Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகர்

Go down

மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகர் Empty மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகர்

Post by oviya Fri Dec 12, 2014 1:09 pm

புண்ணிய பூமி என்றழைக்கப்படும் புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க இடங்களில் ஒன்று மணக்குள விநாயகர் கோயில். நேருவீதியை தாண்டி கடற்கரை செல்லும் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இதற்கு பெயர் வந்த காரணமும் ஒரு சுவாரசியம். தற்போது கோயில் இருக்கும் இடத்தின் மேற்கு பகுதியில் ஒரு குளம் இருந்தது. அது மணற்குளமாக திகழ்ந்தது. அதனால் இங்கு அருள்பாலிக்கும் விநாயகரை மணற்குள விநாயகர் என்றழைத்து பக்தர்கள் வணங்கினர்.
கி.பி.15ம் நூற்றாண்டுக்கு முன்னரே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

அக்காலத்தில் கடற்கரைக்கு அருகில் உள்ள கோயில்களில் சிறப்பானது இக்கோயில் என கூறுகிறார்கள். புதுவை அரசு வெளியிட்டுள்ள ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில் (250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது) இக்கோயிலைப்பற்றிய குறிப்பு உள்ளது. ஆரம்பத்தில் மணற்குள விநாயகர் என்றழைக்கப்பட்டவர் பின்னாளில் மணக்குள விநாயகர் ஆனார். இங்கு தங்கியிருந்து அன்றாடம் வணங்கி பல தொண்டுகள் செய்த பிள்ளைத்தோட்டம் தொள்ளைக்காது சுவாமிகள் இயற்கை எய்தியபோது கோயில் வளாகத்திலேயே அடக்கம் செய்து விட்டனர்.

சித்தர்கள் சமாதி உள்ள கோயில் களுக்கு சக்தி அதிகம் என்பதற்கு உதாரணமாக இக்கோயில் திகழ்கிறது. அதனால் `வெள்ளைக்காரர் வீதியில் தொள்ளைக்காதர் அமைந்து விட்டார்` என மக்கள் கூறுவதுண்டு. புதுவையில் 1923ம் ஆண்டு உருளையன்பேட்டை வெங்கடாசலநாயகர் என்பவர் நடத்திவந்த அச்சாபிவிருத்தி என்ற பத்திரிகையில் மணக்குள விநாயகரைப்பற்றிய செய்திகள் பக்தி பரவசமூட்டுபவவை. அக்காலத்தில் புதுச்சேரி செல்வந்தர்கள் வாழ்ந்த அழகான பேரூராக விளங்கியது. கோயில் அமைந்துள்ள தெரு முன்பு நெசவாளர் தெரு என்றழைக்கப்பட்டது.

தெருவின் இருபுறமும் கைத்தறி பாவு நீட்டுதல், பிடித்தல் தொழில் நடைபெறும். இங்கு நெய்யப்பட்ட துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. ஊர் பொதுமக்கள் அக்காலத்தில் குளங்கள், ஏரிகளில் நீராடி, குளக்கரை விநாயகரை வழிபட்டபின்னரே தத்தம் கடமைகளை தொடங்குவர். மணக்குள விநாயகர் புதுவையை என்றும் காத்தருள்வார் என்று மக்கள் நம்புகிறார்கள். உள்ளூர், உள்நாட்டு மக்கள் தவிர வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மணக்குள விநாயகரை வழிபட்டு இதன் சிறப்பை உலகறிய செய்கின்றனர்.

குளக்கரையில் யாரோ ஒரு மகரிஷி பிரதிஷ்டை செய்த விநாயகரை பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். அடுத்து மொரட்டாண்டி என்ற ஊரைச்சேர்ந்த ஆண்டி ஒருவர் பூஜித்து வந்துள்ளார். அந்த மணற்குளம் நாளடைவில் தூர்ந்து போய் நந்தவனம் ஒன்று உருவானதாகவும் கூறப்படு கிறது. இங்கு அருள்பாலிக்கும் விநாயகர் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். அவற்றில் ஒன்று கடலில் வீசப்பட்ட பின்னரும் மீண்டும் தான் அமர்ந்த இடத்துக்கே வந்தது. பிரெஞ்சுக்காரர் ஒருவர் விநாயகரை பெயர்த்து கடலில் வீசினாராம். ஆனால் மறுநாள் காலை தனது இடத்துக்கு விநாயகர் வந்து விட்டாராம்.

அன்றைய கவர்னரின் உதவியாளர் ஓர்லையான் என்பவர் காலத்தில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அவர்தான் நெசவாளர் வீதியை ஓர்லையான் வீதி என்று மாற்றினார். நெசவாளர்களையும் வெளியேற்றினார். விநாயகரை பகைத்துக்கொண்டால் எதுவுமே நடக்காது என்று கருதிய அவர்கள் தவறை உணர்ந்து விநாயகரின் தொண்டராகி தீவிர வழிபாட்டில் இறங்கி விட்டனர். ஆனால் தொடர்ந்து பல சோதனைகள் வந்தது. அவற்றுள் ஒன்று மாற்று மதத்தினரால். ஈஸ்டர் காலத்தில் நடைபெறும் விழாவின்போதும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிள்ளையார் ஊர்வலம் நடத்தக்கூடாது என அன்றைய சேசு அடிகளார் கூறினாராம்.

அன்றைய ஆளுநர் 1701ல் கோயிலை இடிக்கவும் கட்டளை பிறப்பித்துள்ளார். சிலைகளை உடைக்கவும் முயன்றுள்ளனர். மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை காட்டினர். முடிவில் 15 ஆயிரம் பேர் ஊரைவிட்டு வெளியேறுவதென முடிவு செய்யப்பட்டது. இதையறிந்த அன்றைய ஆளுநர் பிரான்சுவா மர்த்தேன் தொழில், வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கருதி நேரில் சென்று மக்களை தடுத்துள்ளார். பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள், பிரபுக்கள், ஊர்பெரியவர்களை அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. கோயிலில் பழைய படி அபிஷேக ஆராதனை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

ஆனாலும் தொல்லைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்த அனுமதி பெற வேண்டியிருந்தது. தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக 1706ல் கவர்னர் உத்தரவு அளித்ததால் மணக்குள விநாயகருக்கு மஞ்சள் நீராட்டி பழையபடி விழாக்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னரும் கோயிலுக்குள் நுழைந்து மாற்று மதத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து காக்க வேண்டியிருந்தது. நகரில் வர்த்தகம் முடங்கியது. பின்னர் டச்சுக்காரர்கள் காலத்தைப்போல் மணக்குள விநாயகரை வழிபட உரிமை வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

நாளடைவில் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோயிலின் வடபுறம் உள்ள இடத்தையும் சேர்த்து விரிவுபடுத்த பக்தர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சொந்தமான அந்த நிலத்தை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம்தேதி 10 ஆயிரத்து 610 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தை ஆசிரமத்தின் அன்னை நன்கொடையாக வழங்கினார். அதற்கான சான்றை இன்றும் காணமுடியும். தொடர்ந்து பல்வேறு பிரமுகர்கள் கோயிலுக்கு பல நன்கொடைகள் வழங்கி திருப்பணிகள் நடைபெற்றது. கோயில் புதுப்பொலிவு பெற்றது.

கோயிலின் முன்மண்டபத்தை 1975ம் ஆண்டு அப்போதைய துணை குடியரசு தலைவர் ஜாட்டி திறந்து வைத்தார். பல்வேறு பண்டிதர்கள், புலவர்கள் மணக்குள விநாயகரை பாடி உள்ளனர். கோயில் கருவறையில் தற்போதைய மூலவருக்கு அருகில் இடதுபக்கம் மூல விநாயகர் சிலையும், வலது பக்கம் நாகபந்தச்சிலையும் உள்ளது. இப்படிமங்களுக்கு இன்றளவும் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன. உற்சவ மூர்த்தி 1986ம் ஆண்டு மார்ச் 20ம்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றன. 2010 ல் குளுகுளு (ஏசி) வசதியும் செய்யப்பட்டது.

கடந்த 5&10&2004ல் ரூ.70 லட்சம் மதிப்பில் தங்கத்தேர் அழகிய வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டு விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மாதந்தோறும் உற்சவங்கள் நடந்து வருகிறது. கோயில் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி பவுர்ணமி வரை நடைபெறும். கோயில் நிர்வாக அதிகாரி கருணாகரன் கூறுகையில், ஆகம விதிப்படி 12 வருடத்துக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். அதன்படி இந்தாண்டு இறுதியில் கும்பாபிஷேகம் நடைபெறும்.

புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப குழுவினர் மேற்பார்வையில் கும்பாபிஷேக கட்டுமான பணிகள் நடைபெறுகிறது, தற்சமயம் தினசரி பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னரே தங்கத்தேர், வெள்ளித்தேர் உற்சவம் நடைபெறும் என்றார். அனைத்து இனத்தவராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பெற்றவரே மணக்குள விநாயகர், அவரின் திருவடித்தாமரை பக்தர்களின் துயர்களை ப்போக்கும், பக்தியுடன் வணங்கும் மெய்யன்பர்களின் வாழ்க்கை மென்மேலும் வளம்பெறும், நலம் பெறும் என்பதில் ஐயமில்லை. மக்கள் மனங்களை ஆளும் புதுவை மணக்குள விநாயகரை வணங்கி வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெறுவோம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
» நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
» அம்பாறையில் அடை மழை: மக்கள் இடம்பெயர்வு
» சுய சிந்தனை தலைமைகளை தேடும் தமிழ் மக்கள்!!
» எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum