Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அய்யா வைகுண்டர் போதனைகள்

Go down

அய்யா வைகுண்டர் போதனைகள் Empty அய்யா வைகுண்டர் போதனைகள்

Post by oviya Tue Dec 02, 2014 2:02 pm

தர்மத்தின் வழி நடப்பதையும், தர்மம் செய்வதையும், பிறரிடம் அன்பாக இருப்பதையும் வலியுறுத்தியவர் அய்யா வைகுண்டர். அவ்வாறு தர்மத்தின் வழி செல்வதால், மாயையான கலியை அழிக்க முடியும் என்று நம்பினார். அதையே தன்னைச் சார்ந்திருந்த மக்களுக்கு போதித்தார்.

‘கலியை அழிப்பதற்காக இறைவனே மனு அவதாரமாக தோன்றினார். அவரே அய்யா வைகுண்டர்’ என்று அகிலத்திரட்டு புராண வரலாறு கூறுகிறது. உருவ வழிபாடு அல்லாத கண்ணாடி தத்துவத்தையும், எல்லாத் தெய்வங்களும் நாராயணருக்குள் அடக்கம் என்ற ஓரிறை கோட்பாட்டையும் கொண்டது அய்யா வழி.

நீடிய யுகத்தில் குறோணி என்ற அரக்கன் தோன்றினான். அவனது பசிக்கு இந்த உலகம் இறையாகாமல் தடுக்க ஈசனும், மாயவனும் சேர்ந்து அவனை ஆறு துண்டுகளாக்கினர். இந்த ஆறு துண்டுகளும் ஒவ்வொன்றாக, ஒவ்வொரு யுகத்திலும் அரக்கர்களாக மாறி தேவர்களையும், உலக மக்களையும் துன்புறுத்தின.

நீடிய யுகம், சதுர் யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய ஆறு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களை நாராயணமூர்த்தி பல அவதாரங்கள் எடுத்து அழித்தார். 7–வதாக இப்போது நடந்து கொண்டிருப்பது கலி யுகம். அடுத்து இனி வரப்போவது தர்ம யுகம் ஆகும்.

கலியுகத்தில் மாயையாக தோன்றி மக்களின் மனதில் குடிபுகுந்து உலகை அழிக்க நினைத்தான் கலி என்ற அசுரன். கலி யுகத்தில் பிறப்பெடுத்த கலியன் ஈசனிடம், மும்மூர்த்திகளின் அடிப்படை சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய வரங்களை கேட்டு பெற்றிருந்தான்.

எனவே இந்த யுகத்தில் கலியனை நேரடியாக நின்று இறைவனால் அழிக்க முடியவில்லை. இதனை, ‘முன்னின்று கொல்ல மூவராலும் அரிது’ என்று அகிலம் கூறுகிறது. எனவே தான் இறைவன் கலியுகத்தில் மனு அவதாரம் பூண்டு, தவ முனியைப் போல் வாழ்ந்து மக்களிடம் பல போதனைகளை எடுத்துரைத்தார்.

அன்பு, பொறுமை, தர்மம் இவற்றை ஆயுதமாக மக்களுக்கு கொடுத்து அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, தர்மம் செய்பவர்களாக, சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்ச மற்றவர்களாக வடிவப்படுத்துவதன் மூலம் கலி தன்னாலேயே அழிந்துபோகும், தர்மயுகம் பிறக்கும் என்று அய்யா வைகுண்டர் நம்பினார்.

இதற்காகவே கொல்லம் ஆண்டு 1008 மாசி 20–ல், வைகுண்டர் திருச்செந்தூர் பதியில் கடலில் இருந்து வெளிப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பை அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் வடக்கு நோக்கி இருந்து கடுந்தவம் புரிந்தார்.

அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் இரண்டு வருடங்கள் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் தரையில் இருந்து மேலெழுந்த நிலையிலும் தவம் இருந்தார்.

அவர் தவம் செய்த இடமே வடக்கு வாசல் ஆகும். அய்யா வைகுண்டர் அடிமைத்தனத்தில் இருந்து சான்றோர் மக்களை விடுவிக்க போராடினார். அவர்களுக்கு பல போதனைகளை வழங்கினார்.

அதன்காரணமாக எதிரிகளால் பல துன்பங்களையும் அவர் அனுபவிக்க நேர்ந்தது. அந்த துன்பங்கள் வைகுண்டரின் சக்திக்கு முன்பு ஒன்றுமில்லாமல் தவிடு பொடியாகிப்போனது. வைகுண்டர் 1851–ம் ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum