Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்

Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம் Empty மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்

Post by oviya Sun Dec 07, 2014 10:27 am

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்ற நிகழ்ச்சி காலை 10.46 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியை அடுத்து சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருள சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் சுவாமியும், அம்மனும் தினமும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில்
வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

பட்டாபிஷேகம்

பட்டாபிஷேகம் நிகழ்ச்சி 21ம் தேதி நடைபெறுகிறது. பட்டாபிஷேக நாளில் மீனாட்சி அம்மனுக்கு இரவு 7.35 மணி முதல் 7.59 மணிக்குள் பட்டம் சூட்டி, செங்கோல் வழங்கப்படுகிறது.

திருக்கல்யாணம்

பட்டாபிஷேக நிகழ்ச்சியை அடுத்து 22-ந் தேதி மாசி வீதிகளில் திக்கு விஜயம் நடக்கிறது. இதனையடுத்து 23ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் காலை 8.17 மணி முதல் 8.41 மணிக்குள் நடக்கிறது. திருமணம் முடிந்து சுவாமியும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண மண்படத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

தேரோட்டம்

திருக்கல்யாண நிகழ்ச்சியை அடுத்து 24ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

தேரோட்டம் நிகழ்ச்சியை அடுத்து 25ம் தேதி சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. அழகர்கோவிலில் இருந்து 23-ந் தேதி மாலை சுந்தரராஜ பெருமாள், கள்ளர் வேடத்தில் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார். சித்திரை விழாவை முன்னிட்டு மதுரை நகருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum