Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


செங்கோட்டை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Go down

செங்கோட்டை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் Empty செங்கோட்டை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Post by oviya Sat Dec 06, 2014 10:46 am

செங்கோட்டை அடுத்துள்ள கணக்கப் பிள்ளைவலசை ஸ்ரீ சங்கரவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 13–ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. அன்று நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், கோபூஜை,மாலையில் மிருத்சங்கிருகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், பிரவேசபலி, வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம், யாகத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

14–ந்தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, வேதபாராயணம், தேவாரம், தீபாரதனை, இரவு 7 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜை,பூர்ணாஹூதி,வேத பாராயணம் ,தேவாரம் ,தீபாரதனை, அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு 9 மணிக்கு மேல் யந்திரஸ்தாபனம், சமர்ப்பணம் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 5 மணிக்கு மேல் 6மணிக்குள் ஸ்ரீ சங்கரவிநாயகருக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ சங்கர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum