Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சரஸ்வதி தேவியின் 25 சிறப்புகள்

Go down

சரஸ்வதி தேவியின் 25 சிறப்புகள் Empty சரஸ்வதி தேவியின் 25 சிறப்புகள்

Post by oviya Tue Dec 02, 2014 1:56 pm

1. காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சரஸ்வதி தேவி எட்டு கைகளுடன் காட்சி தருகிறார். இங்கு சரஸ்வதிக்கு ராஜசியாமளா, ராஜமாதங்கி என்ற பெயர்கள் உண்டு.

2. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்யங்கிரா தேவி ஆலயத்தில் உள்ள நீல சரஸ்வதி கல்விச் செல்வத்தைப் பெருக்கி, வாக்கு வன்மையையும் அருள்கிறாள்.

3. சென்னை - போரூர் மதனானந்தபுரத்தில் உள்ள துர்க்கா, சரஸ்வதி, லட்சுமி கோவிலில் சரஸ்வதி, தனி சந்நிதியில் அன்ன வாகனம் முன்நிற்க, காட்சி அளிக்கிறாள். இத்தேவியை வணங்கி சகலகலாவல்லி மாலை துதியைப் பாராயணம் செய்து வந்தால் அறிவாற்றல் பெருகும்.

4. திருச்சி உத்தமர்கோவிலில் சரஸ்வதி தேவி தனி சந்நிதியில் தரிசனம் தருகிறாள். இங்கு தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் சிறப்பானது. பள்ளி மாணவர்கள் இத்தேவியை வேண்டி, பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

5. கொல்கத்தாவில் உள்ள மிïசியத்தில் ஏழு தலை நாகத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் சரஸ்வதி காட்சி அளிக்கிறாள். பத்மாசனத்தில் அமர்ந்துள்ளாள். கையில் ஜெபமாலை உள்ளது. ஒரு கை பூமியைத் தொடும் வகையில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்தச் சிலை பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

6. திபெத் நாட்டில் மூன்று முகம் கொண்ட சரஸ்வதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளாள். ஆறு கரங்கள் உள்ளன. புத்த மதத்திற்குரிய முத்திரைகள் சிலையில் வடிக்கப்பட்டுள்ளன. கையில் கத்தி இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

7. கல்வியில் சிறந்து விளங்கும் கலைஞர்களும் யோக நிலையில் நின்று தவத்தை மேற்கொள்ளும் முனிவர்களும், சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவளின் அருளை பெற்றவர்கள் எண்ணிக்கை அளவிடற் கரியது என்பதைப் புராணங்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகிறது.

8. பிரம்மன், சரஸ்வதியைத் துதித்த பின்னரே, பதி ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.

9. பிருஹஸ்பதியும் சரஸ்வதியைத் துதித்து தான் சப்த சாஸ்திரம் எனும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார்.

10. தேவியின் கடாட்சத்தை பெற்ற வியாசர் மகா பிரம்ம சூத்திரம் பதினென் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்.

11. கல்வி ஞானமே இல்லாதிருந்த காளிதாசருக்கு அம்பிகையின் பேரருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டார். இவருடைய நூல்களாகிய ரகுவம்சம், மேக தூதம், சாகுந்தலம், குமார சம்பவம், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம் போன்றவற்றில் தேவியின் சொரூபம் லீலைகள் காணலாம்.

12. போளு ராஜ மன்னர் பவ பூதியின் கவிதை உயர்ந்ததா, காளிதாசரன் கவிதை உயர்ந்ததா என்று அறிய இருவரையும், தனித்தனியே கவிதை எழுதச் சொல்லி தராசைக் கொண்டு வந்து சோதித்தான். பவ பூதியின் ஏடு மேலும், காளிதாசரின் ஏடு கீழும் இருப்பதைக் கண்ணுற்ற சரஸ்வதி பவபூதி எந்த வித அவமானத்திற்கும் தலைகுனியக் கூடாதென்று சரஸ்வதி தன் காதிலுள்ள (குண்டலம்) வெண் தாமரையிலிருந்து தேன் துளியை பவபூதியின் ஏட்டில் விரலால் தெளிக்க இரு ஏடுகளும் சமமமாக நின்றன. காளிதாசனும், பவபூதியும் தேவியின் தீர்ப்பு கண்டு போற்றித் துதித்தனர்.

13. ஸ்ரீ சரஸ்வதியான சாரதாம்பாளை ஆதிசங்கரர் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ சக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். இந்த தேவியின் வடிமை நோக்கும் கல்வி தரும் கலைமகளான சாரதா, இன்னமும் தானே பயில் வது போன்றே கரங்களில் ஜப மாலை சுவடி மற்றும் ஞான முத்திரை கொண்டு திகழ்கிறாள்.

14. ஸ்ருதிக்கு பொருள் உரைக்கக் கேட்ட சரஸ்வதி தேவிக்கு இராமானுஜர் தகுந்த பதிலை உரைத்ததால், சரஸ்வதி தேவி அவரது சிரசில், பாஷ்யக்காரல் எனும் திருநாமத்தைச் சாத்தி, ஹயக்ரீவரையும் அளித்திருக்கிறாள். இந்த விக்ரகம் தற்போது மைசூர் பரகாலி மடத்தில் உள்ளது.

15. ஆபுத்திரனுக்கு அமுத சுரபியை அளித்தது சிந்தா தேவியாவாள். இவள் கலை மகள் என்று கருதப்படுகிறாள்.

16. திருவாமாத்தூர் எனும் சிவ தலத்தின் மீது இரட்டை புலவர்கள் ஒரு கலம்பகம் பாடினர். ஒரு பாடலில் ஆற்றின் (பெண்ணாறு) மேற்குக் கரையில் கோவில் அமைந்திருப்பதாகத் தவறாக பாடிவிட, இந்தப் பிழையை அரங்கேற்றத் தின் போது பிறர் சுட்டிக் காட்டினர். எங்கள் நாவிலுள்ள கலமைகள் பொய் சொல்லாள் என்று புலவர்கள் கூறினார். அன்றிரவு பெய்த கடும் மழையில் ஆறு திசை மாறி ஒடத்துவங்கியதாம். புலவர்களைக் காக்கும் பொருட்டு ஆற்றோட்டத்தின் திசையையே மாற்றிய கலைவாணியின் கருணையை என்னென்பது.

17. திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவிகாள மேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமலிருக்க அவர் சரஸ்வதியை தியானித்து அரசனின் சிம்மாசனத்துக்கு இணையாக ஆசனம் பெற்றார்.

18. "ஓம் ஸ்ரீமகா சரஸ்வதி சரணம்'' என்ற நாமத்தை மாணவ- மாணவிகள் தினமும் 9 தடவையும், வேலையில் இருப்பவர்கள் 18 தடவையும், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் 108 தடவையும் சொல்லி வந்தால் பொன், பொருள் சேர்க்கையுடன் புத்திக் கூர்மை உண்டாகும்.

19. நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர தினத்தன்று சரசுவதியை வணங்கினால் கல்விச் செல்வம் தடையின்றி கிடைக்கும்.

20. நவராத்தியின் போது கல்விக்கு அதிபதியான ஹயக்கிரீவரை வணங்க வேண்டியது அவ சியம். செங்கல்பட்டு அருகில் செட்டி புண்ணியம் என்ற கிராமத்தில் ஹயக்கிரீவருக்கு என்றே தனி விசேஷ கோவில் உள்ளது. உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்ëக இங்கு சென்று வணங்கலாம்.

21. காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சரஸ்வதிக்கு "சியாமளா'' என்று பெயர்.

22. திருவிடமருதூர் மகாசிங்கேஸ்வரர் கோவிலில் சரஸ்வதி தேவி 4 தலைகளுடன் வீனை ஏந்தி காட்சி அளிக்கிறார்.

23. திபெத் நாட்டில் சரஸ்வதியை `யங்சன்ம' என்ற பெயரிலும் வழிபட்டு மகிழ்கிறர்கள். பாலித்தீவுப்பகுதியில் கலங்கன் என்று சரஸ்வதியைத் துதிக்கின்றனர்.

24. சரஸ்வதி பூஜையன்று தொண்டை நாட்டுக் கோவில்களில் கம்பா நதி சிவ பூஜைக் காட்சி. என்ற அலங்காரம் செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் மாமரத்தடியில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து வைத்து காமாட்சி பூஜை செய்கிறாள். அப்போது இறைவன் அந்தப் பகுதியில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துகிறான். காமாட்சி திடுக்கிட்டு, வெள்ளத்தில் சிவலிங்கம் சிதைந்துவிடக் கூடாது எனக் கருதி அதைத் தட்டித் தழுவிக் காப்பாற்றுகிறாள். அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தனது உண்மை உருவத்தைக் காட்டி அன்னையை மணந்து கொள்கிறான். காமாட்சி கல்யாண வைபவத்தை நினைவு கொள்ளும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

25. ஆந்திர மாநிலத்தில் அலம்பூர் என்ற இடத்தில் நவப்பிரம்மா ஆலயம் உள்ளது. இங்கு ஒன்பது வகையான பிரம்மாக்கள் கோவில் கொண்டுள்ளனர். ஆனால் சரஸ்வதி ஒரே ஒரு ஆலயத்தில் எழுந்தருளியுள்ளாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum