Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ராஜகுருவை சரணடைந்தால் பரிபூரண வாழ்வு நிச்சயம்

Go down

ராஜகுருவை சரணடைந்தால் பரிபூரண வாழ்வு நிச்சயம் Empty ராஜகுருவை சரணடைந்தால் பரிபூரண வாழ்வு நிச்சயம்

Post by oviya Sun Dec 07, 2014 9:11 am

ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே வாழ்வை நடத்துகின்றது.

‘அப்பன் எத்துனை அப்பனோ
அம்மை எத்துனை அம்மையோ
இன்னும் எத்துனை பிறவியோ’

-என ஒரு சித்தர் ஏங்குவதைக் கொண்டு பல பிறவிகள் உண்டு என அறியலாம். பிறந்தபின் நமது வினைகளே நம் வாழ்க்கைப் பாதையை அமைக் கின்றன. ஒருவன் புத்திமான் என்றும் கீர்த்திமான் என்றும் பலவான் என்றும் செல்வ சீமான் எனப் பேசப்படுவதெல்லாம் அவனது கர்ம வினைகளை ஆதாரமாகக் கொண்டே! கர்ம வினைகளைக்கூட பிரார்த்தனை, தியானம், ஜபம், தர்மம் போன்றவற்றால் மாற்றி அமைக்கலாம். அப்படி பிரார்த்தனை களை செய்ய பண்டைய காலத்தில் பற்பல கோயில்களை முன்னோர்கள், சித்தர் பெருமக்களின் ஆலோசனைப்படி கட்டி தந்துள்ளார்கள்.

வியாழனால் திருமணம், நல்ல புத்திரர்கள், மகிழ்ச்சி, தொழில் மேன்மை, ஆரோக்யம் போன்றன கண்டிப்பாக கிடைக்கும். சப்த ரிஷியருள் ஒருவர் எனப் புகழ் பெற்றவர் வசிஷ்ட மகரிஷி. ரகு குலத்திலகராம் தசரத மகாராஜனின் குல குருவானவர் கட்டிய தொழுதேத்திய, சிவபெருமான் கோயில் கொண்ட, வசிஷ்டேஸ்வர சுவாமி வீற்றிருக்கும் தென்னன் குடித்திட்டை பூலோகத்தில் மிகப் புண்ணிய க்ஷேத்திரம். ஒவ்வொருவரும் தொழவேண்டிய புண்ணிய ஆலயம்.
யுக முடிவில், தண்ணீரால் பூமி சூழப்பட்டபோது, ஒரேயொரு இடம் மட்டும், தண்ணீரில் மூழ்காது திட்டாக நின்றமையால், திட்டை என்று பெயர் பெற்றது.

காவிரி நதியின் தென்புறத்தில் குடிகொண்டமையால் ‘தென்குடித் திட்டை’ என்ற பெயர் உண்டாயிற்று. சுயமாக சிவன் தோன்றி நீரினால் சேதம டையாது நின்றமையால், சுயம்பூதேஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிரம்ம தேவரும் மகாவிஷ்ணும் போற்றி தொழுத புண்ணிய மூர்த்தி.
இடைக்காட்டு சித்தர்,

‘‘அயனும் மாலுமாராதித்த சுயம்பூதனிவன்
தம்மை தொழுவார் பிறவாரே’’ - என்கிறார்.

இங்குள்ள அம்பிகை, உலக நாயகி அம்மன். மகாவரப்பிரசாதி. பெண்கள் சுமங்கலிகளாய் வாழ அருள் செய்பவள்.

‘‘அன்னை உருபல கோடி கொண்டு
அம்பலமது பல கண்டு வீற்றிருக்க
அனைத்து மொன்றாகி உலகுதனக்கே
அமர்ந்து கருணையாளும்
பூலோக நாயகி தமை தஞ்சமடைய
கிட்டாதேது இயம்பு’’

-என்கிறார் வசிஷ்டர். பற்பல உருவங்களில், பெயர்களில் அன்னை சக்தி பற்பல கோயில்களில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றார். ஆனால் அனை த்து சக்திகளும் ஒரே உருவாகி உலகநாயகி என்று பெயர் பூண்டு கோயில் கொண்டது இங்குதான் என்கிறார், ரிஷி. இந்த அன்னையை சுகந்தகுந்த ளாம்பிகை என்றும் அழைப்பர். இந்த கோயிலின் கூரை, தூண், தரை, மண்டபம் யாவுமே கற்கள். விமானத்தில் இருந்து ஒரு நாழிகைக்கு அதாவது இருபத்து நான்கு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சிவபெருமான் மீது விழுகிறது. நீர் பிடிப்போ, நீர் வரத்துக் குண்டான வழியோ கூரையில் இல்லை. ஆண்டு முழுவதும் இப்படி நீர் சொட்டும். வசிஷ்ட மகரிஷியின் வாஸ்து யோசனைப்படி, மயன் கட்டிய ஆலயம்இது. இதனை பூலோக கயி லாயம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்..

கொங்கண சித்தரோ,
‘‘கயிலாயமதனை கண்டோமே
தென்னந்திட்டை தன்னிலே.
காந்தகல்லாலாகாயத்து அண்டத்தை
நீராக்கி, சுயம்பூதருக்கு கங்காபி
சேகஞ் செய்தனன் வசிஷ்டனுமே’’

-என்கிறார். அதாவது சந்திரகாந்தக்கல், சூரிய காந்தக்கல் என்று கற்களில் பற்பல உண்டு. சூரிய காந்தக்கல்லும் சந்திர காந்தக்கல்லும் மயிரிழை தள்ளி நிற்க, ஏற்படும் காந்த அலைகள், ஆகாயத்தில் காற்றில் உள்ள நீர்ப் பசையை உறிஞ்சி, குளிரச்செய்து, நீராக்கி பின் மூலவர் மேல் விழும் வண்ணம் வசிஷ்ட மகரிஷி செய்துள்ளார். ஒரு நாழிகையில் மட்டும் ஒரு சொட்டு நீர் விழும் வகையில் வடிவமைத்தமைக்கு காரணம் உண்டு. சந்திரப கவானும் சூரிய பகவானும் இமைக்கும் நேரம், ஒரு நாழிகை நேரம். இந்த நேரத்தை கணக்கிட்டே ஒரு நாளைக்கு அறுபது நாழிகை என்றனர். ஒரு நாளைக்கு அறுபது சொட்டு நீர் சிவபிரான் மேல் விழும் வண்ணம் வடிவமைத்தார் சூரிய குல குரு.

இங்கு குருபகவான் கோயில் கொண்டு சிவபூஜை புரிந்து வருவது மிகவும் விசேஷம். திரு ஆலங்குடியில், தென்புறம் பார்த்து வீற்றிருக்கும் தட்சிணா மூர்த்தியை குரு என்று போற்றுகின்றோம். இந்தப் பூலோகத்தில், குருபகவான், தனக்கென தனி சந்நதியும் விமானமும் கொண்டு பூலோக நாயகியாம், உலக நாயகி அம்மன் அருகில், சுயம்பூதேஸ்வரரையொட்டி நின்ற கோலத்தில் அருள்பரிபாலிக்கின்றார். இவரை ‘ராஜ குரு’ என்கின்றார், அகத்தியரும் புலிப்பாணி சித்தரும்.

‘‘கண்டோம், காட்சிக்கினியன
கண்டோம். தனித்தே நின்ற கோலங்
கண்டோம். வியாழனவன் இக்கலியில்
அருளாட்சி செய்யக் கண்டோமே’’
- என்கிறார் புலிப்பாணியார்.
அகத்தியரோ,
‘‘காத்து நூலேந்திய அரசனிவன்
வியாழனிவனை மன்னனென்றே
ஏத்தி தேவருந் தொழுதேத்த
தேவர்க்கரசுந் தொழுமிவ் வாசனை
வள்ளிமணாளனும் பைரவனும் பிருதி
யொரு மந்தக் காலனு மேத்தினனே’’
- என்கிறார்.

‘‘வியாழனிவனை தொழுதாரை
யாம் கண்டு மொழிகுவஞ் சத்யமே
பரசானும் தேவர்கரசுஞ் சேசன் கூட
பாசு தீர்த்தமாடி தொழ நின்றனரே’’

-என்ற அகத்தியர் கூற்றில் இருந்து யமதர்மனும் தேவேந்திரனும் பரசுராமனும் ஆதிசேஷனும் சுப்பிரமண்ய சுவாமி வள்ளி-தேவயானையுடனும் பைரவமூர்த்தியும் சூரியன், சனிபகவானும் தொழுது நின்றதை அறிய முடிகிறது. அவர்கள் யாவரும் அங்குள்ள பாசு தீர்த்தத்தில் நீராடியே குருபகவானை தொழுதனர். நான்கு கரங்களுடன், கையில் புத்தகத்தை பிடித்தபடி குருபகவான், ராஜ குருவாய் நின்று அருள்பாலிக்கின்றார். இத்துணை வானோர்கள் தொழுதேத்திய மூர்த்தியை நாமும் தொழுதால், முடியாதது எதுவுமே இல்லை.

‘‘சாதிக்கலாமெதுவுமே - ராச குரு
சரணமென்று சொல்லியே ஆண்டு
முதல் முழுமதியன்று விரதமொரு
ஆத்ம சுத்திகூடி நிற்பார் தமக்கே’’.

பல கோயில்களில் தொழுதும் எந்த பிரயோஜனமும் இல்லை என ஏங்குவோரை நாம் கண்டதுண்டு. ஏன் பலன் இல்லை என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார், கொங்கணச் சித்தர்:

‘‘அரசனாமவன் வியாழனென
சதுர்புயமதனில் நூலெடுத்து நிற்க
தனித்தொரு விமானங் கொண்டான்
தமை சரணமென யண்டாதவர்க்கு
சோர்வு தட்டுந்தானே’’.

ராஜ குருவை சரணம் செய்யாதவருக்கு பரிபூர்ண வாழ்வு சேர்வது கடினம். வாழ்வு முழுமை அடைய, ராஜ குருவை சரணம் செய்தல் நன்மை தரும். சித்ரா பௌர்ணமியன்றோ, குருபெயர்ச்சி அன்றோ, கடலையில் பதார்த்தம் செய்து, படையல் இட்டு, மஞ்சள் வஸ்திரம் தரித்து அக்கறையுடன் ஆரா தனை செய்தால், நோய்கள் எதுவும் அண்டாது. குறிப்பாக மாரடைப்பு நோய் வாராது. வந்தாலும் பாதிப்பு எதுவும் நேராது. ராஜ குரு காப்பான். ஆயுள் நீளும். திருமணம் மனம்போல் நடக்கும். நல்ல நேர்த்தியான, வீடும், வாகனமும் அமையும். தொலைதூர பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை தரும். பயம் முற்றிலும் விலகும். துர்சுவப்பன பலன் கருகும். கும்பகோணம்- தஞ்சாவூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum