Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ராகு-கேது தோஷங்களை போக்கும் விநாயகர்

Go down

ராகு-கேது தோஷங்களை போக்கும் விநாயகர் Empty ராகு-கேது தோஷங்களை போக்கும் விநாயகர்

Post by oviya Sun Nov 30, 2014 1:29 pm

காளஸ்தீஸ்வரரும் இக்கோவிலில் இருந்து அருள்பாலிப்பதால், கால சர்ப்ப தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. திருவாரூர் வன்னியூர் (காரையூர்) கிராமத்தில் உள்ள விநாயகரை வன்னி இலையாலும், மந்தாரைப் புஷ்பத்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல பாவங்களும் தீரும்.

* தஞ்சாவூர் பில்லுக்காரத் தெருவில் ஸ்ரீ சக்தி முனியாண்டவர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில், ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, நாக அணி பூண்டு வீற்றிருக்கிறார் ஸ்ரீ நாகநாத விநாயகர்.

நாக தோஷம், ராகு-கேது தோஷங்களை நீக்குகிறார் என்பதால் தினமுமே இங்கு விழாக்கோலம் தான். மரண பயம், விஷ ஜந்துக்கள் பயம் நீக்குவதுடன், திருமணத் தடையை அகற்றி மழலை பாக்கியமும் தந்தருள்கிறார் இந்த விநாயகர்.

* வேதாரண்யத்தில் உள்ள கோயிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்கு நோக்கி வீரஹத்தி விநாயகர் வீற்றிருக்கிறார். ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமபிரான் ராமேசுவரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

எனினும் அவரை விடாமல் தொடர்ந்து வந்த வீரஹத்தியைத் தீர்த்தருளிய காரணத்தால் இவருக்கு இந்தப் பெயர் அமைந்தது என்கிறது தலப் புராணம். நாமும் இவரை வழிபட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

* திருவண்ணாமலை கிரிவலம் சாலையில் இடுக்குப் பிள்ளையார் அமைந்துள்ளார். இவரை பிள்ளையார் வடிவில் காண முடியவில்லை. கோவிலின் முன்புறம் இரண்டு பாதங்கள் அமைந்துள்ளன.

கோயிலின் பின்புறம் மண்டியிட்டுப் படுத்து சர்க்கசில் இரும்பு வளையத்தில் நுழைவது போல, நுழைந்து முன்புறமாக வெளிவருவது தான் இக்கோயிலில் செய்யும் பிரார்த்தனை, தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு உடல் வலி, பில்லி சூனியம் போன்றவை அகலுதல் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum