Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


முக்தி தரும் சனிக்கிழமை விரதம்

Go down

முக்தி தரும் சனிக்கிழமை விரதம் Empty முக்தி தரும் சனிக்கிழமை விரதம்

Post by oviya Sun Nov 30, 2014 1:21 pm

புரட்டாசி மாதம் என்றாலே ஏடு குண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா கோவிந்தா என்ற பக்திப் பரவச ஒலிதான் பெருமாள் பக்தர்களின் வீடெங்கிலும் தேவகானமாக கேட்கும்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் அதாவது இன்று (சனிக்கிழமை) விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாகவே ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி ஏழு நாட்களுக்கு அந்த யாத்திரையைத் தொடர்ந்து ஏழாவது நாளான சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில்தான் திருவேங்கமுடையானுக்கு பிரம்மோற்சவமும் நடை பெறுகிறது.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், ஆனால் ஸ்ரீபாலாஜியோ, எனக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம்தான்.அதிலும் சனிக்கிழமைதான் தனக்கு உகந்த நாள் என்கிறார் இதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது. அந்த நிகழ்வு மூலம் தம் பக்தன் ஒருவனுக்கு ஏழுமலையான் அருள் புரிந்த வரலாறு வருமாறு:-

தொண்டை மண்டலத்தில் அந்த காலத்தில் தொண்டை மன்னன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். மன்னன் தொண்டைமானுக்கு மலையப்பன் மீது மாசிலாக் காதல். எனவே, திருவேங்கடவனுக்கு ஆலயம் அமைத்து தினமும் பொன்மலர்களால் அர்ச்சனை செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

அதன்படியே பூஜையும் செய்து வந்தான். இவ்விதம் பூஜை செய்து வரும் வேளையில் ஒருநாள் பொன்மலர்களுக்கிடையே மண்மலர்களும் வந்து விழுவதைக் கண்டான். திடுக்கிட்ட அவன், அவை மண்மலர்கள்தானா எனக் கூர்ந்து நோக்கினான். அவை மண்மலர்கள்தான் என்பதை மீண்டும் மீண்டும் பூஜையில் வந்து விழுந்த மலர்கள் சந்தேகமேயில்லாமல் நிரூபித்தன.

கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு மன்னன் மீண்டும் பூஜை செய்ய தொடர்ந்த போதும் அவ்வாறே நிகழ்ந்தது. மன்னனின் மனம் குழப்பத்துக்கு உள்ளாகியது. தனது வழிபாட்டில் ஏதேனும் பிழை இருக்குமோ என உள்ளூக்குள் வருந்தினான். ஏழுமலையானை நினைத்து பூஜித்த போதும், அவன் குழப்பம் தீரவில்லை.

இந்த நிலையில் குருவை என்ற கிராமம் ஒன்றில் பீமய்யா என்ற குயவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே அவனுக்குக் கால் ஊனம். தனது குலத் தொழிலான மண்பாண்டங்கள் செய்தலை நேர்மை தவறாமல் கடவுள் மீது அயராத பக்தி கொண்டு செய்து வந்தான். வேங்கடவனும் அவன் பக்திக்கு மெச்சி, தன் திருவுருவத்தை அவனுக்குக் கனவில் காட்டி பின்பு மறைந்து விட்டார்.

பீமய்யாவுக்குத் திருமால் கனவில் காட்சி அளித்த நாள், புரட்டாசி மாத சனிக்கிழமை விடியற்காலை நேரம். பீமய்யாவும், தனக்குக் கனவில் தோன்றிய திருமாலின் வடிவத்தை அப்படியே செய்தான். அதன் பின்னர் மண்ணால் மாலவனின் உருவத்தை வடித்து, மலர்கள் தூவி வழிபட்டு வந்தான்.

சனிக்கிழமை நாளில் தவறாமல் விரதம் அனுசரித்து வந்த பீமய்யன், பெருமாளின் சிந்தனையிலேயே தொழிலையும் செய்து வந்தான். இவ்விதம் தொழில் செய்து கொண்டிருக்கும் போதே, கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து விடுவான்.

அச்சமயங்களில் தான் என்ன செய்கிறோம் என்பதை அறியா நிலையிலேயே பிசைந்து கொண்டிருக்கும் களி மண்மணையே மலர்களாகப் பாவித்த பெருமாளுக்கு அர்ச்சிப்பான். காலப்போக்கில் இதுவே அவனது அன்றாட அலுவலாகவும் ஆகிவிட்டது. இது இப்படி இருக்க குழப்பத்தில் இருந்த தொண்டைமான் ஒருநாள் அபூர்வக் கனவு ஒன்றைக் கண்டான்.

அக்கனவில் வேங்கடநாதன் தோன்றி தமது பக்தன் பீமய்யன் செய்யும் பூஜையே தமக்கு மிகுந்த மன நிறையை அளிப்பதாகவும், அந்தப் பூஜையை நீயும் சென்று பார், அப்போது உண்மை விளங்கும் என்று கூறி மறைந்தார்.

தொண்டைமானும் திருமால் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பீமய்யன் செய்யப்போகும் பூஜையை மறைந்திருந்து கவனித்தார். அனுதினமும் செய்வது போலவே பீமய்யன் தான் வடிவமைத்திருந்த வேங்கடவனின் சிலை அருகே அமர்ந்து மண்பாண்டங்களைச் செய்து கொண்டே, கண் மூடி மண்மலர்களைத் தூவி இறைவனை வழிபடுவதைக் கண்டான் தொண்டை மன்னன்.

அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. உடன் பீமய்யனைச் சென்று கட்டித்தழுவிய தொண்டைமான் அவனிடம் உன் பக்தி உயர்வான பக்தி, உனது வழி பாட்டைத் திருமால் ஏற்றுக்கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

இதற்கிடையில் அந்தப் பரந்தாமன் பீமய்யனின் கனவிலும் தோன்றி, உன் பக்தியின் பெருமையை என்று பிறர்கூற அறிகின்றாயோ அன்றே உனக்கு முக்தி அளித்து, வைகுந்தத்துக்கு அழைத்துச் கொள்வேன் எனக் கூறியிருந்தார்.

அப்படியே தொண்டைமான், பீமய்யனின் பக்தியைப் பாராட்டியதைக் கேட்ட மறுகனமே அவனுக்கு முக்தி கிடைத்தது. புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படி ஒரு மகத்துவம் இருக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum