Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

Go down

கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு Empty கிழக்கு மாகாண சபைக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு

Post by oviya Sat Dec 06, 2014 11:53 am

கிழக்கு மாகாண சபை பிரதிப் பிரதம செயலாளரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றக் கட்டளையானது சட்டமுரணாது. இயற்கை நியதிக்கோட்பாட்டுக்கு முரணானது என நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.
திருக்கோயில் கல்வி வலயத்தில் கடமையாற்றிய ஆறுமுகவடிவேல் முகுந்தன் என்பவரை ஆலயடிவேம்பு பிரதேச சபைக்கு இடமாற்றம் பிறப்பித்த கட்டைளைக்கெதிராக கல்முனை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிகேள் ஆணை வழக்கில் அவருடைய இடமாற்றக் கட்டளையானது சட்டமுரணானது. இயற்கை நியதிக்கோட்பாட்டுக்கு முரணானது என நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாண சபை பிரதி பிரதம செயலாளரின் கட்டளையை ரத்துச்செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிக்கப்பட்ட மனுதாரர் ஓராண்டு முன்னரே திருக்கோயில் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இடமாற்ற விண்ணப்பம் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் அவருக்கெதிராக 3 அநாமதேய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனடிப்படையில் அவருடைய இடமாற்றம் நடைபெற்றதாக பிரதிச் செயலாளர் மன்றில் எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.

குறிக்கப்பட்ட வழக்கானது கிழக்கு மாகாண சபை ஆளுநர், கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபை பிரதிப் பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சின் செயலாளர், திருக்கோயில் கல்விப் பணிப்பாளர் ஆகியோர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் கல்முனை மேல்நீதிமன்றுக்கு கிழக்கு மாகாணசபை அதிகாரிகளின் தீர்மானம் சம்பந்தமாக விசாரணை செய்யும் அதிகாரம் கிடயாதென கிழக்கு மாகாண சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வாதம் செய்தார்.

குறிக்கப்பட்ட விடயத்திற்கு தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் சம்பந்தமாக, கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட விடயங்கள் சம்பந்தமாக அதிகாரிகளின் தீர்மானங்கள் அதிகார துஸ்பிரயோகம் வாய்ந்ததா அல்லது அதிகார வரம்பெல்லைகளை மீறியதா என்று விசாரணை செய்யும் அதிகாரம் கிழக்கு மாகாண மேல் நீதிமன்றான கல்முனை மேல்நீதிமன்றுக்கு உண்டு என நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்து கிழக்கு மாகாண சபையின் பூர்வாங்க ஆட்சேபனையை தள்ளுபடி செய்தார்.

மேலும் அண்மையில் தீர்ப்பளிக்கப்பட்ட "சோலைமுத்து ராசு" என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், குறிக்கப்பட்ட மாகாணத்திற்குள் இருக்கின்ற நபர் மாகாண சபை நியதிச்சட்ட, மாகாண சபை அதிகார எல்லைக்குள் அதிகாரம் பாவிக்கப்படும் நபர்கள் சம்பந்தமாக மாகாண மேல்நீதிமன்றுக்கு பிரிவு 154 அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன், கிழக்கு மாகாண சபை ஆளுநர், பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர், கல்விச் செயலாளர் என்போருடைய இந்த வழக்கின் நடவடிக்கைகள் சமபந்தமாக விசாரணை செய்யும் அதிகாரம் கிழக்கு மாகாண மேல்நீதிமன்றமான கல்முனை நீதிமன்றுக்கு உண்டு எனத் தீர்பளித்த நீதிபதி, கிழக்கு மாகாண பிரதம பிரதிச் செயலாளர் கலாமதி பத்மராஜா மனுதாரரான முகுந்தனுக்கு வழங்கிய இடமாற்றக் கட்டளையானது இயற்கை நியதிக் கோட்பாட்டை மீறிய செயற்பாடு எனவும் மொட்டைக் கடிதங்களுக்கு எதுவிதமான உள்ள விசாரணை கூட நடத்தாது எடுக்கப்பட்ட இடமாற்றக் கட்டளை தீர்மானம் எனவும் கிழக்கு மாகாண சபையின் உயர் அரச சேவையாளராக இருக்கும் 4 ஆவது எதிர்மனுதாரரான பிரதிப் பிரதம செயலாளருடைய தீர்மானம் சட்டவரம்பெல்லையை மீறியது எனவும் அது அதிகார துஸ்பிரயோகம் கொண்ட கட்டளை எனவும் இயற்கை நியதிக் கோட்பாட்டை மீறிய கட்டளை எனவும் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் பிரதம பிரதிச் செயலாளருடைய இடமாற்றக் கட்டளையை ரத்துச் செய்து தீர்ப்பளித்தார்.

ஓர் அரச சேவையாளரின் உரிமை பாதிக்கப்படும் சூழ்நிலையில் ஆணை வழக்குகள் மூலம் அதிகார துஸ்பிரயோகம், அதிகார வரம்பெல்லைகளுக்கு எதிராக உறுதிகேள் எழுத்தாணை பிறப்பிப்பதற்கு இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட நபருக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்த நீதிபதி, குறிக்கப்பட்ட இந்த இடமாற்றக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட நபருக்கெதிராக எதுவிதமான உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஓர் ஆண்டுக்கு முன்னரே அவரை திருக்கோயில் கல்வி வலயத்திற்கு இடமாற்றியுள்ளனர். அதன் பின்னர் மீண்டும் ஓர் ஆண்டுக்கு ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு இடமாற்றம் செய்வதற்கு எதுவிதமான காரணங்களும் நீதிமன்றைத் திருப்திப்படுத்தும் விதத்தில் கிழக்கு மாகாண சபை எதிர்மனுதாரர்களான உயர் அதிகாரியினாலும் மன்றில் தாக்கல் செய்யப்படவில்லையெனத் தீர்ப்பளித்த நீதிபதி, விசேடமாக பிரதிப் பிரதம செயலாளரினால் வழங்கப்பட்ட இரண்டு இடமாற்றக் கட்டளைக் கடிதங்களை இரத்துச் செய்து தீர்ப்பளித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை அதிகார வரம்பெல்லைக்குட்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை அதிகாரிகளால் பிறப்பிக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கெதிராக பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் கிழக்கு மாகாண மேல்நீதிமன்றில் ஆணை வழக்கு தாக்கல் செய்வதற்கு கிழக்கு மாகாண மேல்நீதிமன்றமான கல்முனை மேல்நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டு என மேலும் தீர்ப்பளித்த நீதிபதி குறிக்கப்பட்ட மனுதாரரை தொடர்ந்து திருக்கோயில் கல்வி வலயத்தில் கடமையாற்ற அனுமதித்து இடமாற்றக் கட்டளைகளை ரத்துச் செய்து தீர்ப்பளித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு
» மாலக்க சில்வா வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
» மிருசுவில் படையணி முகாம் காணி சுவீகரிப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றது நீதிமன்றம்!
» ஊவா மாகாண சபை ஐ.தே.கட்சிக்கு: ஹரின் பெர்ணான்டோ
» சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினருக்கு மரண தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum