Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மருத்துவனாய் வந்த மகாதேவன்

Go down

மருத்துவனாய் வந்த மகாதேவன் Empty மருத்துவனாய் வந்த மகாதேவன்

Post by oviya Tue Dec 09, 2014 1:47 pm

மருங்கப்பள்ளம்

சமஸ்கிருதத்தில் ‘ஔஷதம்’ என்றால் ‘மருந்து’ என்று பொருள். ஔஷதபுரீஸ்வரர் - மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் சில சிவாலயங்கள் உள்ளன. மருந்தீசர் என்ற பெயரை ஒட்டியே மருந்துப்பள்ளம் என்றழைக்கப் பெற்ற தலம், நாளடைவில் திரிந்து மருங்கப்பள்ளம் என்றானது. இறைவன் ஔஷதபுரீஸ்வரர் என்ற மருந்தீஸ்வரர். அம்பாள் பெரியநாயகி என்ற ஆனந்தவல்லி. அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துச் செல்லும்போது அதிலிருந்து சில சிதறல்கள் இங்கு விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. தலவிருட்சம் பாதிரி மரம். உற்சவ மூர்த்தி சந்திரசேகரர் என்று போற்றப்படுகிறார்.

சோழ, மராட்டிய மன்னர்கள் இத்தல ஈசனை பூஜித்ததாகத் தெரிகிறது. பராந்தகச் சோழனின் படைத் தளபதியான பிரம்மராயன் என்பவரால் செப்பனிடப்பட்டது. இரண்டாம் சரபோஜி மன்னனின் வெண்குஷ்டம் நிவர்த்தியான தலமும் இதுதான். இத்தல இறைவன் தன் நோயைத் தீர்த்ததற்காக, மன்னர் இக்கோயிலை விரிவுபடுத்திக் கட்டினார் என்கிறது சரித்திரம். மன்னன் அளித்த நிவந்தங்கள் பற்றித் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் விவரங்கள் உள்ளன. தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் இத்திருக்கோயிலுக்கு மருங்கப்பள்ளம் கிராமம் இனாமாக வழங்கப்பட்டது.
இத்தலத்து ஐம்பொன் சிலைகளெல்லாம் களவாடப்பட்டாலும் இக்கிராம மக்களின் இடைவிடாத முயற்சியால் அவை திரும்பக் கிடைத்துள்ளன.
இங்குள்ள நடராஜர் பேரழகு வாய்ந்தவர். இச்சிலைகள் அனைத்துமே கி.பி. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இக்கோயிலைப் புனரமைத்து மற்றும் நிவந்தங்கள் அளித்த சோழர் படைத்தளபதி பிரம்மராயரின் திருவுருவச்சிலை கோயிலின் நந்தி மண்டபம் எதிரே உள்ளது.
இத்தலத்தில் மாசிமகம் திருவிழா தொன்று தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாசி மாதம் சிவராத்திரி விழா கடந்த 13 ஆண்டுகளாகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்தல சனீஸ்வரர் தனிச் சிறப்பு பெற்றவர். அகத்தியர், வசிஷ்டர் காண்டங்களிலும் சுவடி ஜோதிடத்திலும் இத்தலம் விவரிக்கப்பட்டிருக்கிறது.

நோய்வாய்ப்பட்டவர்கள் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் நோய் நீங்கி மிக விரைவில் நலமடைவர் என்கிறார்கள். சனீஸ்வரருக்கு அருகேயே லட்சுமி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மும்மூர்த்திகளும் அருளும் பூமி என்றும் அவர்களின் பேரருள் அணைந்த பூமி என்றும் புராணங்கள் கூறுகின்றன. பிறவிப் பிணியையே இத்தல மருந்தீஸ்வரர் தீர்க்கிறார். இத்தல தீர்த்தத்தை தன்வந்திரித் தீர்த்தம் என்றும் சொல்கின்றனர். மேலும் கர்மவினை, அகங்காரம், ஆணவம் என்ற மும்மலங்கள் போன்ற வாழ்க்கைப் பள்ளங்களைத் தீர்ப்பதில் தன்னிகரில்லாத கோயில் இது. அஸ்வினி தேவர்களின் அரூபமான சீரிய பூஜை நிகழும் வைத்தியநாதத் தலங்களுள் மருங்கப்பள்ளமும் ஒன்று என்பது அமானுஷ்ய தகவல்.

மணி மந்திரம், ஔஷதம் என்ற முக்கோண ஔஷதாதி அதாவது, முக்கூட்டு நோய் நிவாரண சக்திகளில் தலையாய இடமே இது என்று பல நூல்கள் அறிவுறுத்துகின்றன. மருங்கப்பள்ளம் மருந்தீஸ்வரர் அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணம் தரும் மருந்து சக்திகளையும் அருள்கிறார். இந்த நோய் தீர்க்கும் தன்மை இத்தலத்தில் யுகாந்திரமாக தொடர்கிறது. சகலத்துறை வைத்தியர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் தொழ வேண்டிய முக்கியத் தலங்களுள் ஒன்று மருங்கப்பள்ளம். மருத்துவத் துறையில் படிப்பவர்கள் நிச்சயம் வந்து வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள்.

‘‘முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன்
நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்;
தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.’’

-என்று திருவாசகம் உணர்த்துகிறது. பிறவிப்பிணியைத் தீர்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் பேரருளாளனை,

‘‘....அடியார்க் கென்று
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமு மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னை...’’

- என்று ஈசன் முன் நின்று இறைஞ்சினால் தேகத்தைப் பற்றியிருக்கும் நோய்கள் ஓடத்தானே செய்யும்? நோயுடன் நோய்க்கு மூலமான மர்ம வினைகளையும் களைய உதவும் தலம் இது. அஸ்வினி, ஆயில்யம், செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம். இங்கு மிருத்யுஞ்சய ஹோமம் அடிக்கடி நடக்கிறது. அஸ்வினி தேவர்களைச் சேர்த்து ஆராதிக்கும் வகையில் இந்த ஹோமத்தில் சில நேரங்களில் குதிரைகளும் பங்கு பெறுகின்றன. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெற்றோர் ஏராளம்.

‘‘குன்றாத மூவருவாய் அருவாய் ஞானக்
கொழுந்தாகி யறுசமயக் கூத்து மாடி
நின்றாயே மாயையெனும் திரையை நீக்கி
நின்னையா ரறியவல்லார், நினைப்போர்
நெஞ்சம்
மன்றாக வினயக்கூடத் தாடவல்ல
மணியேயென் கண்ணே மாமருந்தே’’

-என்பார் தாயுமானவ சுவாமிகள். பிரதோஷ தினங்களிலும், திருவாதிரை அன்றும் சுவாமி வீதி உலா உண்டு. செவ்வாய் கிழமைகளில் ராகு கால துர்க்கை வழிபாடும் வியாழக்கிழமை குருபகவானுக்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04373-232029, 99444 75612, 9715717400 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில், பேராவூரணி-குருவிக்கரம்பை அல்லது புதுக்கோட்டை- பேராவூரணி-குருவிக்கரம்பை வழியாக மருங்கப்பள்ளத்தை அடையலாம். பட்டுக்கோட்டை-நாடியம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum