Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சோர்வில்லா வாழ்வளிக்கும் சோமசுந்தரி

Go down

சோர்வில்லா வாழ்வளிக்கும் சோமசுந்தரி Empty சோர்வில்லா வாழ்வளிக்கும் சோமசுந்தரி

Post by oviya Sun Dec 07, 2014 8:31 am

தரணி போற்றும் தாமிரபரணி நதியின் கீழ் பக்கத்திலுள்ள வளமிக்க ஊர்தான் ஆற்றூர். ஆற்றின் கரையில் அழகுற அமைந்ததால் ஆற்றூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் அதுவே ஆத்தூர் என மருவியது. பழங்காலத்தில் காடாக இருந்திருக்கிறது. எனவே, சோமாரண்யம் என்றழைத்தார்கள். பசுக்களின் மேய்ச்சல் பிரதேசமாக சோமாரண்யம் இருந்தது. தற்போது கோயில் இருக்கும் இடத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரம் மிகவும் விசேஷமானது. பசுக்களெல்லாம் ஆலமரத்தடியில் வந்துதான் இளைப்பாறும். மரத்தடியில் வந்து பால் சொரிந்து நிற்கும். இதை ‘ஆநிரை’ என்ற மேய்ப்பவர் கண்டு பயந்தார். அரசனை சந்தித்து அவரிடம் நடந்ததை விளக்கினார்.

அரசனுக்கோ ஆநிரை சொல்வதை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனவே அரசனே அந்த ஆலமரத்திற்கு அருகே வந்தார். பால் சொரிந்து நிற்கும் பசுக்களை கண்டார். உடனே, இந்த மரத்தில் ஏதோ சக்தி இருக்கிறது. அதை வெட்டி விட்டால் எல்லா பிரச்னையும் தீர்ந்து விடும் என்று நினைத்தார். மரத்தை வெட்ட ஆணையிட்டுச் சென்றார்.

வீரர்கள் மரத்தை வெட்டினார்கள். யாரும் எதிர்பாராத விதமாக ரத்தம் பீரிட்டது. அனைவரும் அதிர்ந்து நின்றனர். மரம் வெட்டுவதை விட்டுவிட்டு அரண்மனைக்கு ஓடிச்சென்று விவரம் சொன்னார்கள். மிகவும் குழப்பத்துக்கு உள்ளானார் மன்னர். அன்றிரவே அரசன் கனவில் இறைவன் தோன்றினார். ஆலமரத்துக்கு நடுவே தான் லிங்கமாக உள்ளதாகவும், தனக்கொரு கோயில் எழுப்ப வேண்டும் என்று அருளாணையிட்டார். அரசனும் திருக்கோயில் நிறுவினார். சோமாரண்யம் என்ற இடத்தில் தோன்றிய லிங்கமாதலால் சோமநாதர் என்றழைக்கப்பட்டார். இந்த தல புராண சான்றாக ‘பசு பால் சொரியும் காட்சி’ கோயிலின் மகாமண்டபத்திலுள்ள அனுக்ஞை விநாயகர் சந்நதியில் தென்மேற்கு மூலையில் சிலையாக வடித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் திருமாலுக்கு அனந்த பத்மநாதர் எனும் திருநாமமுண்டு. சிவலிங்க மூர்த்தியை தனது வலது கையால் பூஜிப்பது போன்ற காட்சியையும் இங்கு காணலாம். மேலும் ஒரு சிறப்பம்சமாக சோமசுந்தரி அம்பாள் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். நோய் தீர, தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க என்று பக்தர்கள் அம்மையை வணங்கி நிற்கிறார்கள். வாழ்க்கையில் எந்தப் பிரச்னையாலும் சோர்வடையாத உறுதியான மனநிலையை இந்த அன்னை அருள்கிறாள். சோமசுந்தரி பாமாலை உள்பட பல பாமாலைகள் அம்மை மீது பாடப்பட்டுள்ளன. சந்திர பகவானும் குரு பகவானும் சோமநாதர், சோமசுந்தரி அம்பாள் இருவரையும் வழிபட்டு பேறு பெற்றனர். ஆகவே இங்கு வரும் அன்பர்களுக்கு சந்திரனின் பூரண அருளும் குருபகவானின் அருளும் நன்கு கிடைக்கின்றன.

விரதமிருந்து இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி அம்மை, அப்பனை வணங்கினால் உடல் பிணி தீரும் அதிசயம் நடக்கிறது. இந்த அதிசயத்துக்குள்ளான ஒரு அன்பர் தனது ஊரான ஆறுமுகநேரியிலும் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதர் கோயிலை நிறுவியுள்ளார். 17ம் நூற்றாண்டில் இந்தக் கோயில் நிறுவப்பட்டது. இத்தலத்தில் பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். ஊஞ்சல் மண்டபம் மற்றும் மகாமண்டபத்தில் நாயக்கர் கால சிற்பங்கள் உள்ளன. ஆழ்வார்கள், ராமாயண சிற்பங்கள் சம்பந்தமான சுதைச் சிற்பங்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தலத்தின் தனிச் சிறப்பாக தட்சிணாமூர்த்தி முயலகன் மீது அமர்ந்து சின் முத்திரை காட்டி அருள்பாலிக்கிறார். சிவன் மற்றும் அம்பாள் கோயில்களுக்கு தனித்தனியாக பலி பீடம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ளன. கோயிலின் முன்புள்ள தெப்பக் குளத்தில் கால் நனைத்து விட்டு உள்ளே சென்றால் சிவன் கோயிலின் முன் மண்டபம் வரும். அதை அடுத்து உள்ளே சென்றால் பிள்ளையார் மற்றும் சுப்பிரமணியர் அருள்பரப்புகிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால் மகா மண்டபம். இதில் அதிகார நந்தி, சூரியன் ஆகியோர் உள்ளனர். அடுத்து அர்த்த மண்டபம்.

மூலவராக கர்ப்ப கிரகத்தில் அகிலத்தையும் காக்கும் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். கோயிலைச் சுற்றி வந்தால் அங்கே வலதுபுறம் தட்சிணாமூர்த்தியும் இடது புறம் 63 நாயன்மார்களும் உள்ளார்கள். கன்னி மூலையில் விநாயகர் திறந்த வெளியில் உள்ளார். பின் பக்கத்தில் காசி விசாலாட்சி மற்றும் விஸ்வநாதர் உள்ளனர். அருகிலேயே சயனக் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். மார்க்கண்டேயர் மற்றும் பிருகு முனிவர்கள் அவருடன் அமர்ந்துள்ளனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum