Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம்

Go down

சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம் Empty சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம்

Post by oviya Sun Nov 30, 2014 2:06 pm

திருவனந்தபுரம், நவ.19–

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16–ந் தேதி திறக்கப்பட்டு உள்ளதால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.

நேற்று சபரிமலையில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக திரள்வதால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய கோவில் நடை நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கே திறக்கப்பட்டது.

பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டது. மேலும் மாலை 4 மணிக்கு பதில் 3ž மணிக்கே நடை திறக்கப்பட்டது. இரவும் 11 மணிக்கு பதில் 11.40 மணிக்குதான் கோவில் நடை அடைக்கப்பட்டது.

நடை அடைக்கப்பட்ட பிறகும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் தொடர்ந்து காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் குப்பைகள் சேர்ந்து சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து ‘புண்ணியம் பூங்காவனம்’ என்ற திட்டத்தை தேவசம் போர்டும், கேரள போலீஸ் துறையும் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று சபரிமலையில் நடந்தது. கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் இதை தொடங்கி வைத்தார். தேவசம் போர்டு ஊழியர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் சபரிமலை சன்னிதானம் உள்பட சுற்றுப்பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் இந்த புதிய தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் தெரிவித்தார். சபரிமலையை தூய்மையாக பராமரிக்க உதவவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீசன் காலம் முடியும் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
» ஆளும் கட்சியின் மற்றுமொரு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது
» புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum