Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இன்னல்களை வேட்டையாடி அருள்பாலிக்கும் வேட்டைக்கொரு மகன்

Go down

இன்னல்களை வேட்டையாடி அருள்பாலிக்கும் வேட்டைக்கொரு மகன் Empty இன்னல்களை வேட்டையாடி அருள்பாலிக்கும் வேட்டைக்கொரு மகன்

Post by oviya Thu Dec 11, 2014 2:18 pm

பஞ்சபாண்டவர்களின் வனவாசத்தின்போது, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி காட்டில் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தான். துரியோதனன் ஏவலின் பேரில் மூகாசுரன் என்ற அரக்கன் பன்றி வடிவில் வந்து அவன் தவத்தைக் கலைக்க முயன்ற போது, சிவபெருமான்-பார்வதி தேவி இருவரும் வேடுவ தம்பதியராக அங்கு வந்தனர். சிவபெருமானின் இந்தக் கோலம் கிராத (வேடன்) வடிவம் எனப்படுகிறது. அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 திருவடிவங்களில் இந்தக் கிராத மூர்த்தி வடிவமும் ஒன்றாகும். அர்ச்சுனனுக்கு அருள்பாலிக்க வேடனாக வந்த சிவபெருமான் கிராதசிவா என்றும் பாசுபத மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானும், அர்ச்சுனனும் ஒரே நேரத்தில் காட்டுப் பன்றியை வீழ்த்த, இருவருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் வேடனாக வந்திருந்தவர் சிவபெருமான் என்று அறிந்து அர்ச்சுனன் மன் னிப்புக் கேட்க, அர்ச்சுனனின் தவத்தினை மெச்சி சிவபெருமான் அவனுக்குப் பாசுபதாஸ்திரம் என்ற அரிய அஸ்திரத்தைக் கொடுத்தார்.

பாரதப் போரின் வெற்றிக்கு இந்த பாசுபதாஸ்திரம் ஒரு காரணமாக அமைந்தது. சிவபெருமானின் இந்தக் கிராத வடிவத்தின் அடிப்படையில் கேரள மாநிலத்தில் சிவபெருமான் ‘வேட்டைக்கொரு மகன்’ என்ற பெயரில் வழிபடப்படுகிறார். வேட்டைக்கொரு மகன் அல்லது வேட்டைக்காரன் என்ற இந்த கடவுள் சிவபெருமானின் அம்சம் என்றும், சாஸ்தாவின் அம்சம் என்றும், சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த தெய்வப்பிறவி என்றும் பக்தர்கள் சொல்கின்றனர். இரண்டு கரங்கள் மற்றும் உருட்டி விழிக்கும் கண்கள், தாடி, முறுக்கு மூசையுடன் வேடன் போலவே வலது தோளின் பின்புறம் அம்புறாத்தூணி, வலக்கையில் சூரி என்ற கத்தி, இடக்கை வேல், வில் இரண்டையும் சேர்த்துப் பிடித்திருக்க, கால்களில் தண்டை அணிந்து இந்த வேட்டைக்கொரு மகன் காட்சி தருகிறார். அநேக தலங்களில் இவரது உருவப் படம் மட்டுமே வைத்து வழிபடப்படுகிறது. சிலைகள் மிக அபூர்வம். கேரள மாநிலத்தில் இவருக்கு 150க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றில் வட கேரளத்தில்தான் அதிகமான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. இவர் ஐயப்பனின் அவதாரம் என்ற கருத்தில் ஐயப்பன் படத்தோடு வைத்தும் வழிபடப்படுகிறார்.

இவரது உருவம் ஐயப்பனின் உருவத்தை ஒத்திருப்பதால் இவருடைய கோயிலை ஐயப்பன் கோயில் என்றும் கூறுகின்றனர். ஐயப்பனின் மண்டலபூஜை காலங்களில் வேட்டைக்கொரு மகனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. 41ம் நாள் அவரது திருவுருவப்படம் வண்ணப் பொடிகளால் தரையில் சித்திரமாக வரையப்பட்டு (சில இடங்களில் 20 அடிக்கு 12 அடி அளவில்) மிகப் பெரியதாக பூஜை செய்யப்படுகிறது. இந்தக் ‘களமெழுத்துப் பூஜை’யின்போது தேங்காய் எறிச்சல் (தேங்காய்களை எறிவது) வெளிச்சப்பாடு துள்ளல் போன்றவை நடத்தப்படுகின்றன. பின் களமெழுதிய வேட்டைக்கொருமகன் சித்திரம் அழிக்கப்ப ட்டு அந்த வண்ணக்கலவைப் பொடி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற பிரபலமான கேரள ஆலயங்களான மகாக்ஷேத்திரங்கள் போன்று வேட்டைக் கொருமகன் ஆலயம் இல்லாமல் தேவாரப்புரா என்று அழைக்கப்படும் சிறிய ஆலயங்களாகத் திகழ்கின்றன.

திருவனந்தபுரம் கோட்டையினுள் இவருக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. ஈசனுக்கும் உமைய ன்னைக்கும் மூல நட்சத்திர தினத்தன்று இவர் அவதரித்ததாக ஐதீகம். ஈசனும், உமையும் இவரை காட்டில் விட்டுவிட காட்டுவாசிகள் அவரை வளர்த்து ஆளாக்கினர். வேட்டைக் கொருமகன் காட்டுவிலங்குகளை வேட்டையாடியும், முனிவர்களை துன்புறுத்தியும் வரவே அவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். ஈசன் தன்னால் அவரை ஏதும் செய்ய முடியாது எனக் கூறவே திருமாலிடம் சென்றனர். திருமால் ஒரு வயதான அந்தணர் வேட த்தில், கையில் தங்கத்தினால் செய்யப்பட்ட சுரிகா எனப்படும் குறுவாளோடு வேட்டைக் கொருமகன் முன் தோன்றினார். திருமால் கையிலிருந்த அந்தப் புனிதமான சுரிகாவை வேட்டைக்கொருமகன் ஆசைப் பட்டு கேட்க திருமாலே அதை வேட்டைக்கொருமகனின் வலது கையிலும், வில் அம்பை இடது கையிலும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எக்காரணத் தைக் கொண்டும் சுரிகாவைக் கீழே வைக்கக்கூடாது என்றும் நிபந் தனை விதித்து அவனிடம் கொடுத்து மறைந்தார். திருமாலின் யுக்தியால் வலது கையில் உள்ள சுரிகா எனும் குறுவாள் ஏந்தியிருந்த வேட்டைக்கொரு மகனால் வில் மற்றும் அம்பை பயன்படுத்த முடியாமல் போயிற்று. அந்தக் கணம் முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெய்வமாக வேட்டைக் கொருமகன் மாறினார்.

மணப்பேறு மற்றும் மகப்பேறு கிட்ட இந்த வேட்டைக் கொரும கனை கேரள மக்கள் வழி படுகின்றனர். கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள பாலுசேரிக்கோட்டா என்ற இடத்தில் வேட்டைக்கொருமகன் மகாசமாதி அடைந்ததாக ஐதீகம் உள்ளது. தமிழ்நாடு கும்பகோணம் தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகும்பேசுவரர் கிராத கோலத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரளயத்தின் போது மிதந்து வந்த அமுதகும்பம் ஒரு மேடான இடத்தில் தங்கியபோது, சிவபெருமான் வேடுவக் கோலம் பூண்டு ஓர் அம்பால் அந்த அமுத கலசத்தை உடைத் தாராம். பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் கோபுரங்களிலும், தூண்களிலும் சிவபெருமானை வேடுவனாகவும் அர்ச்சுனனை தவம் செய்யும் கோலத்திலும் சுதை மற்றும் வண்ணச் சிற்பங்களாகக் காணமுடியும். இது கிராதார்ச்சுன வடிவச் சிற்பங்கள் எனப்படுகின்றன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum