Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

Go down

சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை Empty சனி தாக்கத்தை விரட்டும் கருப்பு நிற உடை

Post by oviya Sat Dec 06, 2014 12:29 pm

கருப்பும் உடுத்து பம்பையில் முங்கி சபரிக்கு போம் ஐயப்பன்மார்'' என்கிற பாடலின் வாயிலாக அய்யப்பனுக்கு ஏற்ற, பிடித்தமான உடை கருப்பு என்பதை அறியலாம். பல்லாயிரக்கணக்கான அன்பர்கள் கருப்பு வேஷ்டி துண்டு அணிந்து தான் மலைக்கு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோர் கருப்பு நிற ஆடை மட்டும் அணிகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அய்யப்ப ஸ்வாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.

அவர்களின் வழி பின்பற்றி அய்யப்ப சாமிகளிடம் கருப்புநிற ஆடை அணிகின்றனர். அடுத்து சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. காட்டு யானைகள் பெருவழியில் அதிகம் நடமாடும். அவை வெள்ளை நிறம் கண்டால் கோப்பப்படும். அதோடு கோபத்தில் பிளிரும். கருப்பு நிறம் கண்டால் யானை வெகுண்டு எழாது.

மற்றும் வன தேவதைகளை சாந்தி செய்யவும் கருப்பு உடுத்துவது வழக்கமாக உள்ளது. மேலும் கருப்பு நிறம் சனீஸ்வர பகவானுக்கு ஏற்றது. யார் ஒருவர் சபரி மலைக்கு கருப்பு நிற உடை உடுத்தி சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தாவினைக் காண்கிறார்களோ அவர்களுக்கு 7 நாட்டு சனியின் பாதிப்பு ஏதும் அறவே இருக்காது.

ஏன் என்றால் சனீஸ்வரன் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் பரம அனுக்கிரகம் பெற்றவன். சனீஸ்வரனின் அன்பு கலந்த பக்தியினால் மகிழ்ந்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அவன் முன் தோன்றி அவனுக்கு சூரிய மண்டலத் தில் கிரக நிலையினை அருளினார். அவன் மெதுவாக நகர்வதால் (அவன் சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆகும்) "சனீஸ்வரன்'' என்ற பெயரும் சூட்டினார்.

வாரத்தின் கடைசி நாளை யும் அவன் பெயரில் அழைக்க அருள் பÖலித்தருளினார். மேலும் அந்த சனிக்கிழமை யினையே தனக்கு உகந்த நாளாக ஏற்று அய்யப்பன் அருள் செய்தார்.

இதற்கு பிரதி உபகாரமாக சனிபக வானும் யார் ஒருவர் கருப்பு நிற உடை உடுத்தி சனிக்கிழமை தோரும் விரதம் இருந்து சபரிமலை வந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா சொரூபமாகிய அய்யப்பனை அன்புடன் வேண்டுகிறார்களோ அவர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்க மாட்டேன் என கூறினார். எனவே தான் சபரிமலைக்கு கருப்பு நிற உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு 7 சனியின் தாக்கம் கடுமையாக இருப்பதில்லை.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum