Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன்

Go down

நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன் Empty நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன்

Post by oviya Tue Dec 02, 2014 1:24 pm

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமை கொள்ளும் பள்ளித்தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய கிளிநொச்சி, பூநகரி மண்ணின் பெருமையாக இருக்கக்கூடிய கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயம் நூறு அகவை காண்பதையிட்டும் அதன் வரலாற்று மகிழ்வில் பங்குகொள்வதையிட்டும் நான் மிக மகிழ்ச்சி அடைகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயம் நூற்றாண்டு பெருமையை நேற்று கொண்டாடி மகிழ்ந்துள்ளது. அதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி மண் தன்னுள்ளே தமிழர் வரலாற்று பொக்கிசங்களை கொண்டுள்ளது தமிழர் வரலாற்றை தேடுகின்றவர்கள் பூநகரி மண்ணின் வாசனையை நுகராது போகமுடியாது.

ஈமத்தாழிகளையும் கோட்டை கொத்தள சுவடுகளையும் தாங்கி நிற்கும் இத்தகு மண்ணில் கல்வி எனும் சிந்தனையால் காலூன்றி இன்று அகன்று விரிந்த பள்ளியாக இருக்கும் வேரவில் மகா வித்தியாலத்தின் தடங்கள் எப்போதும் பிரமிப்பு மிக்கவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



1914ல் உருவாகி ஆரம்பத்தில் முத்துக்குமாரசுவாமி வித்தியாலயமாக இருந்து பின் வேரவில் மகா வித்தியாலயமாக உயர்ந்து இன்று அதிபர் திருமதி பரமேஸ்வரி சோதிலிங்கம் அவர்களின் உயரிய வழிநடத்தலில் திறம்பட இயங்கி வருவதை நான் அறிவேன். கிளிநொச்சியின், ஒரு தாய்ப்பாடசாலைக்கு ஒரு பெண் அதிபராக இருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகின்றது.

வேரவில் மகா வித்தியாலயம் சுற்றியுள்ள கிராமத்து பிள்ளைகளின் எதிர்கால ஒளியாக வழிகாட்டியாக கலங்கரையாக திகழ்கின்றது. ஒரு நூறு வருட காலத்தில் இந்தப்பள்ளித்தாய் பெற்றெடுத்த பிள்ளைகள் எத்தனை எத்தனை அவர்களில் வல்லவர்கள் நல்லவர்கள் தியாகிகள் என எத்தனை, எத்தனைபேர். அத்தனைபேரின் பெருமையில் கிளிநொச்சி வேரவில் மகாவித்தியாலயம் நிமிர்ந்து நிற்பதை மனதார காணமுடிகின்றது.

இது நல்ல தருணம் இந்த பாடசாலையின் வரலாற்று தடத்தில் நடந்த அந்த அற்புதமான மனிதர்களை நினைத்துப்பார்க்க நல்ல வாய்ப்பு. அவர்களை வணங்கவும் புகழவும் பெருமைக்குரிய தருணம்.

இந்த தருணத்தில் நானும் உங்களோடு இணைந்துகொள்கின்றேன். இந்த பள்ளியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் என் நூற்றாண்டு தின வாழ்த்துக்கள். என தெரிவித்தார்.





















































நூற்றாண்டு பெருமைகொண்ட வேரவிலின் வளங்களை அபகரித்து இனத்சுத்திரகரிப்புக்கு ஆக்கிரமிப்பாளன் சூழ்ச்சி: வேரவில் இந்து மகா வித்தியாலத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

கிளிநொச்சியின் பழமை வாய்ந்த மண்னான பூநகரியின் பொன்னாவெளி கிராமசேவகர் பிரிவில் நூற்றாண்டு பெருமையை கிளிநொச்சி வேரவில் இந்து மகா வித்தியாலயம் நேற்று கொண்டாடி மகிழ்ந்துள்ளது.

இத்தனை ஆண்டுகளில் புகழ்பூத்த அறிவுக்கும் ஈகத்துக்குமான கலாச்சாரத்தை பேணி உலகமெலாம் தன் பிள்ளைகளை கொண்டு நிமிர்ந்து நிற்கும் வேரவில் இந்து மகா வித்தியாலத்திற்கு இம்மண் தலைசாய்த்து வணக்கம் செலுத்தியிருக்கின்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி.ப.சோதிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதல்வர் கலந்துகொள்ள இருந்தபோதும் முக்கிய விடயம் ஒன்றின் காரணமாக விழாவில் கலந்துகொள்ளாத போதும் வடக்கு மாகாண முதல்வரின் செய்தியை வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் கலந்துகொண்டு வாசித்து அளித்திருந்தார்.

நிகழ்வை பா.உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல் மடுவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் எமிலியாம்பிள்ளை கிளிநொச்சி வலய கல்விப்பணிமனையில் முகாத்துவ பிரதிக்கல்விப்பணிப்பாளர் அபிராமி தமிழ் பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி மதுரநாயகம் பூநகரி கோட்ட கல்வி அதிகாரி தர்மரட்ணம் உட்பட கரைச்சி பிரதேசசபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் உறுப்பினர் சேதுபதி அதிபர்கள் முன்னாள் அதிபர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் பூநகரி வேரவில் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பாண்ட் வாத்தியத்துடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நூற்றாண்டு ஞாபகார்த்தமாக சந்தணமரம் நாட்டிவைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் நூற்றாண்டு நிகழ்வுகள் அதிபர் திருமதி.ப.சோதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விருந்தினர்களின் உரைகள் கலை நிகழ்வுகள் மதிப்பளிப்பு நிகழ்வுகள் என களைகட்டியிருந்தது.

இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்களான கணபதிப்பிள்ளை இளங்குமரன் கோடிஸ்வரன் கனகலிங்கம் ஆகியோருடன் முன்னாள் ஆசிரியர்களும் மதிப்பளித்து வாழ்த்தப்பட்டனர்.

பல்வேறு சிறப்புக்களுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் சிறப்புரையாற்றுகையில் பூநகரி மண்ணின் புகழ்பூத்த நூற்றாண்டு பெருமைகண்ட கிராமமான வேரவில் கிராமத்தின் அடையாளமாக இருக்கின்ற இந்த பாடசாலையில் சிறப்பில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

இங்கே மண்ணுக்காக தங்கள் உயிர்களை தந்தவர்களை நான் என் நெஞ்சத்தில் நினைக்கின்றேன். எமது வரலாறுகளை அழிக்க நினைக்கின்ற ஆக்கிரமிப்பாளனின் எண்ணத்தின் மத்தியில் எது வரலாறு என்று சிந்திக்கின்றபோது இன்றைக்கு நாம் வணங்கமுடியாதபடி உயிர்தியாகம் செய்தவர்களையும் கரியாலனையும் தினமும் எம் நெஞ்சத்தில் நினைக்கின்றோமே இதுதான் எமது உண்மையான வரலாறு. இதை யாராலும் அழிக்கமுடியாது.

நாம் இன்று வேரவில் இந்து மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு காணும் இவ்வேளையில் நாம் மகிழ்ந்திருந்தாலும் எம்மை சுற்றி ஒரு ஆபத்து வந்துகொண்டேயிருக்கின்றது. எமது வளமுள்ள பூமி சுரண்டலுக்கு உள்ளாகின்றது.

பொன்னாவெளி மண்ணை தோண்டி அதற்குள் சுண்ணக்கற்களை எடுத்து யாரோ எமது மண்ணை கடலுக்கு இரையாக்கி ஒரு காலத்தில் வேரவில் என்ற கிராமமே அழிந்துபோகும் அளவுக்கு இந்த வேரவில் கிராமம் மாசடைந்து நீர் உவராகி மனிதர்கள் வாழமுடியாமல் ஓடுகின்ற நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் இம்மண்ணை விற்றுவிட எத்தணிக்கின்றனர்.

அதற்கான முஸ்தீபுகளை செய்கின்றனர். எனவே இந்த நூற்றாண்டு பெருமைகளில் விழித்துக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பிள்ளைகள் இல்லாத எனக்கு சொத்து எதற்கு? இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவேன்!: ரணில்
» விடுதலைப்புலிகளின் புலனாய்வு உறுப்பினர் கைது
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் கட்சிய தாவியதால் பாதிப்பில்லை: கலையரசன்
» தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum