Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி

Go down

கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி Empty கடனை மீட்டுத் தரும் கருப்பண்ணசாமி

Post by oviya Sun Dec 07, 2014 8:33 am

செட்டியப்பன் என்று ஒரு மலையாள மந்திரவாதி இருந்தார். அவர் ஒரு வியாபாரியும் கூட. மஞ்சள் வியாபாரம் அவரது பிரதான தொழில். வியாபார விஷயமாக மணக்கால் வந்தார் அந்த வியாபாரி. அருகே ஒரு ஆலயம். அதன் எதிரே ஒரு திருக்குளம். அந்த திருக்குளத்தில் ஏழு கன்னிகைகள் நீராடிக் கொண்டிருந்தனர்.

நீராடியவர்கள் எழுவரும் சப்த மாதர்கள். பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, கௌமாரி, சாமுண்டி என்பது அவர்களது திருப்பெயர்கள். அவர்கள் அருகே சென்ற வியாபாரி கரையோரம் நின்று அவர்களை வேடிக்கை பார்த்தார். பின், ‘‘மஞ்சள் வேண்டுமா?’’ என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
‘‘வேண்டாம்’’ என்றனர் சப்தமாதர்கள்.

செட்டியப்பருக்கு தான் கொண்டு வந்த மஞ்சள் வியாபாரமாகவில்லையே என்ற வருத்தம். அந்தப் பெண்களை மிரட்டியாவது மஞ்சள் வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.
அவர்கள் கரையில் கழற்றி வைத்திருந்த ஆபரணங்களையும் துணிகளையும் சுருட்ட ஆரம்பித்தார். அதைப் பார்த்த சப்த கன்னியர் பதறிப் போயினர். ஆடைகளை வியாபாரி எடுத்துச் சென்று விட்டால் என்ன செய்வது?

உடனே, முருகனின் சக்தி என்று போற்றப்படும் கௌமாரி சற்று நிதானமாக யோசித்தாள். வியாபாரியை அழைத்தாள். ‘‘எனக்கு மஞ்சள் வேண்டும்’’ என்றாள். மனம் மகிழ்ந்த செட்டியப்பர், ‘‘எவ்வளவு வேண்டும்? ஒரு பணத்துக்கா? ரெண்டு பணத்துக்கா?’’ என்று கேட்டார். ‘‘ம்ஹூம்... இதோ, இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போ’’ என்ற கௌமாரி தன் தலையிலிருந்த ஒரு மலரைத் தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினாள்.

அலட்சியமாக அந்த மலரை எடுத்து தராசின் ஒரு தட்டில் வைத்த செட்டியப்பர் மறு தட்டில் மஞ்சளைப் போட்டார். பூ இருந்த தட்டு கீழே இறங்கியது. மறுபடியும் மஞ்சளைப் போட்டார். தட்டு மேலும் கீழே இறங்கியது. என்ன ஆச்சரியம் இது? வியந்த செட்டியப்பர் தான் கொண்டு வந்த ஒரு மூட்டை மஞ்சளையும் தட்டில் வைத்தார். பூ இருந்த தட்டு கீழேயே இருந்தது. வெளிநாட்டு வியாபாரத்திற்காக கப்பலில் ஏற்றி வைத்திருந்த மஞ்சள் மூட்டைகளை எடையில் ஏற்றினார். பூத்தட்டு மேலே வரவேயில்லை. அப்போதுதான் செட்டியப்பருக்கு ஓர் உண்மை புரியத் தொடங்கியது. இந்தப் பெண்கள் சாதாரணப் பெண்கள் அல்ல; தெய்வப் பெண்கள் என உணர்ந்தார். உணர்ந்ததும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

இந்தச் சம்பவம் நடந்த இடமே மணக்கால். அங்கு சப்தமாதர்களுக்கு ஒரு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது. எழுவரில் முதன்மையானவளாக கௌமாரி கருதப்பட்டு, நங்கையர் அம்மன் என்ற திருநாமத்துடன், தன் பெயரில் உள்ள அந்த ஆலயத்தில் மற்ற ஆறு மாதர்களுடன் அருட்பாலிக்கிறாள். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சப்தமாதர்கள் ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும். ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் மதுரை வீரன் சந்நதி உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலது புறம் செட்டியப்பரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறங்களிலும் பிரமாண்டமான துவார பாலகிகள் நம்மை வரவேற்கிறார்கள். மிகப் பெரிய அளவிலான இத்திருமேனிகள் பொதுவாக வேறு எந்தக் கோயிலிலும் காணக்கிடைக்காதவை.

அடுத்துள்ள கருவறையில் சப்தமாதர்களின் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. பிராகாரத்தின் தென் திசையில் பெரிய அளவிலான யானை சிலை மீது ஐயனாரும் குதிரை சிலை மீது கருப்பண்ணசாமியும் சுதை வடிவில் அருள்கின்றனர். இந்த கருப்பண்ணசாமி கடன் வசூல் செய்வதில் அசகாய சூரர். ஆம்; வராத கடன்கள் திரும்பி வர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் போதும். விரைவாக அந்தக் கடன்கள் வசூலாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள். குடும்ப பிரச்னைகள் தீர, திருமணம் தடையின்றி நடந்தேற கருப்பண்ணசாமிக்கு மாலை போட்டு பிரார்த்தனை செய்து பலன் காண்கின்றனர்.

தெற்கு பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் நருவளி மரம் உள்ளது. இந்த மரம் பூப்பதில்லை. காய்ப்பதில்லை. ஆனால், பெண்கள் உரிய வயதில் பூப்பெய்துவதற்கும் திருமணமான பெண்கள் குழந்தைப் பேறு அடைவதற்கும் இந்த மரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் அந்த பாக்கியம் கிட்டுவது நிச்சயம். சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. மாசி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து நடைபெறும் கரகத் திருவிழா இங்கு வெகு பிரசித்தம். இந்த ஐந்து நாள் திருவிழாவில் குட்டி குடித்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். ஆயிரக்கணக்கான மக்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டு மகிழ்கின்றனர்.

நவராத்திரி 10 நாட்களும் இங்கு இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 10ம் நாள் இங்கு நடைபெறும் தயிர் பாவாடை எனும் விழா எங்கும் காணமுடியாத அதிசயத் திருவிழாவாகும். அர்த்த மண்டபம் முழவதும் சாதத்தை வடித்து, தயிரைக் கலந்து தயிர்சாதமாகக் கொட்டி வைத்து நிரவி விடுவார்கள். பார்க்கும்போது அர்த்த மண்டபம் வெள்ளை வெளேர் என மல்லிகை மலர்களால் மறைக்கப்பட்டது போல் இருக்கும். பின்னர் அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

ஆடி, தை, மாத வெள்ளிக்கிழமைகளில்
மாவிளக்கு பூஜை கோலாகலமாக இங்கு நடைபெறும். சித்திரை மாதப் பிறப்பு, விஜயதசமி ஆகிய நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்தாலும் ஆலயம் பகல் நேரம் முழுவதும் திறந்திருப்பதை பக்தர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கிறார்கள். அகந்தையுடன் வந்த செட்டியப்பரின் கொட்டத்தை அடக்கிய கௌமாரியும் பிற மாதர்களும் தம்மை வணங்கும் பக்தர்களின் அகந்தையை, அவர்களுடைய எதிரிகளை அழித்து, பக்தர்களை மகிழ்வோடு வாழ வைப்பது நிஜம் என்பது இத்தல பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
திருச்சி &அன்பில் பேருந்து சாலையில்
லால்குடியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது, மணக்கால்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum