Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


அழியா வளம் அளிக்கும் அழியாபதீஸ்வரர்

Go down

அழியா வளம் அளிக்கும் அழியாபதீஸ்வரர் Empty அழியா வளம் அளிக்கும் அழியாபதீஸ்வரர்

Post by oviya Sun Dec 07, 2014 3:21 pm

திருநெல்வேலி

காவிரி நதியைப் போலவே, அகத்தியப் பெருமான் உருவாக்கிய இன்னொரு ஜீவநதி, தாமிரபரணி. இது வடக்கிலிருந்து தெற்காகவும் தெற்கிலிருந்து  வடக்காகவும் பாயும் இடம், நெல்லைக்கும் மேலப் பாளையத்துக்கும் இடையே உள்ளது. இந்தப் பகுதிக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தன் தந்தை யின் அஸ்தியை கலசத்தில் எடுத்துக் கொண்டு ஒருவர், புண்ணிய தீர்த்தம் தேடி புறப்பட்டார். இவர் காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களிலுள்ள புண்ணிய திருத்தலங்களில் சென்று அஸ்தியைக் கரைத்தார். ஆனால், எந்தவொரு மாற்றமும் இல்லை. தாமிரபரணித் துறைகளில் அவர் அஸ்தியை கரைத்துக்கொண்டே வந்தார். நெல்லை அருகேயுள்ள கருப்பன் துறையில் கரைத்தபோது, வெண்மையான அஸ்தி கருமை நிறமானது. 

குறுக்குத்துறை வந்தபோது அஸ்தி குருத்து விட்டது. சிந்து பூந்துறையில் கரைத்த போது, மலர்ந்து மலர்களாகி விட்டதாம். ஆகவே, தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில்  மிக முக்கியமாக இந்த மூன்றையும் கூறுகிறார்கள். இதற்கு அருகேதான் அழியாபதீஸ்வரர் கோயில் உள்ளது. குவளைப் பூக்கள் சிவனுக்கு மிகவும் பிடித்தவை. இந்தப் பூக்கள் கருநீல நிறமாக காட்சி தரும். எனவே கருப்பு + பூ + துறை கருப்பூந்துறை என்று பெயர்பெற்று, அதன்பின் கருப்பண் துறையாக மருவி விட்டது.  தற்போது இந்த இடம் பகவதிபுரம் என்றழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது.  இதன் காரணத்தினை தெரிந்து கொள்ள இங்குள்ள மக்கள் கோரக்க முனிவரை நாடினர். 

மக்களின் குறைகளை சித்தர் கேட்டார். பின்னர், அவர் ஞானதிருஷ்டியின் மூலமாக அதற்கான காரணத்தை அறிந்து கொண்டார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட அக்கினி தேவனும் அவரது வாகனமாகிய ஆடும் சிவ பெருமானின் சாபத்திற்கு உள்ளானார்கள். தன்னை  மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தினை கண்டு வெகுண்டு எழுந்தார் சிவபெருமான். அவர் தட்சனை அழித்து உக்கிர வடிவில் காட்சி தந்தார். அக்கினி ரூபத்தில் அவர் காட்சி தந்த காரணத்தினால் இப்பகுதி பஞ்சத்தால் கருக ஆரம்பித்தது. நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பர் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியிலுள்ள நெற்பயிர்கள் கருகின. எனவே, இந்த இடம்  கருங்காடு, கரிக்காதோப்பு என்றழைக்கப்பட்டது. 

இதை தெரிந்து கொண்ட கோரக்கர், சிவனின் கோபத்தினை தணிக்க ஒரு ஆலோசனை கூறினார். கோபத்திற்குக் காரணமான அக்னீஸ்வரர் தற்போது மேலநத்தம் என்னும்  இடத்தில் மேற்கு நோக்கிய ஆலயத்தில் உள்ளார். ஆற்றுக்கு எதிர்க்கரையில் கிழக்கு நோக்கி லிங்கம் அமைந்து யாக பூஜைகள் செய்தால் அழிந்து  வரும் இப்பகுதியை அழியாபதியாக்கி விடலாம்; நாட்டில் பஞ்சம் நீங்கி நலம் கிடைக்கும் என்று கூறினார். இதைக் கேட்ட மக்களும் மன்னனும் அந்தப் பணியை அவரே மேற்கொண்டு நடத்தித்தரவேண்டும் என்று கோரக்க முனிவரிடம் கேட்டுக்கொண்டார்கள். உடனே, முனிவர் தாமிரபரணியின் மேற்குக் கரையில் தற்போது கோயிலுள்ள இடத்திற்கு வந்தார். 

அங்கு ஒரு சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். பௌர்ணமியன்று யாகங்களை நடத்தினார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் அக்கினி சொரூபத்தில் இருந்து அகன்றார். அந்த இடத்திலேயே அழியாபதி ஈஸ்வரராக காட்சி தந்து அமர்ந்தார். அதன்பின் நாடு முழுவதும் பஞ்சம் நீங்கியது. இந்தச் சம்பவத்திற்குக் காரணமான சிவபெருமான் தாமிரபரணிக் கரையில் கிழக்கு திசையில் மேலநத்தம் என்னும் கிராமத்தில் மேற்கு நோக்கி அக்னீஸ்வரராக காட்சி தருகிறார். இதற்கு எதிர்ப்புறத்தில்தான் அவருடைய உக்கிரத்தைத் தணித்த அழியாபதி சிவன் உள்ளார். அக்காலத்தில் வயல் வெளிகளில் விளைந்த நெற்பயிர்களில் ஒரு  குறிப்பிட்ட அளவை விவசாயிகள் அழியாபதீஸ்வரர் கோயிலுக்கு அளிப்பது வழக்கமாக இருந்துள்ளது. 

இங்கு நிவேதனம் செய்த பிறகுதான் நெல்லை யப்பருக்கே நிவேதனம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஏனெனில். நெல்லுக்கு வேலியிட்ட நெல்லையப்பரின் 
ஊருக்கு வந்த அழிவை நீக்கியவர் அல்லவா அழியாபதீஸ்வரர்! இந்த இடமே சித்தர்களின் சொர்க்க புரியாக விளங்குகிறது. சுமார் 1300 வருடங்களுக்கு முன்பே இங்கு ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்துள்ளார் என்றும், அதன் பிறகே கோரக்கர் இந்த இடத்தில் சிவனை பிரதிஷ்டை செய்தார் என்றும் பிரச்னம் பார்த்தபோது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சற்று தூரத்தில் அடக்கமாகியுள்ள அமாவாசை சித்தர், பாலாமடை நீலகண்ட சாஸ்திரி, வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் போன்றவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தங்கி சிவனுக்கு பூஜை செய்துள்ளார்கள். 

இந்தக் கோயில், சுமார் 800 வருடங்களுக்கு முன்பு வீரபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.   வயலுக்கு இடையே சோலை போல காட்சியளிக்கும் இடத்தில் தாமிரபரணியின் கரையில் உள்ளது.  முதலில் ஆலயத்தின் தல விருட்சமான அத்திமரம் வரவேற்கிறது. உள்ளே  நுழைந்தால் அங்கு கொடிமரமோ, நந்தியோ இல்லை. கர்ப்பக் கிரகத்திற்குள் ஞானேஸ்வரராக அழியாபதீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.  இறைவியின் திருநாமம் சௌந்தரவல்லி என்ற சிவகாமி அம்பாள். இங்குள்ள அம்பாள் தென்மேற்கு திசை நோக்கி தலையைச் சாய்த்து ஒய்யாரமாக  நிமிர்ந்து பார்க்கும் அழகுடன் விளங்குகிறார். இதனால் அம்பாளுக்கு சௌந்தர்யவல்லி, சௌந்தரி என்ற திருநாமங்கள் ஏற்பட்டுள்ளன. 

பக்தர்கள்  இறைவியின் முன் வைக்கும் கோரிக்கைகளை அம்பாள் ஏற்று அதை இறைவனாகிய அழியாபதீஸ்வரரிடம் தெரிவிக்கும் முகபாவனையில் காட்சி தரு வது இந்த தலத்தின் சிறப்பு. இது போன்ற தோற்றத்தை மற்ற தலங்களில் காண்பது அரிது. ஒரு சுற்றுப் பிராகாரம் கொண்ட கோயிலின் விமானம் பழமையின் பெருமையைக் கூறும் வகையில் அமைந்துள்ளது. உள்சுற்றாக வந்தால், தட்சிணா மூர்த்தி, கன்னி மூல விநாயகர், நாகர், சண்முகர், வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர்.  

மூன்று மண்டபங்களுடன் காட்சி தருகிறது ஆலயம். இந்தக் கோயிலின் தீர்த்தம் காருண்ய தீர்த்தம். இந்த தீர்த்த பெருமையை திருநெல்வேலி தலபு ராணம் கூறுகிறது. குடும்பத்தில் ஒற்றுமையும் புத்திர பாக்கியமும் தொழில் விருத்தியையும் இத்தல ஈசன் அருள்கிறார். தற்போது கும்பாபிஷேகப் பணி நடந்து வருகிறது. தொடர்புக்கு: 9361061610, 9894468478. நெல்லை ரயில் நிலையம் மற்றும் நெல்லை டவுனிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum