Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்

Go down

நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர் Empty நினைத்ததை நிறைவேற்றும் பரமபதநாதர்

Post by oviya Wed Dec 10, 2014 1:39 pm

பன்னிரு ஆழ்வார்கள் பாடிப் பரவிய திருமால் ஆலயங்கள் ‘திவ்ய தேசங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இவற்றில் 106 தலங்கள் இப்பூவுலகில் அமைந்துள்ளன. இந்த 106 திவ்ய தேசங்களையும் தரிசித்த வணக்கத்திற்குரிய பக்தர்கள் நம்மில் பலர் உண்டு. திருமால் யோக நித்திரையில் ஆழ்ந் துள்ள 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடலையும் பரவாசுதேவராக அருள்பாலிக்கின்ற 108வது திவ்ய தேசமான வைகுண்டம் என்ற பரமபதத்தையும் பக்தர்களால் தரிசிக்க முடியாது. ஆனால், பள்ளிகொண்ட பரமனாகவும், பரவாசுதேவனாகவும் அர்ச்சாவதார மூர்த்தியாக மகாவிஷ்ணு அருள்பாலிக்கி ன்ற தலங்கள் பல உள்ளன.

அவற்றில் ஒன்றுதான் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில், காவேரிப்பாக்கத்திற்கு அருகில் உள்ள திசைமுகஞ்சேரி. இத்தலத்தில் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக பரவாசுதேவராக பரமபதநாதர் என்ற திருநாமத்தோடு காட்சி தருகிறார். சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம்-சோளிங்கர் சாலையில், 7 கி.மீ. தொலைவில் இந்த அழகிய திசைமுகஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திசைமுகஞ்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சோளிங்கர் திவ்ய தேசம் உள் ளது. இந்த ஊர் தியாமுகஞ்சேரி என்று வழங்கப்பட்டு, பிறகு மருவி தற்போது சேரி அய்யன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

700 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தை மக்கள் கோதண்டராம சுவாமி ஆலயம் என்றழைத்தாலும், இங்கு எழுந்தருளியிருக்கும் பிரதான மூர்த்தியாக பரமபதநாதரே விளங்குகிறார். மும்மூர்த்திகளில் சிருஷ்டிகர்த் தாவான பிரம்மாவின் நான்கு முகங்களும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கின்றன. நான்கு திசைகளை நோக்கியிருக்கும் இந்த நான்கு திருமுகங்களும் எப்பொழுதும் நான்கு வேதங்களை ஓதிய வண்ணம் உள்ளன. வேதங்களை ஓதுவதன் மூலம் ஜீவராசிகளைப் படைக்கும் சக்தியை பிரம்மா பெற்றதாக ஐதீகம். திசைக்கு ஒரு முகமாக நான்முகனாகத் திகழ்கின்ற பிரம்மனுக்கு அதனால் ‘திசைமுகன்’ என்ற பெயர் ஏற்பட்டது.

ஒருமுறை வேதங்களின் பொருள் பற்றி ஐயம் ஏற்பட, பிரம்மா ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து கடுந்தவம் மேற்கொண்டார். திசைமுகனான பிரம்மா இவ்வாறு தவம் மேற்கொண்ட இடமே திசைமுகன் சேரி. பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த திருமால்தான் பரமபதத்தில் இருப்பது போன்றே பிரம்மாவுக்குக் காட்சி தந்து, வேதங்கள் பற்றிய அவர் ஐயங்களைப் போக்கி வேத ரகசியங்களை எடுத்துரைத்தார். பிரம்மாவின் வேண்டு கோளுக்கிணங்க திருமால் இந்த திசைமுகன் சேரியில் பரமபதத்தில் காட்சி தருவது போன்றே பரவாசுதேவராக பக்தர்களுக்குக் காட்சி தந்து அரு ள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

ஆலயத்திற்கு முன்பாக உள்ள வரவேற்பு வளைவில் நடுநாயகமாக சங்கு, சக்கரம், திருநாமமும் இருபுறங்களில் சிறிய மற்றும் பெரிய திருவடிகளும் உள்ளன. ஆலய முகப்பின் மேல், நடுவே பரமபதநாதர், இருபுறங்களில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சுதைச் சிற்பமாகக் காட்சி அளிக்கிறார். மகா மண்டபத்தின் வலப்புறம் தாயார், கனகவல்லி என்ற திருநாமத்தோடு பத்மாசனத்தில் காட்சி தருகிறாள். பின்னிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளோடு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்ற தாயார் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கிறார்.

கருவறையில் மகாவிஷ்ணு பரமபதநாதராக ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஆதிசேஷன் குடைபிடிக்க, நடு நாயகமாக வீற்றிருக்கும் பரமபதநாதர், நான்கு கரங்களுடன், பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் துலங்க, முன் வலக்கையை மடித்து வைத்துள்ள வலது முழந்தாளின் மீது வைத்து, இடக்கையைத் தரையில் ஊன்றி காட்சி தருகிறார். பரமபதநாதனின் இருபுறங்களிலும் ஸ்ரீதேவி தாமரையையும், பூதேவி அல்லி மலரையும் ஏந்தி அழகுறக் காட்சி தருகின்றனர்.

பரமபதநாதன், ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திருவெட்டெழுத்தான அஷ்டாட்க்ஷர மந்திரத்திற்குரிய தியான மூர்த்தியாக வழிபடப்படுகிறார். எனவே இந்தத் திசைமுகஞ்சேரி பரமபதநாதர் சந்நதி முன்பாக பக்தர்கள் பெருமாளை நோக்கி அமர்ந்து, மன ஒருமைப்பாடோடு, 108 அல்லது 1008 முறை அஷ்டாட்க்ஷர மந்திரத்தை ஓதினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது எண்ணற்ற பக்தர்களின் அனுபவபூர்வ நம்பிக்கை. பரமபதநாதர் சந்நதியின் இடப்புறம் சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமாக இராமச்சந்திர மூர்த்தி சந்நதி அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வைகுண்டநாதர், கனகவல்லித் தாயார் மற்றும் ராம, லட்சுமண, சீதா, ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கோபாலகிருஷ்ணன் உற்சவ விக்கிரகங்களும் தனித்தனி சந்நதிகளில் உள்ளன.

பரமபதநாதருக்கு எதிரே உள்ள பெரிய திருவடியான கருடாழ்வார் பிற ஆலயங்கள் போன்று அஞ்சலி ஹஸ்தத்தோடு, நின்ற நிலையில் காட்சி தராமல், ஒரு காலை மண்டியிட்டு, மற்றொரு காலை பின்புறம் வளைத்து, கருட வாகனம் போன்றே காட்சி தருவது இத்தலத்தின் சிறப்பாகும். மகாவிஷ்ணு பரமபதநாதராகவே இத்தலத்தில் வீற்றிருப்பதால், இங்கே சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசி அன்றும் மற்ற சிறப்பு நாட் களிலும் பிரதான வாயில் வழியாகவே பெருமாள் புறப்பாடு கண்டருளுகிறார். ஆலயத்திற்கு வெளியே சிறிய திருவடியான அனுமனுக்குத் தனிச்சந்நதி உள்ளது.

இந்த ஆலயத்திற்கான திருப்பணிகளை மேற்கொண்டபோது, முதலில் சிறிய திருவடியின் திருப்பணியை முழுமையாக முடித்தபின்னரே பிற திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாகக் கூறுகின்றனர். இந்த அனுமன் மிகவும் வரப்பிரசாதி. திசைமுகஞ்சேரி கிராமத்திற்கு அருகிலேயே காவேரிப்பாக்கம், வேகவதி (பாலாறு) நதியின் கரையில் அமைந்துள்ளது திருப்பாற்கடல் திருத்தலம். இங்கு பிரசன்ன வேங்கடேசர் ஆலயமும் அதையொட்டியே ரங்கநாதர் ஆலயமும் ஒரே வளாகத்திற்குள் உள்ளன. இந்த இரட்டைக் கோயில்களை தரிசிப்பது, 107வது திவ்யதேசமாகக் கருதப்படும் திருப்பாற்கடல் ரங்கநாதரைத் தரிசிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. பிரசன்ன வேங்கடேசப் பெரு மாள் ஆலயத்திற்கு வடபுறம் ரங்கநாதர் ஆலயம் உள்ளது. இங்கு ரங்கநாதர் மரக்காலைத் தலையணையாக வைத்து சேவை சாதிக்கிறார்.

சேரி அய்யன்பேட்டை என்ற திசைமுகஞ்சேரி பரமபத நாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பங்குனி உத்திரம், ராமநவமி, சீதா கல்யாணம், வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு ஊஞ்சல் சேவை மற்றும் திருவிளக்கு பூஜை போன்றவை நடைபெறுகின்றன. காவேரிப்பாக்கம் திசைமுகஞ்சேரியில் (சேரி அய்யன்பேட்டை) உள்ள பிரம்மா பூஜித்த பரமபதநாதரையும், அருகிலேயே உள்ள திருப்பாற்கடல் ரங்கநாதரையும் தரிசிக்கும் பக்தர்களுக்கு பூவுலகிலேயே 107 மற்றும் 108 திவ்ய தேசங்களான பரமபதம், திருப்பாற்கடலைத் தரிசித்த பாக்கியம் கிட்டுகிறது. திசைமுகஞ்சேரி என்ற சேரி அய்யன்பேட்டை கிராமம், வழி காவேரிப்பாக்கம், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்-632508 என்பது ஆலயத்தின் முகவரி. தொடர்புக்கு: தொலைபேசி எண்கள்: 98426 19900 மற்றும் 044-22237536.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum