Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அஷ்ட கோணலையும் நேராக்கும் அஷ்ட லிங்கங்கள்

Go down

அஷ்ட கோணலையும் நேராக்கும் அஷ்ட லிங்கங்கள் Empty அஷ்ட கோணலையும் நேராக்கும் அஷ்ட லிங்கங்கள்

Post by oviya Sun Dec 07, 2014 3:27 pm

கூனஞ்சேரி

அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு மேற்கு திசையில் கூனஞ்சேரியில் குழந்தைகளுக்கென்றே அருள்தரும் சிவாலயம் ஒன்று அமைந்திருக்கிறது. மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது என்கிறார்கள். கூனஞ்சேரியை முன்னொரு காலத்தில் கூன் நிமிர்ந்தபுரம் என்றழைத்தார்கள். தானவ மகரிஷி இத்தலத்தில் வாழ்ந்து வந்தார். மழலைப் பேறு இல்லாத ஏக்கம் அந்த சிவபக்தரை வாட்டியது. அவர் கனவில் தோன்றிய ஈசன், ஏழை அந்தணச் சிறுவர்களுக்கு இலவசமாக வேத பாடங்களை அவர் சொல்லிக் கொடுத்தால் அப்பேறு கிட்டும் என்று வாக்கு அருளினார். அதன்படி, தனது வீட்டுத் திண்ணையிலேயே வேதபாடசாலையை தொடங்கி ஏழைச் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவந்தார் மகரிஷி. 

சில மாதங்களில் அவரது மனைவி கர்ப்பமானார். பாடம் கற்பித்தபோது தன் மாணவன் ஒருவன் அதை கவனிக்காமல் இருந்ததைக் கண்டு கோபித்தார் தானவர். அதை மனைவியின் கர்ப்பத்தில் இருந்த கருசுட்டிக்காட்டி குறை சொன்னது. அதனால் மேலும் கோபமுற்ற தானவர் அந்தக் குழந்தை எட்டு கோணல்களுடன் அங்கஹீனனாகப் பிறக்குமாறு சபித்துவிட்டார். அப்படியே குழந்தை பிறக்க மனம் கலங்கினார் தானவர். அந்த வருத்தத்திலேயே அரசன் வைத்த ஒரு போட்டியில் தோற்றும் போனார். மனம் வெதும்பி இறைவனிடம் மன்றாட,  ‘‘அஷ்டமி திதி அன்று சிவாலயத்தில் எட்டு லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் பிள்ளையின் உடம்பு நேராகும். 

ஞானமுள்ள பிள்ளையாகவும் மாறுவான்’’ என்றார் ஈசன். அப்படியே தானவர் செய்ய பிள்ளையின் அஷ்ட கோணலும் மறைந்து அழகான சரீரத்தோடு குழந்தை நடந்தான். தானவரின் தோல்விக்குப் பிறகு அவரை யாரும் மதிக்கவில்லை. ஏழு வயதைத் தொட்ட அவரது பிள்ளை மன்னன் அறிவித்த புலமைப் போட்டியில் கலந்துகொள்ள அரண்மனைக்குச் சென்றான். மன்னனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  அவனது அவைப் புலவர்கள் எத்தனை அறிவீனமானவர்கள் என்பதைத் தான் நிரூபிப்பதாக சவால் விட்டான். போட்டி துவங்கியது. ‘‘நெருப்புக்கும், தீபத்துக்கும் என்ன வித்தியாசம்?’’ என்று முதல் புலவரிடம் கேட்டான் சிறுவன். ‘‘முட்டாள் தனமான கேள்வி’’ என்றார் புலவர்.

‘‘அரணிக்கட்டையிலிருந்து வருவது நெருப்பு. ஆண்டவன் சந்நதிக்குப் போனால் தீபம். இடுகாட்டில் நெருப்பு. யாகத்தீயில் அக்கினி...’’ என்றான். புலவர் தோற்று வாய் பொத்தி ஓடினார். இரண்டாவது புலவர் வந்து நின்றபோது உட்கார்ந்திருந்த சிறுவன் அவரைப் பார்த்து, ‘‘நான் நிற்கிறேன். நீ உட்கார்ந்திருக்கிறாய். இதுதான் இங்கே உண்மை. தெரியுமா?’’ என்றான்.  புலவரோ, ‘‘மூடச் சிறுவனே, நீதானே உட்கார்ந்திருக்கிறாய்’’ என்று கோபத்துடன் கேட்க, ‘‘உண்மைதான். உங்கள் வாயை மூட வந்த நானே அனைவரின் மனதிலும் நிற்கிறேன். அற்ப உடலுக்குள் பயம் கொண்ட ஜீவனாய் நீ உட்கார்ந்திருக்கிறாய்’’ என்றதும் மன்னருக்கே வியர்த்தது. 

மூன்றாமவரை அழைத்து, ‘‘சாட்டையால் அந்தப் புலவரை இரு அடிகள் அடித்தேன். உண்மைதானே?’’ எனக் கேட்க, ‘‘நீங்கள் அவரைத் தொடவே இல்லையே...’’ என்று குழம்பினார் இவர். ‘‘ஒரு பொருளைப் பற்றி விளக்கி சாட்டையடி கொடுத்தேனே கவனிக்கவில்லையா?’’ என்றான். அவனைக் கட்டித் தழுவிய மன்னன், ‘‘அறிவின் சிகரமே. உன்னை அலட்சியம் செய்தேனே! என் நாட்டில் இப்படியொரு பாலகப் புலவனா! உனக்கு பொற்காசு முடிப்புகள் மட்டும் போதாது. வேண்டியவற்றை நீயே எடுத்துக்கொள்’’ என்றான். ‘‘எனக்குத் தேவையானதை மட்டும் கொடுங்கள். புலவர்களுக்கான நிதியை பங்கிட்டு கொடுத்து விடுங்கள்’’ என்றதும் அவனது நல்ல மனதைப் புரிந்து கொண்ட புலவர்கள், ‘‘தானவ ரிஷியின் தவப் புதல்வர் வாழ்க’’ என்று குரல் எழுப்பினர். 

ஞானத்தில் சிறந்து விளங்கிய அந்த பாலகனை பிற்காலத்தில் அனைவரும் அஷ்ட வக்கிரர் என்று போற்றினர். பரிசுப் பொருட்களுடன் தந்தையைக் கண்டு விவரம் கூறினான் சிறுவன். பெரிதும் மகிழ்ந்த தானவர், இறுதிவரை சிவத்தொண்டு புரிந்து இறைவனோடு ஐக்கியமானார். சிறுவனின் அஷ்ட கோணலான உடலை நிமிர்த்திய இத்தலத்துச் சிவபெருமானை ‘மூர்த்தி அழகன்’ என்று தலபுராணம் போற்றுகிறது. பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியன அஷ்ட மூர்த்தங்களாக சிவலிங்க வடிவில் இங்கே காட்சி தருகின்றன. 

இப்பேற்பட்ட கூன் நிமிர்ந்த புரத்தில் சிவாலய மூர்த்தங்களாக விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நந்தி தேவர், அஷ்ட லிங்கத் திருமேனிகள் எல்லாம் திருச்சுற்றில் காட்சி தருகின்றனர். அஷ்ட வக்கிரர், தானவ மகரிஷிக்கான சிலைகள் தனியே உள்ளன. நான்கு அடி உயரத்தில் பாணத்துடன் மேற்கு திசை நோக்கி கைலாசநாதரும் ஆறடி உயரத்தில் தென்முகம் நோக்கியவாறு அம்பிகையும் காட்சி தருகின்றனர். சுவாமிக்கும் அம்பிகைக்கும் ஏகதள விமானக் கருவறை அமைந்திருக்கிறது. தலவிருட்சம் வில்வமரம். 

நரம்புத் தளர்ச்சி, மனநிலை சரியில்லாத பாலாரிஷ்ட தோஷமுள்ள குழந்தைகளை பெற்றோர்கள்  வெள்ளிக்கிழமை, ஞாயிறு, திங்கள், பௌர்ணமி நாட்களில் இந்த ஆலயத்திற்கு அழைத்துவந்து அஷ்டலிங்கங்களுக்கு பாலாபிஷேகம் செய்து வில்வத் தளங்களால் அர்ச்சனை செய்ய, அந்தக் குழந்தைகள் நலம் பெறுகிறார்கள். அஷ்ட லிங்கங்கள் மேல் சாற்றிய நல்லெண்ணெயை மணமான பெண்கள் உண்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum