Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Go down

அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் Empty அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Post by oviya Sat Dec 06, 2014 11:11 am

உடுமலை அருகே பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய விழா யாக சாலை வழிபாடுகள், கர்ப்ப கிரக விமானத்தில் கோபுர கலசம் வைத்தல் என பல நிகழ்வுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மன், விநாயகர், கன்னிமார், கருப்பண்ணசாமிக்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மகாபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குமரலிங்கம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

உடுமலை தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் சனி மகா பிரதோசம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு லிங்கேஸ்வரர், நந்தீஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளை கோவில் முதன்மை அர்ச்சகர் அருள்ஜோதி முருகேசன் குழுவினர் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை கொழுமம் தாண்டேஸ்வர சாமி கோவில், குமரலிங்கம் காசி விநாயகர் கோவில், கடந்தூர் அர்த்தனேஸ்வரசாமி கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், தி.நகரம், சவுடேஸ்வரி ராமலிங்கம் கோவில், உடுமலை சத்திரம் வீதி, சுந்தர விநாயகர் கோவில், உடுமலை பத்திரப்பா நகர் ஈஸ்வரன் கோவில், உடுமலை ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரா கோவில், உடுமலை கிரீன் பார்க் லேஅவுட் சக்தி விநாயகர் (முருகன்) கோவில் உள்பட பல கோவில்களில் சனி மகா பிரதோஷம் விழா நடைபெற்றது.

இதனை முன்னிட்டு குறிப்பிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரோடு சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» மசினியம்மன் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum