Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு

Go down

தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு Empty தீவகம் எழுச்சி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்: புங்குடுதீவில் சிறீதரன் எம்பி தெரிவிப்பு

Post by oviya Thu Dec 04, 2014 1:42 pm

புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழையமாணவர் சங்கம், லண்டன் வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலயத்தால் எழுது கருவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மு.ப 10 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்தில் தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வட மாகாண கல்விப்பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராசா வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தீவக வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.குணநாதன், புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய முதல்வர் செ.பகிர்தரன் மடத்துவெளி முருகன் ஆலய தலைவர் சண்முகநாதன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பா.உ சி.சிறீதரன் தெரிவிக்கையில்,

தமிழர் தேசத்தில் தீவகப்பகுதி மிகமுக்கியமான பிரதேசம் ஆகும். தமிழர்களின் கடல்வளம் அள்ளிக்கொழிப்பதும், புகையிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளின் பிரதான மையமாகவும் கற்பகதருவான பனை வளத்தின் தாயாகவும் மூலிகைகளின் ஊன்று நிலமாகவும், ஆக்கிரமிப்பாளர்களுடைய கழுகப்பார்வைக்குள் எந்நேரமும் சிறைப்பட்டிருக்கும் தமிழர் தேசமே தீவகமாகும்.

இத்தீவகப்பகுதியிலே புங்குடுதீவு எனும் புங்கை நகர் பல கல்விமான்களையும் புத்திஜீவிகளையம் துறை சார் நிபுணர்களையும் ஆற்றல் படைத்த கலை உலகத்தவர்களையும் ஆன்மீகத்தின் அடித்தளத்தையும் தந்த நிலமாகும்.

புங்கை நகர் தாயின் பிள்ளைகள் இந்த உலகெல்லாம் பரவிவாழ்ந்தாலும் தாம் பிறந்து வளர்ந்து அள்ளி விளையாடிய மணற்றரையையும் தங்கள் பாதங்களை பதித்துச்சென்ற கடற்கரையோரங்களையும் கை கூப்பித் தொழுத ஆலயங்களையும் தம்மை உலகப்பந்தில் மனிதர்களாய் உருவாக்கிய பள்ளிகளையும் அவர்கள் மறக்கவில்லை.

அதன் ஒரு பாத்திரமே பிரித்தானிய நாட்டிலே வாழ்கின்ற புங்கை நகர் மண்ணின் கமலாம்பிகை வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து வோல்த்தம்ஸ்ரோவ் கற்பக விநாயகர் ஆலயத்தின் ஸ்தாபகர் கல்விக்காருண்யன் கோபாலகிஸ்ணன் அவர்களுடைய முழுமையான பங்களிப்போடு கற்றல் உபகரணங்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் எனவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அதிதிகளால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
















































oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
» நாம் தேர்தலுக்கு அஞ்சியதில்லை: அனுர யாப்பா
» அழகான தேசத்தை உருவாக்க சுயமுயற்சி அவசியம்: பா.உ.சிறீதரன்
» நூற்றாண்டு காணும் கிளிநொச்சியின் சொத்து வேரவில் இந்து மகா வித்தியாலயம்: பா.உறுப்பினர் சிறீதரன்
» எமது மக்களின் அழிவுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் டக்ளஸ் - சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum