் எனும் பழம்பெரும் சிவாலயம் உள்ளது. முன்பொரு சமயம் நாட்டில் மழையின்றிப் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அப்பகுதியை ஆட்சி செய்த மன்னன் மழைக்காக ஈசனை வேண்டி நிற்க, நல்ல மழை பெய்தது.

கழனிகள் எல்லாம் நிறைந்தன. ஈசனே உழவனாக வந்து விதை தெளித்துச் சென்றார். எனவேதான் இத்தலம் திருத்தெளிச்சேரி என அழைக்கப்படுகிறது. ஒரு முறை திருஞான சம்பந்தப்பெருமான் நள்ளாற்று நாயகனை வழிபட்டுவிட்டு, இவ்வழியாகத் திரும்பிச் செல்கையில் இத்தலத்து ஈசனான பார்வதீஸ்வரரை தரிசிக்காமல் செல்வதைப் பார்த்த விநாயகப் பெருமான், அவரை ‘ஞான சம்பந்தரே, ஞான சம்பந்தரே’ என பத்து முறை கூவி அழைத்ததால் இவ்வூர் கூவிப்பத்து என்றும் வழங்கி, நாளடைவில் கோவில்பத்து என்றாகியது.

மகிமை மிக்க இத்தலத்தில் கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் பிரெஞ்சு அதிகாரிக்குப் பாடம் புகட்டிய அனுமனையும், அந்த அனுமனுக்கு ஆரம்பக் காலத்தில் அடைக் கலம் தந்த பார்வதீஸ்வரரையும் வணங்கினால் நீண்டநாள் உடல்நலம் குன்றியிருப்போர், மனக்கவலை உள்ளோரின் குறைகள் தீர்கின்றன என்கிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum