Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நடனத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம்

Go down

நடனத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம் Empty நடனத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம்

Post by oviya Mon Dec 01, 2014 1:39 pm

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி ஆலயத்தில் மாகாளி, காளி சக்தி பீட நாயகியாக அருள்கிறாள். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். ஈசனிடம் போட்டி தாண்டவமாடிய காளி, ஈசனைப் போன்ற தாண்டவத்தை தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி, `என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது.

எனவே இத்தலத்திற்கு வருபவர்கள், முதலில் உன்னை வழிபட்டபின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,' என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள். பரணி நட்சத்திரக்காரர்கள் கட்டாயம் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய தேவி இவள். இவளை வழிபட்டால் கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும்.

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை. இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 248 வது தேவாரத்தலம் ஆகும். முன் காலத்தில் ஆலமரக் காடாக இருந்து அதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum