Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தன்னம்பிக்கை அளிக்கும் தனியொரு கோயில்

Go down

தன்னம்பிக்கை அளிக்கும் தனியொரு கோயில் Empty தன்னம்பிக்கை அளிக்கும் தனியொரு கோயில்

Post by oviya Thu Dec 11, 2014 1:41 pm

பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கு, அந்தப் பிணியைப் போக்கி அருள்பாலிக்கும் திவ்ய மூர்த்தியாக ஊன்றீசுவரப் பெருமானும், அன்னை மின் னொளி அம்பாளும் அருள்பாலிக்கும் திவ்ய க்ஷேத்திரம், பூண்டியில் உள்ளது. பழம்பதி என்றும் திருவெண்பாக்கம் என்றும் சித்தர்கள் கொண்டாடும் திவ்ய க்ஷேத்திரம் இதனை அண்டிய பேருக்கு ஊழ்வினையில் மாற்றம் சேரும். இதனை நச்சுப்பொய்யார் என்னுஞ் சித்தர்,

‘‘மாபிழை யேதாயினும் எவ்வகை
சூழிலிலாற்றிய போதுமதனை களைந்தின்பமே
தந்து வாழ்விற்கு வூன்று கோலாவான்
கயிலாய தீர்த்தத்தான்.

-என்றார். எப்படிப்பட்ட தவறுகளை நாம் அறிந்தும், அறியாதும் செய்து இருந்தாலும், அந்தத் தவறுகளை எந்த சூழ்நிலையில் இருந்து செய்திருந் தபோதும் அதன் விளைவை வேருடன் நீக்கி, நம்மை காக்கும் ஊன்று கோலாவான் இச்சிவன். இவனிருக்கும் இச்க்ஷேத்திரத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தத்திற்கு கைலாய தீர்த்தம் எனப்பெயர் என்றார்.

தலவரலாறை சித்தர் பாம்பாட்டியார்,
‘‘சிவசேவைச் சங்கலியை மணக்கப்
பிரமாணமெடுத்து பின் மாறிய சுந்தரனடி
யான் விழிபட, கோலீந்தானிச் சுயம்பான
பூர்வா வீசனே தன்னையே நம்பி நில்லார்
நில்லாரே யாயினுமிவனருளால் வாழ்வாங்கு
வாழப் பாரே நம்பியிவனை நம்பிநின்றா
ருக்கில்லை யிடரே’’

-என்றார். இத்திருக்கோயிலுக்கு நம்பிக்கை கோயில் என்றும் பெயர், இன்றும் வழங்குகின்றது. பாம்பாட்டிச் சித்தர், தன்னம்பிக்கையின் அவசியத்தை வலியுறுத்துகின்றார். தான் உயர, தான் சிறப்படைய, ஒருவனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். அப்படித் தன்னம்பிக்கையை இழந்து, சோர்ந்து, நொந்து நின்ற பேருக்கு நம்பிக்கை தந்து, புது வாழ்வு ஈந்து, வாழ்வில் ஒளிகூட்டும் கோயில் இந்த ‘‘நம்பிக்கை கோயில்’’ என்றார். திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வன்தொண்டன் என்ற சுந்தரப் பெருமான், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியார் என்ற பெண்ணை, சிவபெருமானையே சாட்சியாக வைத்து மணமுடித்தார்.

மணமுடிக்கையில், திருவொற்றியூரை வி ட்டுப் போவதில்லை என சத்திய பிரமாணம் செய்து கொடுத்தார். ஆனால், அவசியமான பணி நிமித்தமாக அவர் திருவாரூர் செல்ல நேரவே, பிரமாணத்தை மீறி, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டினார். அதே கணம் சுந்தரப் பெருமான் பார்வை இழந்தார்.
திருவாரூர் செல்லும் பாதையில், சுந்தரப் பெருமான் இத்திருக்கோயிலுக்கு வந்து, தனக்கு பார்வை தந்தருளுமாறு பிரார்த்திக்க, சிவன் ஒரு ஊன்று கோலை மட்டும் சுந்தரருக்கு தந்தார். அதனாலேயே சிவபெருமானுக்கு ஊன்றீசுவரர் என்ற பெயர் உண்டாயிற்று.

இன்றும் ஊன்று கோலை தன் இடது கையில் ஊன்றியபடி பார்வையை இழந்த கோலத்தில் சுந்தரர் ஆலயத்தில் காணப்படுகிறார். சுந்தரப் பெருமான், தனது ஊன்று கோலை வீசி வழியை உணர முற்படுகையில், சிவ பெருமான் முன்புறம் இருந்த நந்தீசனின் வலது கொம்பில் அது பட்டு, முறிந்தது. இன்றும் இத்தல நந்தி தேவர் வலக்கொம்பு அற்ற நிலையிலேயே காட்சி தருகின்றார். சாகசப் பயிற்சியில் தேர்ந்து மேன்மை பெற விரும்புவோர், வீரம், வித்தை, கலை போன் றவற்றின் அம்சமான நந்தி தேவரை அணுகி சரணஞ்செய்ய வேண்டும்.. இதனை கோலச் சித்தர்,

‘‘கல்வியில் பழுதுபட்டோரும், சோம்பி
நின்று பணி செய மாட்டாரும்,
நற்பணி கிட்டா யிருபாலரும், விழிதனில்
பீடையுடை எப்பிராயத்தாருந் தொழுதெழ
விளங்குமொன்ற்றை கொம்பனைக் கொண்டார்
மேலோரே யலைமகளாசியுடனே
மலைமகள் கருணையோடு வலை
மகள் கடாட்சங் கண்டிப்பாய்ச் சேர
சொன்னோஞ் சத்தியமே’’

-ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தரும் ஒரே மூர்த்தி இந்த ஊன்றுகோல் ஈஸ்வரர். சுந்தரப் பெருமானுக்கு மின்னல் போன்ற ஒளியைக் காட்டி நின்ற அருள்மிகு கருணா மூர்த்தியாக நிற்கும் அம்பாள், மின்னொளி அம்பாள் எனப்படுகிறாள். மூலர் என்னுஞ்சித்தர் தம் ஜீவநாடியில்,

‘‘வாழ்விலொரு பிடிப்பின்றி போனீரோ?
அக உளைச்சலாலல்லல் படுவீரோ?
தனவிருத்தி தானற்று தரம் தாழ்ந்தீரோ?
யொளிகெட்டு யிருளே மண்டி யிடரே
யிருந்து துய்க்கு மாந்தருக்குரைப் போங்
கேளீர், மின்னொளியைத் துதிசெய்து
துவளும் பீடையிருந்து புத்தொளி
பெறுவீரே’’

-என்று இறைவியின் பெருமையைப் போற்றுகிறார். வாழ்வில் பிடிப்பின்றி ஏதோ வாழ்கின்றோம் என வாழ்பவர்கள் கண்டிப்பாகத் தொழ வேண்டிய அ ன்னை, மின்னொளி அம்பாள் என்கின்றார் சித்தர். மன உளைச்சல் அதிகம் உடையவர்கள் அண்ட வேண்டிய திருத்தலம் இது. வாழ்க்கையில் வெறுப்பு கொண்டவர்களும், மன அமைதி இல்லாதவர்களும் தொழுதெழ வேண்டிய புண்ணிய பூமி இது. மன உளைச்சலுக்கு ஆளான, பார்வை பறிபோன சுந்தரப்பெருமானுக்கு ஆதரவான இனியமொழி பேசி, மின்னல் போன்ற வெளிச்சத்தைத் தந்தவள் இந்தக் கோயிலில் குடி கொண்டிருக்கும் மின்னொளி அம்பாள்.

இங்குள்ள தல விருட்சம் இலந்தை மரம். காத்து, கருப்பு என்று பேசப்படும் ஆவிக் கோளாறினால் வரும் நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட பிணிகளையும் போக்கும் அற்புத சக்தி கொண்ட தலவிருட்சமிது. இங்குள்ள குசஸ்தலை தீர்த் தத்திலும், கைலாய தீர்த்தத்திலும் நீராடி, தல விருட்சத்தை பவுர்ணமி திதியில் தொழ, பேய், பிசாசு, ஆவி போன்றவற்றின் கோளாறு அடங்கும் என்கின்றார் சிவவாக்கியர்.

‘‘ஆவித் தொல்லை அகலும் பாரு
ஊழையுமாற்றி நிற்குந் தீர்த்தமிது
கயிலாயமே - யிதற்கிணை யேது யறியோம்
ஊழை மாற்றுவான் வூன்று கோலு மாவனிவ் வூன்றீசனே’’

-என்பது அவர் பாடல். எப்படிப்பட்ட பிழை செய்தானானாலும் பொறுக்கும் தன்மையாளன், விதிப்பயனை மாற்றிடுஞ்சக்தி படைத்த மூர்த்தி இவன்.

‘‘அப்பசி அன்னாபிசேகத் தன்று
நந்தியோடு சுந்தருந்தந்தேவி
யருடனே யெழக் கண்டோமே’’
-என்ற சிவவாக்கியர் சொல் கூர்ந்து நோக்கத் தக்கது.

இத்திருக்கோயிலினுள் குடிகொண்ட பைரவமூர்த்தி மிகவும் வரப்ரசாதி ஆவார். இவருக்கு கால பைரவர் எனப்பெயர். தெற்கு திசை நோக்கி எட்டுக் கரங்களுடன் விளங்கும் இத்திவ்ய மூர்த்தியை முப்பத்தாறு அட்டமியில் விரதமிருந்து வழிபட, இழந்த செல்வங்களைப் பெறலாம், மூதாதையருக்கு சா ந்தி சேரும், விபத்து, சேதம் போன்றன தவிர்க்கப்படும் என்கிறார் அழுகணியார்.

‘‘விதியாவுமே வினைப்பயனே
அட்டபுய கரத்துடை பயிரவனை
முப்பானாறு யட்டமி யாராதித்து
விரதமே பூண விதிப்பயனை
யுண்பான் பயிரவனே மூத்தோருக்குஞ்
சாந்தியுண்டாம் துர்மரணமது குலமிட்டே
யகலுந் திண்ணஞ் சொன்னோமுணர்வீரே’’

-என்பது அவர் பாடல். கனிவாய்மொழி நாயகியாம் மின்னொளி அம்பாளை கண்டு ஆராதனை செய்த பக்தர்கள் எண்ணற்றோர். இத்திருத்தலத்திலுறை ஊன்றுகோல் ஈசனை சரணடைந்து, நம் ஊழ்வினைப் பயனை அகற்றி, உன்னத வாழ்வை நாம் அடைவோமே. சென்னையை அடுத்த திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் பூண்டி உள்ளது. பூந்தமல்லியிலிருந்தும் பூண்டிக்கு பேருந்துகள் உள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum