Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மனப்பக்குவம் தரும் பங்குனி மாதம்..!

Go down

மனப்பக்குவம் தரும் பங்குனி மாதம்..! Empty மனப்பக்குவம் தரும் பங்குனி மாதம்..!

Post by oviya Thu Dec 11, 2014 3:04 pm

sதெய்வத் திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி. தமிழகத்தில் இன்றும் ஒரு சிலர் மத்தியில் பங்குனியில் திருமணம் நடத்தலாமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஜோதிட ரீதியாக இதற்கு விடை காண முற்பட்டால் பங்குனி மாதத்தில் தாராளமாக திருமணம் நடத்தலாம் என்பதே அனைத்து ஜோதிடர்களின் பதிலாக இருக்கிறது. பிறகு ஏன் இந்த சந்தேகம்..? யோசித்துப் பார்த்தால் காரணமில்லாமல் இந்த கேள்வி எழவில்லை. தமிழகத்தின் புகழ்பெற்ற பல ஆலயங்களிலும் சைவ, வைணவ பேதமின்றி பங்குனி உத்திரத்தை மையமாகக் கொண்டு பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம்.

ஒரு ஊரில் பிரம்மோற்சவம் எனப்படும் பத்துநாள் திருவிழா நடக்கும் காலத்தில் தனிப்பட்ட முறையில் குடும்ப விழாக்கள் நடத்துவதைத் தவிர்த்தனர், நம் முன்னோர்கள். ஆலயத்தில் திருவிழா நடக்கும்போது பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்; அதனை விடுத்து ஒவ்வொருவரும் தத்தம் குடும்ப விழாக்களில் கவனம் செலுத்தினால் ஆலயத் திருவிழாக்களை எவ்வாறு சிறப்பாக நடத்த முடியும் என்பதால் ‘பங்குனியில் திருமணம் செய்வது எங்கள் குடும்பத்தில் பழக்கமில்லை’ என்று தவிர்த்திருக்கிறார்கள்.

நாம் எவ்வாறு ஒரு சுபகாரியத்தைச் செய்யும்போது நல்ல நாள், நட்சத்திரம் பார்த்துச் செய்கிறோமோ, அவ்வாறுதானே தெய்வத் திருமணங்களும் நல்ல நாளில் நடைபெற்று இருக்கும்! சாமானியர்களான நாமே அலசி ஆராய்ந்து நாள் வைக்கும்போது, பஞ்சாங்கத்தைப் படைத்த பிரம்மா நாள், நட்சத்திரம் பார்க்காமல் தெய்வத் திருமணங்களை நடத்தி வைத்திருப்பாரா என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது. பார்வதி - பரமேஸ்வரன், மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ஆண்டாள் - ரங்கமன்னார், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

காமாக்ஷி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்து வார்கள். தாய் ஆகிய சந்திரன், தந்தை ஆகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பௌர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
ஆகவே, இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனியில் நம் வீட்டுத் திருமணத்தை நடத்துவதில் தவறில்லை என்பது ஜோதிடர்கள் வாதம். அதே நேரத்தில் புதிய வீடு கட்ட, பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் எதையும் பங்குனியில் செய்வதில்லை. வாஸ்து புருஷன் இந்த மாதத்தில் நித்திரையில் இருந்து எழுவது இல்லை. பூமிக்கு அடியில் உறங்கும் வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படும் பூதத்தை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் வீடு சார்ந்த நிகழ்வுகளை இந்த மாதத்தில் நடத்துவதில்லை.

பங்குனி மாதம் என்பது நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் மாதமாகவும் அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முழு ஆண்டுத் தேர்வினை இந்த மாதத்தில் காரண மில்லாமலா நடத்துகிறார்கள்? நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குருவின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி, மாணவர்கள் தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம்.

பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது, மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார். உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது. அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஞானகுரு வாகிய ஐயப்பன் உதித்ததும் இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில்தான். அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பெற விரும்புவோர் உத்திரத்தில் உதித்த ஐயனை தரிசிக்கச் செல்வர். சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல, சிவனேசச் செல்வர்களான அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெய்ஞ்ஞானத்தைப் போதிப்பதும் இந்தப் பங்குனி மாதத்தில்தான்.

இன்றளவும் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இந்த அறுபத்துமூவர் திருவிழா பங்குனி மாதத்தில் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவதே இதற்கு சாட்சி. வட இந்தியாவில் நடைபெறும் புகழ்பெற்ற ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஆண்-பெண், ஏழை-பணக்காரர், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என எந்த பேதமுமின்றி அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வர்ணங்களைப் பூசிக்கொண்டு சமத்துவத்தை நிலைநாட்டுவர். இவ்வாறு எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் என்ற மனப்பக்குவத்தைத் தருவதும் இந்தப் பங்குனி மாதமே.

இவ்வாறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்குள்ளும் குடிகொண்டிருக்கும் அறியாமை எனும் இருளை நீக்கி மனப்பக்கு வத்தைத் தரும் இந்த பங்குனி மாதத்தில், இல்லாதார்க்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம். முக்கியமாக ஏழ்மையில் உழலும் மாணவ - மாணவியர் கல்வி பயில உதவி செய்வோம். ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் என்பதும் இறைவனைக் காண்பதற்கான வழியே என்பதை உணர்வோம். உயர்வு பெறுவோம்!

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum