Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது

Go down

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது Empty அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது

Post by oviya Sun Nov 30, 2014 1:56 pm

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 26–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. காலையில் விநாயகர், சந்திர சேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நடை பெறும்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் அடுத்த மாதம் 2–ந் தேதி நடக்கிறது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் அடுத்த மாதம் 5–ந் தேதி ஏற்றப்படுகிறது. அன்று காலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.

கொடியேற்றத்துக்கு முன்பாக கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி முதல் நாளான நேற்று துர்க்கையம்மன் உற்சவம் நடந்தது.

இதனை முன்னிட்டு சின்னக்கடைத்தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாண வேடிக்கையுடன் காமதேனு வாகனத்தில் அம்மன் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து இன்று இரவு பிடாரியம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடக்கிறது.

கார்த்திகைதீப திருவிழாவை முன்னிட்டு 4–ம் நாள் காலையில் சாமி வீதிஉலாவரும் நாக வாகனத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கமுலாம் பூசப்பட்ட நாகவாகனத்தின் கரிக்கோலம் நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
» அருணாசலேஸ்வரர் கோவில்: கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் நடப்பட்டது
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழா பந்தக்கால் முகூர்த்தம் 6-ந் தேதி நடக்கிறது
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum