Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு

Go down

மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு Empty மகிந்தவை வெற்றிபெறச் செய்யும் இராணுவ நடவடிக்கை ஆரம்பம்! கொழும்பு நான்கு வலயமாக பிரிப்பு

Post by oviya Fri Dec 05, 2014 12:24 pm

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை வெற்றிபெற செய்ய இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான முதலாவது அலுவலகம் நேற்றிரவு பன்னிப்பிட்டிய தேபானம பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படடுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருந்த பிரச்சார கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் சிவில் நபர்களை பயன்படுத்தி அதனை மீண்டும் ஸ்தாபிக்க முடியாத மட்டத்திற்கு அது சென்றுள்ளது.

இந்த நிலையில், இராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுளளதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கை கொழும்பு மாவட்டம் முழுவதும் உள்ளடங்கும் வகையில் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல்கள், தற்பொழுது பணியில் இருக்கும் மேஜர் ஆகியோரின் பொறுப்பின் கீழ் இயங்கும் இந்த வலயங்களில் பிரதானமாக, பொறுப்புக் கூறும் நான்கு சிவில் நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஓய்வுபெற்ற மற்றும் பணியில் இருக்கும் இந்த இராணுவ அதிகாரிகளுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக தொலைபேசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பிரதேசம் முதலாவது வலயமாக பெயரிடப்பட்டுள்ளதுடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வசந்த பண்டார அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக டப்ளியூ. எம்.ஏ.எஸ். சுபாஷ் வீரசிங்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுக்கு 078 5214014 என்ற எண்ணுடன் கூடிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் வலயம் இரண்டு என பெயரிடப்பட்டுள்ளதுடன் அதற்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சீவலி வணிகசேகர நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உதவியாக நிமல் சோமரத்ன என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். சோமரத்னவுக்கு 0777274014 என்ற தொலைபேசி இலக்கத்தை கொண்ட செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

மகரகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் வலயம் மூன்று என பெயரிடப்பட்டுள்ளதுடன் அதற்கு பொறுப்பாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக சிந்தக்க சுரங்க என்பவர் நியமிகக்ப்பட்டுள்ளா். மேஜர் ஜெனரலுக்கு 077 3243032 என்ற தொலைபேசி இலக்கத்துடன் கூடிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் வலயம் நான்கு என பெயரிடப்பட்டுள்ளதுடன் அதற்கு பொறுப்பாக தற்போது பணியில் உள்ள மேஜர் டி.எல். அத்தநாயக்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக பீ.ஏ. சனத் என்பவர் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மேஜருக்கு 0771088405 என்ற தொலைபேசி இலக்கத்துடன் கூடிய செல்போன் வழங்கப்பட்டுள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசாங்கத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பொது வேட்பாளரின் நடவடிக்கை ஆரம்பம்
» பொது வேட்பாளருக்கான கொழும்பு பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
» வடக்கு,கிழக்கில் இராணுவ அதிகாரிகள் சீருடையை மாற்றினால் சிவில் நிர்வாகம் வந்துவிடுமா?: அப்துல் மஜீத்
» போர்க்குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி கொழும்பு திரும்பியுள்ளார்!
» தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum