Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


செவ்வாய் தோஷம் அகல மங்கள சண்டிகை விளக்கு பூஜை

Go down

செவ்வாய் தோஷம் அகல மங்கள சண்டிகை விளக்கு பூஜை Empty செவ்வாய் தோஷம் அகல மங்கள சண்டிகை விளக்கு பூஜை

Post by oviya Sat Dec 06, 2014 1:05 pm

அன்னை அகிலாண்ட ஈஸ்வரி இன்றி இவ்வுலகில் ஓர் அணுவும் அசையாது. சர்வசக்தியான அவளது மலர் பாதங்களைப் பற்றிக்கொண்டு, தாயே! நீ தான் எனக்குத் துணை என்று சரணடைந்தால் அவள் நமக்களிக்கும் அருளுக்கு அளவே இல்லை.

அகிலம் காக்கும் அன்னை அகிலாண்ட ஈஸ்வரிக்கு மங்கள சண்டிகை என்று ஒரு பெயர் உண்டு. மங்களன் என்ற அரசன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தான். அந்த அரசன் உலகமே வியக்கும் வண்ணம் எண்ணற்ற பல பெரிய காரியங்களைச் சாதித்து "மா மன்னன் மங்களன்'' என்று புகழப்பட்டான்.

ஒரு சிற்றரசனாக இருந்த ஒருவனால் எப்படி பெரிய காரியங்களைப்யெல்லாம் சாதித்து பேராசனானான் என்று பலரும் வியப்படைந்தனர். அவர்களுக்கு அவன் அளித்த பதில்:-

"நான் எதையும் சாதிக்கவில்லை. எல்லாம் வல்ல அன்னை துர்க்கையின் அருள் தான் இத்தனை சாதனைகளையெல்லாம் செய்து முடித்திருக்கிறது. தினந்தோறும் போற்றி துதிக்கும் அன்னையை முக்கியமாக செவ்வாய்க்கிழமைகளில் அவளது பாதம் பணிந்து சரணடைகிறேன்!'' என்று பதிலளித்தான்.

அதனால் சண்டிகைக்கு "மங்கள சண்டிகை'' என்ற திருநாமம் வழங்கப்பட்டது. அருமாக இருக்கும் சக்திக்கு நாம் உருவமளிப்பது சாத்தியமில்லை. எங்கும் நிறைந்த பரம் பொருளின் ஜோதி வடிவம் நிலையானது. ஆகையினால் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் மஞ்சள் பூசி நீராடி விட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

மணமாவதற்கும்- மாங்கலய பலத்திற்காகவும் பூஜை செய்யும் பெண்கள் மஞ்சள் நிற ஆடை உடுத்துவது நல்லது. விளக்கு வைக்கும் இடத்தைச் சுத்தம் செய்து, அங்கே மாக்கோலம் போட்டு, அதன் மீது மணைப் பலகை வைத்து பின்னர் அதன் மேல் குத்து விளக்கை வைக்க வேண்டும்.

விளக்கிற்கு மஞ்சள் பூசி, குங்கும் வைத்து தாமரைத் தண்டு அல்லது வாழைத்தண்டு திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றலாம். ஏகமுக விளக்கை ஏற்றலாம். ஐந்து முக விளக்கு இருந்தாலும் ஏற்றலாம்.

விளக்கின் முன்னால் சுத்தம் செய்து மங்கள வார கோலத்தைப்போட வேண்டும். அங்கார தோஷமுள்ள பெண்கள் இந்தக் கோலத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் போட்டு மங்கள சண்டிகையை தியானம் செய்தால் நிச்சயமாகப் பலன் கிட்டும்.

அங்காரனே சண்டிகையின் பாதங்களைப் பற்றி "அம்மா தாயே! என்னுடைய கிரக நிலையால் நான் பல துன்பங்களை விளைவிக்கிறேன். அதனால் மங்களக் காரியங்கள் பல தடைப்பட்டுப் போகின்றன. இதனால் மக்கள் என்னைக்கண்டு பயப்படுகின்றனர்.

என்று முறையிட்டான். அதற்கு அன்னை செவ்வாய்க்கிழமை தோறும் என்னை வழிபட்டு வருபவர்கள் அனைவரையும் உன்னுடைய துஷ்டப்பிடிகளிலிருந்து காப்பாற்றி சர்வ சக்திகளையும் தந்தருளுவேன் என்று வாக்களித்தாள்.

செவ்வாய் தோஷமுள்ள யாவரும் அன்னை மங்கள சண்டிகையை தீப ரூபத்தில் வழிபட வேண்டும். மங்களகரமான மஞ்சள் நிறப் பூக்களினால் அன்னையை அர்ச்சனை செய்ய வேண்டும்.

மஞ்சள் நிறமுள்ள மஞ்சள் வாழை, மாம்பழம், பலாப்பழம் போன்ற பழ வகைகளை நிவேதனம் செய்ய வேண்டும். பாசிப்பருப்புடன் மஞ்சள் கலந்த அரிசியும் சேர்த்து உப்பு போட்டு பொங்கலை நிவேதனம் செய்ய வேண்டும்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும்,கணவனைப் பிரிந்து வாழும் பெண்களும் இந்த நிவேதனத்தைத் தாங்களே தயார் செய்து அன்னைக்குப் படைத்து அன்று அதனைச் சாப்பிட வேண்டும்.

அதன் பின்னர் ராகு கால துர்க்கா அஷ்டகமும் சந்திரகலா ஸ்துதியைப் பாராயணம் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ஆறு காலமும், கைகால்களை சுத்தம் செய்து கொண்டு இந்த சந்திரகலா ஸ்துதியைப் படித்தால் நல்ல பயன் கிடைக்கும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum