Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Go down

பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் Empty பாபநாசம் பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Post by oviya Sat Dec 06, 2014 11:13 am

பாபநாசம் பி.டி.ஓ. காலனியில் பாலசுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜை நடைபெற்றது.

மேளம், கொம்பு வாத்தியம் முழங்க கடநீர் எடுத்துசெல்லப்பட்டு விமான கலசத்திற்கும், மூலவர் பாலவிநாயகர், காசி விஸ்வநாதர், துர்க்கை, காலபைரவர், பாலசுவாமிநாதர் (புதிய திருமேனிகள்) கும்பநீராட்டு நடந்தது. பின்னர் அருளார் அமுதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

செந்தமிழ் முறையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் குடந்தை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் குடந்தை திருவருள் திருவடிக்குடில் சுவாமிகள், தீர்த்தமலை மடாதிபதி வைத்தியலிங்க சுவாமி என்ற பசுமை சித்தர், தஞ்சாவூர் பன்னிரு திருமுறை மன்றத்தின் செயலாளர் சரவணக்குமார், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பாலசுந்தரம்,

பாபநாசம் மாஜிஸ்திரேட்டு நாகராஜன், சிறைத்துறை கண்காணிப்பாளர் உமாபதி, ஸ்தபதி ரமேஷ்குமார், விழாக் கமிட்டி நிர்வாகிகள் சிவராமகிருஷ்ணன், சுப்ரமணியன், சவுந்தர்ராஜன், மற்றும் அப்பர் சேவாலய நிர்வாகிகளும், கிராமவாசிகளும், திரளான பக்தர்களும், அனைத்து வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், அனைத்து அரசு அலுவலக துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.

கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஆன்மீகச் சொற்பொழிவாளர் ந.அரியஅரசபூபதி தொகுத்து வழங்கினார். புதிதாக செய்யப்பட்ட மூஞ்சுறு வாகனத்தில் உற்சவர் திருவீதியுலா நடந்தது. இரவு உலக நலனுக்காக திரளான பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» புன்னம் சத்திரம் சிவ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» வண்ணாங்குளம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
» சிவகாசி அருகே விநாயகர்–காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
» கோபி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
» வேட்டமங்கலம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum