Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசன பூ பல்லக்கு

Go down

மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசன பூ பல்லக்கு Empty மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசன பூ பல்லக்கு

Post by oviya Sun Dec 07, 2014 8:26 am

சித்திரை திருவிழாவில் அழகர் நேற்று காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் வண்டியூரில் எழுந்தருளினார். அங்கிருந்து புறப்பட்டு பல்வேறு மண்டபத்தில் காட்சி அளித்தார். காலை 11 மணிக்கு வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம் 3.30 மணிக்கு கருட வாகனத்தில் தோன்றிய அழகர், வைகை ஆற்றில் மண்டூக (தவளை) உருவில் தவம் இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் அளித்து அருள் பாலித்தார். அப் போது நாரைகள் பறக்க விடப்பட்டன. இவை கிழக்கு, தெற்கு திசை நோக்கி பறந்தன. இதுவே அழகர் மலையில் இருந்து மதுரைக்கு வந்த புராண வரலாற்று நிகழ்ச்சியாகும். இந்த திருக்காட்சியை காண அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்பு அழகர் வைகை கரை ஏறும் போது ஆலங்கட்டி மழை பெய்தது. வெயிலில் பரிதவித்த பக்தர்களுக்கு இந்த மழை குளிர்ச்சியை தந்தது. அழகர் பிற்பகல் 4 மணியளவில் அனுமார் கோவி லுக்கு வந்தார். அங்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக அங்கப்பிரதட்சணம் செய்தனர். பின்பு அங்கிருந்து புறப்பட்ட அழகர், இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் திருமஞ்சனம் ஆனார். இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடந்தது. முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகன அவதாரம் ஆகிய அவதாரங்களில் தோன் றினார். (தசாவதாரம் என் பது 10 அவதாரம் என்றா லும், 7 அவதாரங்களில் தோன்றும் காட்சிகளே நடைபெற்றது). பக்தர்கள் இரவு முழுவதும் விழித்தி ருந்து தசாவதார காட்சியை கண்டு வணங்கினர்.

ராமராயர் மண்டபத்தில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் புறப்படும் அழகர் மூங்கில்கடை, கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு செல்கிறார். நாளை (மே 9) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் தல்லாகுளம் கருப்பண்ணசாமி கோயில் சந்நிதியில் எழுதருளுகிறார்.
பின்பு அங்கிருந்து தல்லாகுளம் பெருமாள் கோயில், புதூர், கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, பொய்யக்கரைப்பட்டி வழியாக அழகர் மலை நோக்கி புறப்படுவார். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்திருந்த மண்டக படிகளில் மீண்டும் தோன்றி காட்சி அளித்தபடி செல் வார். அழகர் செல்லும் ஊர்களில் இரவு முழுவதும் திருவிழா, கேளிக்கை விளையாட்டுகள் நடைபெறும். 10ம் தேதி காலை 10.30 மணிக்கு அழகர் மலைக்கு சென்றடையும் வரை சித்திரை திருவிழா நடைபெறும்.

சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் வைகை ஆற்றில் இறங்கிய அழகர், நேற்று வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் சென்றார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கி விட்டு ஏராளமான பக்தர்களுடன் கருட வாகனத்தில் வலம் வந்தார். அடுத்த படம: சேஷ வாகனத்தில் கள்ளழகர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum