Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம்

Go down

கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம் Empty கனவில் வந்து கோயில் கொண்ட சுந்தரமகாலிங்கம்

Post by oviya Tue Dec 09, 2014 1:33 pm

முருகன்குறிச்சி

சரித்திரக் காலம் தொட்டு இந்த நூற்றாண்டுவரை பல ஆலயங்கள் கனவின் மூலமாகவே இறைவனால் உணர்த்தப்பட்டு கட்டப்பட்டன. அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த பக்தைக்கும் நிகழ்ந்திருக்கிறது. இவருக்கு தொடக்கத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபாடின்றி இருந்து வந்தார். இந்தச் சூழ்நிலையில் அவரது கணவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டனர். மெல்ல மெல்ல இறைவனின் மீது நாட்டம் வந்தது. வீட்டின் சுற்றுப்புறத்திலிருந்த வேப்ப மரத்தையே ஆதிபராசக்தி அம்மனாக நினைத்து வழிபடத் தொடங்கினார்.

அவரது கணவருக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து உடல்நலம் தேறினார். இதைத் தொடர்ந்து ஆதிபராசக்தியையும் பேராச்சி அம்மனையும் தீவிரமாக வழிபடத் தொடங்கினார். அம்மனுக்கு ஆலயம் அமைக்க வேண்டுமென்று மனதிற்குள் தீவிரமாக எண்ணி வந்தார். இந்நிலையில் ஒருநாள் அவரது கனவில் மலைகளுக்கு இடையில் தண்ணீர் விழும் சத்தம், சித்தர்கள் நடமாடும் காட்சி, கருப்பசாமி யின் தோற்றமும் தோன்றி மறைந்தன. அப்போது அவரது கனவில் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான பூசலார் நாயனார் தோன்றி, ‘‘நான் பூசலார் நாயனார்.

விரைவில் நீ சிவாலயம் ஒன்றை கட்டப் போகிறாய். பரமேஸ்வரனே உனக்கு அருகில் இருக்கும்போது இப்படி தூங்கிக் கொண்டி ருக்கிறாயே...’’ என்று கூறி மறைந்தார். மறுநாள் காலையில் விழித்ததும் தான் கண்ட கனவு குறித்து தனது கணவரிடம் கூறினார். ஆனால், அவரால் அது எந்த மலை என்று
கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் ஒருநாள் கனவில் பரமேஸ்வரனே தோன்றி ‘‘என்னைப் பார்... நான் சாய்ந்த நிலையில் இருக்கிறேன். என்னை உன் ஊர் எல்லையில் கொண்டு வந்து, சுந்தர மகாலிங்கம் எனப் பெயரிட்டு ஆலயப் பிரதிஷ்டை செய்’’ என்று உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டையிலுள்ள ஆன்மிக அன்பர் ஒருவர் மூலம் சதுரகிரி மலையைப் பற்றி அறிந்த அந்த பக்தை சதுரகிரிக்குச் சென்றார். அங்கு கண்ட காட்சிகள் அவரை சிலிர்க்க வைத்தன. கனவில் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றாக அவர் முன் தோன்றின. தான் கனவில் கண்ட மலை இதுதான் என்று உணர்ந்து கொண்டு பரமேஸ்வரன் காட்சி தந்த இடத்தில் இருந்த லிங்கத்தைக் கண்டு மெய்மறந்தார். இதைத் தொடர்ந்து பரமேஸ்வரனின் உத்தரவின் பேரில் ஆலயத்திற்கான பணிகளை முனைப்புடன் தொடங்கினார், பாளையங்கோட்டை முருகன் குறிச்சியிலுள்ள தனது நிலத்தின் ஒரு பகுதியில் ஆலயத்தை அமைப்பது என்று முடிவெடுத்தார்.

சுந்தர மகாலிங்கேஸ்வரருக்கு பாலாலயம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஆனந்தவல்லி தாயார், பதினெட்டு சித்தர்கள், நந்திகேஸ்வ ரர், நால்வர், துர்க்கை அம்மன், காலபைரவர், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பாலமுருகன், நடராஜர் போன்றவையும் பாலாலயத்திற்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. கற்பக விநாயகர், ஆனந்தவல்லி அம்மன், லிங்கோத்பவர், கொடிமரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. சுந்தர மகாலிங்கேஸ்வரர் உத்தரவின் பேரில் ஜூன் 26, புதன்கி ழமை அன்று கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் ஆலயத் திருப்பணி முடிவடையாததால் அன்பர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆலயத் தொடர்புக்கு: 9003994978 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். திருநெல்வேலியிலிருந்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் வழியாக செல்லும் வழித்தடத்தில் ஊசிக்கோபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண் டும். அங்கிருந்து ஐந்து நிமிட தூரத்தில் ஆலயத்தை அடையலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum