Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மங்கலம் தழைத்திடச் செய்யும் மணிகர்ணிகாபுஷ்கரணி!

Go down

மங்கலம் தழைத்திடச் செய்யும் மணிகர்ணிகாபுஷ்கரணி! Empty மங்கலம் தழைத்திடச் செய்யும் மணிகர்ணிகாபுஷ்கரணி!

Post by oviya Thu Dec 11, 2014 1:35 pm

‘கர்ம பூமி’ என்று புகழ்ந்து பேசப்படும் இந்திய மண்ணில் பூஜைகளாலும் நற்கருமங்களாலும் வளமுடன் வாழலாம் என்று முன்னோர்கள் சாஸ்திரங்களின் வாயிலாக தெரிவிக்கின்றனர். அவற்றில் தெய்வ பூஜை, குரு பூஜை, முன்னோர் பூஜை என்ற வகைகளில் மூன்றாவதாக உள்ள மு ன்னோர் வழிபாடு மிக முக்கியமாக நம்முடைய நல்ல வாழ்க்கையை தீர்மானிப்பதாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட தலத்திலோ, தீர்த்தக் கரையிலோ முன்னோர்களுக்காக திதி மற்றும் பித்ரு பூஜனம் போன்ற கர்மாக்களை செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கிறது என்று தர்ம சாஸ்திரம் உறுதியாகக் கூறுகிறது.

புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி முதல் அமாவாசை திதி வரை நமது முன்னோர் களுக்கு கோடை விடுமுறை போல சுவர்க்க லோகத்தில் விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களது வாரிசுகள் சமர்ப்பிக்கும் தர்ப்பணம், படையலை ஏற்றுக் கொள்ள வருவார்கள். இந்தக் காலத்தையே மகாளயம் என் றழைக்கிறோம். வருடம் பூராவும் பித்ருக்களுக்காக இந்தக் கடமையை மேற்கொள்ளாதவர்கள் இப்பொழுது நிச்சயமாக செய்தேயாக வேண்டும் என்று சாஸ்திரங்கள் வற்புறுத்துகின்றன. மகாளய அமாவாசை சிறப்பு: தட்சிணாயண புண்ணிய காலங்களின் தொடக்கமான ஆடி முதல் மார்கழி மாதம் வரை தேவர்களின் இரவுக் காலம்.

இதுவே பித்ருக்களுக்கு பகல் பொழுதாகிறது. இக்காலத்தில்தான் நமது பித்ருக்கள் தீர்த்தக்கரை மற்றும் நதிக்கரை, வீட்டு வாசல் நிலை போன்ற இடங்களில் சூட்சுமமாக வந்து அமர்ந்து நாம் நீத்தார் கடன் நிறைவேற்றுகிறோமா என்று கவனிப்பார்கள். தர்ப்பைப் புல்லில் அவர்களை பாவித்து எள்ளையும் நீரையும் தர்ப்பணமாக வார்த்து ‘திருப்யத; திருப்யத; திருப்யத’ என்று மூன்று முறை கூறவேண்டும். இதற்கு திலோதகம் என்று பொருள். ‘திலம் என்கிற எள்ளால் உதகம் என்கிற நீரைக் கலந்து உங்கள் தாகம் தீர்ந்து திருப்தி அடைய தர்ப்பணம் செய்கிறேன். என் குலம் நன்றாக வாழ நீங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்’ என்று கூறி ஆத்ம பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

இந்த பித்ரு கர்மாவை புனித தீர்த்தக் கரைகளில் செய்வது விசேஷமான பலன்களைத் தருகிறது. ‘கங்கே கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் ஸதைரபி’
-ஒருவர் ‘கங்கை’ என்று மனதார உச்சரிப்பதால் அந்த கங்கை எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், புண்ணியம் பெற்று பிரம்ம லோகத்தை அடைவார் என்கிறது வேதசாஸ்திரம். அந்தப் புனித கங்கை வாரணாசி என்ற புனித நகரமான காசியில் தவழ்ந்து ஓடுகிறது. இதன் ஒரு புனிதத் தீர்த்தக் கட் டம்தான் மணிகர்ணிகா காட். இந்த மணிகர்ணிகா கட்டத்தின் திருக்கதையை நாம் படித்தாலேயே பித்ருக்கள் திருப்தி அடைவார்களாம். மணிகர்ணிகாவின் திருக்கதைதான் என்ன?
புனித வாரணாசியில் கங்கை நதி வருவதற்கு முன்பாகவே மணிகர்ணிகா வந்து விட்டதாக காசிக்காண்ட புராணம் சொல்கிறது.

ஸ்ரீமந் நாராயணன், தன் தங்கை பார்வதியை பரமசிவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். புதுமணத் தம்பதிகள் இருவரும் திருக்கயிலாயத்தில் உள்ள மலர் வனத்தில் உலவிக்கொண்டிருந்தபோது தேவ கணங்களும் மகரிஷிகளும் அடிக்கடி பரமன் வழியில் குறுக்கிட்டுத் தங்கள் பிரச்னைகளைக் கூறி தீர்வளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். தேவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்து உலகிலுள்ள பிரச்னைகளைத் தெரிவித்தார்கள். இதைக் கண்ட மகாவிஷ்ணு ஒரு முடிவுக்கு வந்தார். வசதி மிகுந்த திருக்கயிலாயத்திலோ, வைகுந்தத்திலோ புதுமணத் தம்பதிகள் தங்கினாலும், இடையூறுகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனைத் தவிர்க்க ஒரு தனி இடத்தைத் தேடினார்.

மிகவும் பிரகாசமான ஒளி, பூலோகத்தில் ஓரிடத்திலிருந்து புறப்பட்டது. அதுவே காசியில் உள்ள கங்கைக் கரையோரமாக இருந்த புனிதமான படித்துறை. அது உலகப் பிரளய காலத்திலும் அழியாத கரை. இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றவர், தன் சக்ராயுதத்தால் ஓர் தீர்த்தத்தை உருவாக்கினார். அந்த இடத்தில் ஆனந்த வனம் ஒ ன்றையும் உண்டாக்கினார். அந்த இடங்களை ஆர்வமுடன் பார்வையிட்டு வந்தபோது பார்வதி தேவியார் கண்ணாடி போன்று தெளிந்த நீரில் முகம் பார்த்து தன் நகைகளைச் சரிசெய்தபோது ஒரு மணி மட்டும் நீரில் விழுந்துவிட்டது.

இதைக் கண்ட பரமன் பார்வதி தேவியின் கையை தன் ஒரு கையால் பிடித்தபடி நீரினுள் மற்றொரு கையை விட்டு அந்த மணியைப் பிடிக்க முயல, அது நீரின் அடியில் சென்று விட்டது. அப்போது அவரது கர்ண குண்டலம் ஒன்றும் நீரினுள் விழுந்து மூழ்கியது. உமையவளின் கழுத்து மணியும், பரமனின் காது குண்டலமும் விழுந்த புனித தீர்த்தக் குளமே மிகவும் சக்தி வாய்ந்த மணிகர்ணிகா திருக்குளம் என்றானது. இந்த தீர்த்தக் கட்டத்தை மகாவிஷ்ணுதான் உருவாக்கினார் என்பதற்கு அடை யாளமாக மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு தீர்த்தக்கரையில் தம்பதி சமேதராய் நின்று அருள்கிறார். காசிக்குச் செல்வோர் இந்த தீர்த்தத்தைக் கண்டு வருதல் மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது.

ஆதிசங்கரர் வருகை

எப்பொழுதும் எல்லா வஸ்துகளையும் தேவியின் சொரூபமாகவே பார்க்கும் ஆதிசங்கரர் மணிகர்ணிகா கட்டில் ஒருமுறை ஸ்நானம் செய்து விசாலாட் சியையும், விஸ்வநாதரையும் தியானம் செய்தபொழுது மணிகர்ணிகாவின் பெருமையைத் தன்னுடைய ஞான திருஷ்டியால் உணர்ந்து அதன் சிறப்பைப் பாடினார்.
பரமேஸ்வரனும் உமாதேவியாரும் புதுமணத் தம்பதிகளாகத் தங்கிய இடம் என்பதால் அங்கே கூடிய தபஸ்விகளும் மகரிஷிகளும், தேவர்களும் சுபநாட்களில் வந்து நீராடி, மகாவிஷ்ணுவையும் தரிசித்துவிட்டுச் சென்றனர்.

ஆரம்பத்தில் காசி வழியாகக் கங்கை நதி ஓடவில்லை. ஒரு மலை மேல் தோன்றிய கங்கா தேவியானவள் மேற்கு திக்கிலிருந்து கிழக்கு நோக்கியபடி தான் ஓடிக்கொண்டிருந்தாள். அவள் மணிகர்ணிகாவின் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தனது பயணப் பாதையைத் திருப்பி வடக்கு நோக்கி ஓடிவந்து மணிகர்ணிகா குளத்தில் ஒரு மங்கை உருவில் நீராடி மகிழ்ந்தாள். அன்று முதல் வாரணாசி வழியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தவள் மணிகர்ணிகா குளத்திற்கு மேலும் சக்தியையும், புகழையும் சேர்த்திருக்கிறாள். அங்கே வந்து நீராடுகிற பக்தர்களையும் புனிதப் படுத்திக்கொண்டிருக்கிறாள்.

காசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முதலில் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, பிறகு கங்கையில் நீராடிவிட்டுத்தான் மு ன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம், பிண்டம் ஆகியவற்றை வைத்து பித்ரு பூஜை செய்து அவர்களைத் திருப்தி அடையச் செய்ய வேண்டும். இந்த மணிகர்ணிகா கட்டத்தில் மூன்று நாட்கள் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடுகள் செய்துவிட்டால், பாபச்சுமை பெற்ற பித்ருக்களாக இருப்பினும் அவர்கள் பாவங்கள் அகற்றப்பட்டு புனிதர்களாகி சுவர்க்க லோகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்பது ஐதீகம். மறுபிறவி எடுத்திருப்பின் நல்ல தர்ம கார்யங்களை செய்யும் புண்ணிய சீலர்களாவர்.

மணிகர்ணிகாவில் திதி செய்வோர்க்கு சுவர்க்க போகமும், நல்வாழ்வும் கிடைக்கும். வழிபாடுகள் முடிந்து அன்னதானம் செய்வதால் மேலும் சிறப்பான வாழ்வைப் பெறலாம். காசிக்குச் செல்வோர், விஸ்வநாதர், விசாலாட்சி, அன்ன பூரணி, தண் டபாணி, சோழி அம்மன், கால பைரவர் ஆகியோரை தரிசித்து, மணிகர்ணிகாவையும் தேவியாக பாவித்து வணங்க வேண்டும். தகப்பனார் உயிருடன் இருக்கும்போது, பித்ருக்களுக்காக திதி, பிண்டம், தர்ப்பணம் அளிக்கும் அதிகாரம் ஒருவருக்குக் கிடையாது. ஆனால், அதற்கு பதிலாக அவர் தன் மனைவியுடன் மணிகர்ணிகாவில் நீராடி ஆதிசங்கரர் பாடிய மணிகர்ணிகா அஷ்டகத்தை மூன்று முறை நீரில் நின்றபடியே துதித்து இரண்யதானம் செய்யலாம்.

பித்ருக்களை நினைத்து படித்துறையில் நின்று முடிந்த அளவு அன்னதானம் கொடுத்துவிட்டு வரலாம். தென்னகத்து மணிகர்ணிகா தீர்த்தங்கள்..! காசிக்குச் சென்று வழிபாடுகளை நடத்திய பிறகு கயாவிற்குச் சென்று 16 தலைமுறையினருக்கு மாத்ரு சோடசீ என்னும் பிண்ட பூஜையை அங்குள்ள நீரில்லாத பல்குனி நதியருகே படியில் செய்தபின், அங்கேயே விஷ்ணுபாத தரிசனத்தை செய்வார்கள். காசிக்கு எல்லோராலும் சென்று தரிசிக்க இயலாது என்பதாலும் விஷ்ணுபாதத்தை அனைத்து ஆத்மாக்களாலும் தொட்டு வணங்கிட முடியாது என்ற காரணத்தாலும் பகவான் மகாவிஷ்ணு பு ண்ணிய க்ஷேத்திரங்களை தமிழகத்திலும் அமைத்தார்.

சென்னை பல்லாவரத்திற்கு அருகேயுள்ளது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை. இங்கே பகவான் நீர்வண்ணர் தன் விஷ்ணு பாத தரிசன த்தை நின்ற கோலத்தில் அருள்கிறார். இங்கே சக்தி வாய்ந்த மணிகர்ணிகா புஷ்கரணி உள்ளது. மகாளய பட்ச அமாவாசைக்கு 15 தினங்களுக்கு முன்பாக செப்டம்பர் 20ம் நாள் முதல் மகாளய அமாவாசை தினம் வரையுள்ள நாட்களில் முன்னோர்களுக்கான திதி, தர்ப்பணம், பிண்டத்தை சமர்ப்பித்து, இங்குள்ள மணிகர்ணிகா திருக்குளத்துப் படிகளில் வஸ்திரம், அன்னதானங்களைச் செய்து விஷ்ணு பாதத்தை தரிசிக்க வேண்டும். இங்கே செய்யப்படும் பித்ரு பூஜைகள் கயா சிரார்தத்திற்கு சமமானது என்பதால் இத்தலத்தை தமிழகத்தின் ‘விஷ்ணு கயா’ என்று புராணங்கள் சொல்கின்றன.

பித்ரு வழிபாடுகள் முடிந்ததும் அரச மரத்தடியிலுள்ள தூம கேது கணபதி, நாகர்கள், கால பைரவர், ரங்கநாதப் பெருமாளின் நான்கு நிலைகள், மலை, அனுமன், நீர் வண்ணர், விஷ்ணு பாதம் என்று தரிசிக்கலாம். பிறகு மணிகர்ணிகா புஷ்கரணிக்கு கிழக்காக உள்ள அக்ஷய வடமாகிய அரச மரத்தை தரிசித்தல் வேண்டும். அடுத்து திருச்சி திருவரங்கப் பெருமாள் சந்நதிக்கு மேற்காக 13 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் சந்நதிக்கு அரு கிலும் ஒரு மணிகர்ணிகா புஷ்கரணி உள்ளது. இதை வேதகிரி க்ஷேத்திரம் என்பார்கள். இங்கேயுள்ள ஏழு தீர்த்தங்களில் ஒன்றுதான் இந்த புனித புஷ்கரணி.

வேதாரண்யம் யாழ்பழித்த மொழி யம்மை உடனுறை வேதாரண்யேஸ்வரர் கோயிலின் உட்கிணறாக மணிகர்ணிகா கட்டம் அமைந்துள்ளது. வேதார ண்யத்து கடற்கரையில் பித்ரு வழிபாடுகள் செய்தபின் இந்த மணிகர்ணிகாவை தரிசிக்கலாம். மதுரைக்கு அருகிலுள்ள திருப்பூவனம் என்ற சிவ க்ஷேத்திரத்தில் நந்தி தேவர் காவல் காத்திடும் வைகை ஆற்றுக்கு நேர்ப் பார்வையில் மின்னம்மை உடனுறை பூவணநாதர் சந்நதிக்கு அருகே மணிகுண்டம் உள்ளது.

விண்ணுலகிலிருந்து அமிர்தத்துளி ஒன்று மணியாக விழுந்ததெனவும், அதனால் இதன் பெயர் மணிகுண்டம், மணிகர்ணிகா என்றும் சூரிய தேவனால் சதுர வடிவில் தோண்டப்பெற்றது என்றும் கூறுகிறது தலபுராணம். இவை தவிர மணிகர்ணிகா மண்டபம் என்கிற பித்ரு பூஜா செய்யுமிடம், காளஹஸ்தி கோயிலுக்கு பின்புறம் மலைச்சரிவிலுள்ள மணிகண்டேஸ்வரர் கோயில் அருகே இருக்கிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் மணிகர்ணிகா திருக்குளத்திற்குச் சென்று அதை தரிசிப்போரும் அதன் துதியைப் பாடுவோரும் பல ஐஸ்வர்யங்களைப் பெறுவார்கள் என்கின்றன சாஸ்திரங்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum