Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கந்தனுக்குத்தான் எத்தனை எத்தனை காவடிகள்!

Go down

கந்தனுக்குத்தான் எத்தனை எத்தனை காவடிகள்! Empty கந்தனுக்குத்தான் எத்தனை எத்தனை காவடிகள்!

Post by oviya Thu Dec 11, 2014 2:56 pm

தை மாதம் பூச நட்சத்திரம் பௌர்ணமி நாளில் பார்வதி முருகப் பெருமானுக்கு வேல் தந்து அருளிய நாளையே தைப்பூசத் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பழநியில், தைப்பூசம் பத்து நாட்கள் திருவிழாவாக பல்வேறு சமூகத்தவரும் கலந்து கொண்டாடும், சமத்துவத் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. பழநிக்கு பாதயாத்திரையாக காவடி சுமந்து முருக பக்தர்கள் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் லட்சக்கணக்கில் குவிவது வழக்கம். பழநிக்கும் காவடிக்கும் நெருங்கின சொந்தம் உண்டு. இங்கே, பழநியில் மலைக்கோயில், இடும்பன் கோயில் என இரு மலைகளுமே காவடிகளாகவே காட்சியளிக்கின்றன.

பழநி பைபாஸ் சாலையில் நின்றபடி இரு மலைகளையும் ரசிப்பது ரம்மியமான காட்சி. சிவகிரி, சக்திகிரி என்னும் இரு மலைகளைக் கொண்டு செல்லுமாறு இடும்பாசூரனைப் பணித்தார் சிவபெருமான். சிவனே தனக்கு பணி இட்டுவிட்டதால் 'தானே மிகப்பெரும் பகவான்’ என்ற இறுமாப்போடு இடும்பன், அவ்விரு மலைகளையும் காவடியாகச் சுமந்துகொண்டு, அலட்சியமாகக் கிளம்பினான். வழியில் இளை ப்பாறுவதற்காக மலைகளை இறக்கி வைக்க, இடும்பனின் ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன் அவற்றில் ஒரு மலைமேல் நின்று கொண்டு இறங்க மறுத்து அடம் செய்தான்.

முருகனை அறியாச் சிறுவன் என்று நினைத்த இடும்பன் அவனைத் தாக்க முற்பட, முருகனின் வல்லமை புலப்பட்டது; இடும்பனின் கர்வமும் ஒழிந்தது. அதனாலேயே பழநியில் பழநி மலையும், இடும்ப மலையும் காவடியின் அடையாளமாக இன்றும் கம்பீரமாய் காட்சியளிக் கின்றன. முருகப் பெருமானுக்கு மிகவும் பிடித்ததே காவடிதான். இதில்தான் எத்தனை வகை! பால்காவடி, பழக்காவடி, பூக்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி, கரும்பு, தீர்த்த காவடி என எத்தனையோ! மலைக்கோயில் நவபாஷாண சிலை வடிவான முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர், பால், எண்ணெய், தேன், பழம், விபூதி, சந்தனம், பூ என அனைத்தும் காவடி உருவில்தான் மலைக்குச் செல்கின்றன.

பக்தர்கள் பரவசத்துடன் காவடி எடுத்து ஆடுவதைக் கண்டால் உடல் சிலிர்த்துப் போகும். வணிகத்தில் வருமானம் ஈட்டிய நகரத்தார் தம் பொருளை பெரும் தானமாக பழநி முருகனுக்கு வழங்கிடவே தைப்பூசத்தில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வர ஆரம்பித்தனர். இதுவே மிகப் பிரபலமாகி தைப்பூச பாத யாத்திரையாக பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டிற்கொரு மயில் தீர்த்தக் காவடி என கடும் விரதமிருந்து, சுமந்து நடைப்பயணமாக பழநி நோக்கி செல்கிறார்கள். வரும் வழியெல்லாம் அன்னதானம், தர்மமென அவர்களுக்கு பண்போடு பக்தி தொண்டு செய்கின்றனர் அந்தந்த ஊர்க்காரர்கள்.

திரும்பவும் ஊர்சேரும் வரை காவடிகளுக்கு அவர்கள் காட்டும் பாதுகாப்பு மிகத் தெய்வீகமானது. கொங்கு மண்ணின் மக்கள் காவிரி தீர்த்த காவடியை கடும் வெயிலையும் பாராமல் சுமந்து வந்து அபிஷேகம் செய்கின்றனர். தங்கள் மண்ணில் விளையும் பொருட்கள் எல்லாம் எங்கள் குலதெய்வம் மேற்கு நோக்கிய பகவான் முருகனுக்கே என கேரள மக்களும் காவடி பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். காவடி தூக்கி வரும் பாலர் முதல் முதியோர் வரை படியேறி மலைக்கோயில் செல்வது பார்க்க அழகாக இருக்கும்.

பழநியில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் லட்சக்கணக்கில் படைக்கப்படும் காவடிகள் குவிந்துவிடும். இன்றும் முருக பக்தர்கள் இல்லத்திலும் பரம்பரை சொத்தாக பழம்பெரும் காவடிகள் பத்திரமாக இருப்பதைக் காணலாம். எடப்பாடி பருவத ராஜகுல சமூகத்தினர் முருகப் பெருமானை தம் குலச் செல்வி வள்ளியை மணமுடித்ததால் மாப்பிள்ளை என்ற குடும்பப் பாசத் துடன் குமரனின் பாதணியை தம் தலையில் இரு முடியாக சுமந்து 300 கி.மீ. தூரம் நடந்தே பழநிக்கு சென்று வருகின்றனர். இந்த விஜய வருடத்தில் தைப்பூசம் மிக அபூர்வமாய் மார்கழி 27ந்தேதி கார்த்திகை நட்சத்திரத்திலேயே காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தை 7ந்தேதி தைப்பூசம் நிறைவடைந்தது. பழநியில் முருகனின் தாயார் பார்வதி தேவி, பெரிய நாயகியாய் வீற்றிருக்கும் பெரிய நாயகியம்மன் கோயிலில் மார்கழி 27ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் திருவிழாவில் செங்குந்த முதலியார் மண்டகப்படியில் வள்ளி தெய்வானையுடன் மு த்துக் குமாரசாமி புதுச்சேரி சப்பரத்தில் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார். மார்கழி 28 அன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக தேவேந்திர குல வேளாளர்கள் மண்டகப்படியில் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் ரதஉலா சென்றார்.

மார்கழி 29 மூன்றாம் நாள் விழாவில் 24 மனை தெலுங்கு தேனதிபதிகள் மண்டகப்படியில் முருகப் பெருமான் வெள்ளி காமதேனு வாகனத்தில் ரத வீதியில் தம்பதி சமேதராய் வலம் வந்தார். தை 1ம் நாள், நான்காம் நாள் திருவிழாவில் உடையார் மடத்தில் எழுந்தருளிய முத்துக் குமாரசாமி தம்பதியாய் வெள்ளி காமதேனு வாகனத்தில் ரத வீதி உலா வந்தார். தை 2ம் நாள் ஐந்தாம் நாள் திருவிழாவில் 12 - 6 செட்டியார்கள் மண்டகப் படியில் தமிழ்க் குமரன் வெள்ளி யானை வாகன த்தில் உலா வந்தார்.

தை 3ம் நாள் ஆறாம் நாள் திருவிழாவில் புதுக்கோட்டை சமஸ்தானம் சார்பில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இரவு 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் கடக லக்கனத்தில் இரவு முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தேறியது. அதன் பின் இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதம் வீதிகளில் உலா வந்தது. தை 4ம் நாள் ஏழாம் திருவிழாவான தைப்பூசத்தன்று காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தீர்த் தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று, காலை 9.30 - 10.30 மணிக்குள், மீன லக்னத்தில் திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார்.

மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தந்தப் பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்வும் இனிதே நடந்தேறியது. தைப்பூசம் 5ம் நாள், எட்டாம் திருவிழாவில் அடிவாரம் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளும் முருகப் பெருமான் இரவு 8 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் தம்பதிசகிதராய் வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பிறகு, விருதுநகர் இந்து நாடார்கள் திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ராமநாதபுரம் சமஸ்தானம், விருதுநகர் நாடார் சமூக மண்டகப்படி நிகழ்ச்சியாக இது நடக்கிறது.

தை 6ம் நாள், ஒன்பதாம் திருவிழாவில் துறையூர் ஜமீன்தார் மண்டகப்படியில் துறையூர் பெரிய தங்கமயில் வாகனத்தில் ரத வீதி உலா வந்தார். தை 7ம் நாள் பத்தாம் திருவிழாவான தைப்பூசம் நிறைவு நாளில் பழநி ஆரிய வாழ் செட்டிகள் மண்டகப்படியில் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் குளத்தில் தெப்போற்சவம் நடக்கவேண்டியது. ஆனால், நீர் வற்றிப் போயிருந்ததால், கணேசருக்கும், சுப்ரமணியருக்கும் பல்வேறுவகை அபிஷேகங்களாகத்தான் நடந்தேறியது. இரவு 11.30 மணிக்குள் கொடி இறக்குதல் நிகழ்வுடன் தைப்பூசம் பூர்த்தியடைந்தது. தை 14ந் தேதி உற்சவ சாந்தியும் நடந்து முடிந்தது.

தைப்பூசத் திருவிழா துவங்குவதற்கு முன் மலைக் கோயிலைச் சுற்றியுள்ள அடிவாரம், கிரிவலப் பாதையில் துர்க்கையம்மன், அழகு நாச்சியம்மன், வன துர்க்கையம்மன், மகிஷா சுரமர்த்தியம்மன் ஆகிய நான்கு அன்னையர் கோயில்களிலும் பக்தர்கள் நலன் வேண்டி நவசண்டி யாகம் நடத்தப்படுகிறது. பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் நேரக்கூடாது என்பதற்காக, அவர்களுடைய நலன் நாடி இந்த யாகம் நடத் தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum